Showing posts with label SriLanka. Show all posts

 


சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் 3 மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறிய லில் வைக்கப்பட்டுள்ள 13 பேரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 


இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்துவதற்கு திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் இன்று இடைக்கால தடைவிதித்துள்ளது.

 

இதன்படி எதிர்வரும் 27ஆம் திகதி வரை தேசிய மாநாட்டை நடத்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட உறுப்பினர் ஒருவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஜெப்ரி அழகரட்ணம் முன்னிலையாகியிருந்தார்.

 

இதேவேளை, தேசிய மாநாட்டுக்கு தடைகோரி யாழ்ப்பாண நீதிமன்றத்திலும் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை தற்போது நடந்து வருகிறது.

 


(எஸ்.அஷ்ரப்கான்)


சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தின் ஐம்பெரு விழா கடந்த திங்கட் கிழமை (05) இடம்பெற்றது. 

இதில் கணிதப்பூங்கா திறத்தல், சிறுவர் பூங்கா திறத்தல், வைபவ ரீதியான உயர்தர கலைப்பிரிவு ஆரம்பித்தல், பாடசாலை உத்தியோகபூர்வ இணையத்தளம் ஆரம்பித்தல் மற்றும் க.பொ.த சாதாரண தரப்பரீட்சை 2022(2023) முடிவுகளின் அடிப்படையில் சித்தியடைந்த மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களை கௌரவித்தல் என்பன இவ் ஐம்பெரும் விழாக்களில் இடம்பெற்றிருந்தது. 

பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். சைபுதீனின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மதிப்புக்குரிய கல்முனை கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹ்துல் நஜீம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்கள், அத்துடன் கௌரவ அதிதிகளாக கல்முனை கல்வி கல்முனை கல்வி வலய நிருவாகத்துக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபிர் அவர்களும் கல்வி அபிவிருத்திக்கு பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி. விB. ஜிஹானா ஆலிப் அவர்களும் கணித பாடத்துக்கு பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளரும் காரைதீவுக் கோட்டத்துக்கான கோட்டக் கல்விப் பணிப்பாளருமான ஏ. சஞ்சீவன் அவர்களும் கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் நிருவாக உத்தியோகத்தர் ஏ.எம். ஆரிப் அவர்களும் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் பொறியியலாளர் எம்.ஐ.எம். றியாஸ் அவர்களும் அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் செயலாளர் இஸ்ஸத் அவர்களும் பாடசாலை ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

இந்நிகழ்வில் சிறந்த பெறுபேறுகளைக்பெற்றுக் கொண்ட மாணவர்களுக்கு கையில காசு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பாடசாலை விஞ்ஞான ஆய்வு கூட உத்தியோகத்தர் ஹாரூன் அவர்களால் பணப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


மெல்பேர்ணிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL 605 தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்பட்ட சிறிது நேரத்தில் மெல்போர்ன் விமான நிலையத்திற்கு பாதுகாப்பாகத் திரும்பியது



 


நூருல் ஹுதா உமர்


உலக பல்வலி தினத்தையொட்டி "வெற்றிலை, புகை பிடித்தலை தவிர்த்து வாய்ப்புற்று நோயினைத் தடுப்போம்" எனும் தொனிப்பொருளில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குற்பட்ட ஆலையடிவேம்பு கண்ணகிபுரம் கிராமத்தில் வசித்து வருகின்ற மக்களின் வாய்வழி புற்றுநோய் ஓ.பி.எம்.டி (OPMD) ஸ்கிரீனிங் திட்ட நடமாடும் இலவச பல் வைத்திய சேவையுடன் விழிப்புணர்வு நிகழ்வு நேற்று (09) முன்னெடுக்கப்பட்டது.

கல்முனை பிராந்திய பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகிலா இஸ்ஸதீனின் அறிவுரை மற்றும் ஆலோசனைக்கமைவாக, கல்முனை பிராந்திய பல் வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச்.எம்.சறூகின் தலைமையில் கீழ், ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் திருமதி ஏ.பிரசாந்தினி மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட குழுவினர் இச்சேவையை முன்னெடுத்தனர்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை க்கு உட்பட்ட கிராமங்களில் வாழ்கின்ற மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும் அவர்களின் ஆரோக்கிய வாழ்வை உறுதிப்படுத்தும் வகையில் இவ்வாறான இலவச மருத்துவ நடமாடும் சேவைகளையும், பொதுமக்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்வுகளை கடந்த பல வருடங்களாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை முன்னெடுத்துச் வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 



பல்லேகலேயில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானை 42 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் இலங்கை வீரர் என்ற பெருமையை பதம் நிஸ்ஸங்க பெற்றார்.


 மாவீரர் நினைவேந்தலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பில் வைத்து கைது செய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் உள்ளிட்ட இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

 


மட்டக்களப்பில் விவசாயிகளிடம் கள்ளத் தராசின் அரசாங்கத்தின் அனுமதியளிக்கப்படாத தராசின்) மூலம் நெல் கொள்வனவில் ஈடுபட்டுவரும் வியாபாரிகளுக்கு எதிராக அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நேற்று புதன்கிழமை (7) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் கள்ளத் தராசின் மூலம் மோசடியாக நெல் கொள்வனவு செய்துவந்த 8 வியாபாரிகளின் தராசுகளை கைப்பற்றியதுடன் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அளவீட்டு திணைக்கள அம்பாறை மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது நெல் அறுவடை இடம்பெற்றுவரும் நிலையில் விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்வனவு செய்துவரும் வெளிமாவட்ட வியாபாரிகள் தராசில் மோசடி செய்து விவசாயிகளிடம் நெல்லை கொள்வனவு செய்துவருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி முரளிதரனின் கவனத்திற்கு பாதிக்கப்பட்ட விவசாயிகள் கொண்டுவந்தனர்.
இந்த நிலையில் வயல்பகுதிகளில் நெல் கொள்வனவில் ஈடுபட்டுவரும் வியாபாரிகளின் தராசை பரிசோதனை செய்யமாறு அரசாங்க அதிபர் அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்கள பணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பித்தார்
இதனையடுத்து சம்பவதினமான நேற்று புதன்கிழமை மாவட்ட பணிப்பாளர் வி.விக்கினேஸ்வரன் தலைமையில் பரிசோதனை உத்தியோகத்தர்களான எம்.கிருஷ்ணானந்தன், எம்.ஆர்.எம்.றைஸ்கான் உள்ளிட்ட அதிகரிகள் செங்கலடி பிரதேசத்திலுள்ள வயல் பகுதிகளில் லொறிகளில் நெல் கொள்வனவு செய்துவரும் வியாபரிகளின் தராசுகளை பரிசோதனை செய்தனர்.
இதில் அரச அனுமதியற்ற 5 தராசுகளும் அளவையில் மோசடி செய்யப்பட்ட 3 தராசுகளுமாக 8 தராசுகளை கைப்பற்றியதுடன் 8 வியாபரிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் கைப்பற்றப்படட தராசுகளை திணைக்களத்திற்கு கொண்டுவந்தனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட தராசுகளை அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்திற்கு அரசாங்க அதிபர் நேரடியாக சென்று பார்வையிட்டதுடன் தொடர்ந்தும் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அவர்களுக்கு பணித்துள்ளார்.

 


மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் நாடாளுமன்ற வெற்றிடத்திற்கு தெரிவான, எல்.கே.ஜகத் பிரியங்கர இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.


பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைமைத்துவ சபையின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

​பொதுஜன ஐக்கிய முன்னணியின் யாப்பு மாற்றம் தொடர்பில் நேற்று(06) இடம்பெற்ற நிறைவேற்றுக்குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப்பேச்சாளர் திஸர குணசிங்க தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கதிரை சின்னத்தில் பரந்த கூட்டணியுடன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் களமிறங்கவுள்ளது.

பொதுஜன ஐக்கிய முன்னணியின் யாப்பு திருத்தத்தின் பிரகாரம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு தலைமைத்துவ சபையில் 25 வீத பிரதிநிதித்துவமும் செயற்குழுவில் 50 வீத அதிகாரமும் கிடைக்கும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப்பேச்சாளர் கூறினார். 

பொதுஜன ஐக்கிய முன்னணியின் புதிய உறுப்பினர்களை எதிர்வரும் 22 ஆம் திகதி தெரிவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதற்கமைய, கட்சியின் பொதுச் செயலாளராக புதிய உறுப்பினரொருவர் தெரிவு செய்யப்படவுள்ளார்.

 


( காரைதீவு சகா)


ஒரு பாடத்திற்கு நான்கு இடங்களில் டியூஷன் செல்வதால்  எந்த பிரயோசனமும் இல்லை. சுயகற்றல்(self learning) ஒன்றே முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் .

இவ்வாறு காரைதீவில் இடம் பெற்ற கல்விச் சாதனையாளர் பாராட்டு விழாவில் உரையாற்றிய கிழக்கு பல்கலைக்கழக தொழில்நுட்பபீட பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி தவநாயகம் மதிவேந்தன்  தெரிவித்தார்.

காரைதீவு  ரக்ஸ் மற்றும் அஸ்கோ அமைப்பின் வருடாந்த கல்விச்சாதனையாளர் கௌரவிப்பு விழா நேற்று (3)  சனிக்கிழமை  காரைதீவு விபுலானந்தா கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
 அமைப்பின் செயலாளர் ச.நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக தொழில்நுட்பபீட பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி தவநாயகம் மதிவேந்தன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

காரைதீவு அஸ்கோ மற்றும் ரக்ஸ் அமைப்பின் ஸ்தாபகர் கனடாவில் வதியும் வைத்திய கலாநிதி டாக்டர் அருளானந்தம் வரதராஜா வின் ஏற்பாட்டில் ஏனைய புலம்பெயர் அனுசரணையாளர்களின் பங்களிப்புடன் இப்பாராட்டு பல வருடங்களாக நடைபெற்று வருகிறது.

விழாவில் நட்சத்திர அதிதிகளாக கிழக்கு மேலதிக மாகாண கல்விப்பணிப்பாளர் எஸ். புவனேந்திரன், காரைதீவு பிரதேச செயலாளர் சிவ ஜெகராஜன், பொதுச் சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் நடேசன் அகிலன், பிரதம பொறியியலாளர் ப.இராஜமோகன், உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி. சகா தேவராஜா, பொறியியலாளர் என்.பிரேமகாந்தன் , வைத்திய அதிகாரி டாக்டர் எல்.லேணுசா ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.
விஞ்சைமிகு அதிதிகளாக காரைதீவு இலங்கை வங்கி முகாமையாளர் திருமதி யாழினி மோகனகாந், அதிபர் எஸ்.மணிமாறன் ஆகியோரும், வித்திய அதிதிகளாக ஆசிரியர்களான ரி.தெய்வீகன், எஸ்.தேவகுமார்,கே.ருத்ரகுமார்,ஈ.சங்கீத், திருமதி ஜே.சந்திரசேகரம் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.

அவர் மேலும் தெரிவிக்கையில்.

உயர்தரம் கற்கும் காலத்தில் நாள் ஒன்றுக்கு நான்கு மணித்தியாலங்கள் கட்டாயம் சுயகற்றலில் ஈடுபடவேண்டும்.

 சுயகற்றல் ஒன்றே வெற்றியைத் தரும். குறிப்பாக ஆசிரியர் கைநூலை படியுங்கள்.
அதிலுள்ள விடைகளைத்தவிர வேறொன்றுமில்லை.

 காரைதீவில் இம் முறை 37 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்கின்றார்கள். இங்கு பாராட்டு விழா சிறப்பாக நடைபெறுகிது .
அடுத்த முறை இந்த எண்ணிக்கைஐம்பதாக வேண்டும்.
முடியுமானவரை மொபைல் தொலைபேசிப் பாவனையை குறையுங்கள். அப்பொழுது முன்னேறலாம் என்றார்.

இங்கு மூன்று ஏ பெற்ற ஐந்து மாணவர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் பரிசும் அடுத்த கட்ட பெறுபேறு பெற்ற மாணவர்களுக்கு தலா 50ஆயிரம் ரூபாவும் ஏனையோருக்கு பதக்கமும் வழங்கி கௌரவிப்பு இடம் பெற்றது.
புலம்பெயர் அனுசரணையாளர்களான டாக்டர் அ.வரதராசா( கனடா), மு.யோகராசா( கனடா), டாக்டர் த.கௌரிகாந்தன்( அவுஸ்திரேலியா), சி.கருணாநிதி( லண்டன்), பொறியியலாளர் வீ.சத்தியமூர்த்தி( அவுஸ்திரேலியா), பொறியியலாளர் எஸ்.பிரேமகாந்தன்( லண்டன்), ச.ஹரிகரராஜா( லண்டன்) ஆகியோர் விழாவில் பாராட்டப்பட்டனர். 
பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் தவநாயகம் மதிவேந்தன் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டு பிறந்த மண்ணில் பாராட்டப்பட்டார்.

விழாவை கல்வியியலாளர் வி.ரி.சகாதேவராஜா நெறிப்படுத்தி தொகுத்தளித்தார்.

அஸ்கோ அமைப்பின் அதிபர் எம்.சுந்தரராஜனின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற நிகழ்வில், பொருளாளர் பி.கேதீஸ் ஆசிரியர் நன்றியுரையாற்றினார்.

சாதனை மாணவர்களின் பெற்றோரும் கலந்து சிறப்பித்தனர்.


 எதிர்வரும் பெரும்போக நெற்பயிர்ச்செய்கைக்கான உரக்கொள்வனவு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக விவசாயிகளின் கணக்குகளில் 9.6 பில்லியன் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களம் குறிப்பிட்டுள்ளது

 


இலங்கை திறந்த பல்கலைக்கழக கல்விப் பீடத்தின் Dept.of Secondary & Tertiary Education இற்கான துறைத் தலைவராக பொறுப்பேற்கும்

பேராசிரியர், கலாநிதி F.M. நவாஸ்தீன்
அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்.


 (எஸ்.அஷ்ரப்கான்,ஏ.எம். அஜாத்கான்)


வியாங்கல்லை கிறீன் லைன் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட  அணிக்கு 07 பேர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும் அன்மையில் வியாங்கல்லை மைதானத்தில் நடைபெற்றது.

இறுதிப் போட்டியிலே களுத்துறை வுளூஸ் அணியினரை எதிர்த்து கொழும்பு ஸ்மாஸ் அணி  மோதியது.

இதில்  2-1  என்ற கோல் வித்தியாசத்தில்  களுத்துறை வுளுஸ்  அணி சம்பியனாக தெரிவானது.

சம்பியன் அணிக்கு இரண்டு இலட்சம் ரூபாய்  பணப்பரிசும் கிறீன் லைன் வெற்றிக் கிண்ணமும், 2ம் இடத்தினைப் பெற்ற  அணிக்கு ஒரு இலட்சம்  ரூபாய் பணப் பரிசும் கிண்ணமும் வழங்கப்பட்டது. 

மேலும் இந்த தொடரின் அதிகூடிய கோல்களை பெற்ற வீரருக்கு பத்தாயிரம் ரூபாயும் கிண்ணமும், சிறந்த கோல்காப்பாளருக்கு பத்தாயிரம் ரூபாயும் கிண்ணமும் ஒழுக்கமான அணிக்கு ஐயாயிரம் ரூபாயும் முறையே வழங்கப்பட்டன.

இறுதி நாள் நிகழ்வுகள் கிறீன் லைன் விளையாட்டுக் கழகத்தின் தவிசாளர், லெப்டினன் ஏ.எம்.எம்.கியாஸின் முழுமையான வழி நடாத்தலுடன் அவரது தலைமையில் நடைபெற்றது. 

நிகழ்வின் பிரதம அதிதியாக டாக்டர் எம்.எச்.எம்.றூமி, கெளரவ அதிதிகளாக அல்-ஹாஜ் எம்.எஸ்.எம்.ஜெஸ்லான், முன்னாள் மேல் மாகாணசபை உறுப்பினர் அல்-ஹாஜ் இப்திகார் ஜெமீல் மற்றும் கிறீன் லைன் விளையாட்டுக் கழகத்தின் முன்னாள் வீரர்கள், ஊரின் தனவந்தர்கள் ஊர் மக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர். 


 நூருல் ஹுதா உமர்


உலக தொழுநோய் தினத்தினை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் வைத்திய சேவை சம்மாந்துறை வளத்தாப்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்றது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் பிராந்திய தொற்றுநோய் தடுப்பு பிரிவு குறித்த நடமாடும் வைத்திய சேவையினை ஏற்பாடு செய்திருந்தது.

பிராந்திய தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ.சீ.எம்.பஸால் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிராந்திய சுற்றுச்சூழல், தொழில்சார் சுகாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எஸ்.எம்.பௌஸாத், சம்மாந்துறை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எஸ்.ஐ.எம்.கபீர்,  உதவி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி ஜீவராணி சிவசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்ததுடன் குறித்த நோய் தொடர்பாக வைத்திய ஆலோசனைகளையும் வழங்கினர்.

இந்நிகழ்வில் ADT அமைப்பினரும் பிராந்திய மேற்பார்வை சுகாதார பரிசோதகர் ஐ.எல். லபீர் மற்றும் ஜீ.சுகந்தன் ஆகியோரும் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சுகாதார பரிசோதகர்களும் கலந்து கொண்டதுடன் நிகழ்விற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது


வி.சுகிர்தகுமார் 0777113659


76ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகள் நாட்டின் பல பாகங்களிலும் அரச நிறுவனங்களிலும் சிறப்பாக உணர்வு பூர்வமாக இன்று (04) கொண்டாடப்பட்டு வருகின்றது.
இதற்கமைவாக அம்பாரை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலகத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் இடம்பெற்றன.
இடம்பெற்ற நிகழ்வுகளில் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் கணக்காளர் க.பிரகஸ்பதி நிருவாக உத்தியோகத்தர் க.சோபிதா உள்ளிட்ட அலுவலகத்தின் உயர் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் சிரேஸ்ட பிரஜைகள் என பலரும் கலந்து கொண்டனர்.
தேசிய கொடியேற்றல் மற்றும் தேசிய கீதம் இசைத்தல் ஆகிவற்றோடு ஆரம்பமான சுதந்திர நிகழ்வில்; சமய அனுஸ்டானம் இடம்பெற்றது. பின்னர் பிரதேச செயலாளரின் உரையும் இடம்பெற்றது.
இறுதியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு; மரநடுகையும் ஆரம்பிக்கப்பட்டதுடன் சிரமதானப்பணியும் பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.

 


எல்லோருக்கும்_அவசியமானதும்_முக்கியமானதும். #உறுதி #அரச_உறுதி_LDO #உறுமய_உரித்து #பூரண_அளிப்புப்பத்திரம் #மாற்றக்கூடிய காணிகள்


காணியினை இரண்டு விதமாக பிரிக்க முடியும். அதில் முதலாவதாக #தனியார்_காணி இரண்டாவதாக #அரச_காணி.


பொதுவாக தனியார் உறுதிகள் காணப்படும் காணிகளை விற்கவோ வாங்கவோ எந்தவொரு சட்டக் கட்டுப்பாடுகளும் கிடையாது என்பதுடன் எந்தளவு விசாலம் கொண்ட காணியினையும் நன்கொடை அல்லது அறுதி உறுதிகள் மூலம் பரிமாற்றிக்கொள்ள முடியும்.


அரச காணிகளுக்காக காணி ஆணையாளர் நாயகத் திணைக்களத்தால் வழங்கப்படும் உத்தரவு பத்திரங்கள் (பேர்மிட்) உள்ள காணித்துண்டுகள், நில அளவைத் திணைக்களத்தால் அளவை செய்யப்படுமிடத்து அவை காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழ் (LDO) அளிப்பு பத்திரங்கள் பெறத்தகுதியானவை. எனினும், இதுவரை காலமும் கௌரவ ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட  அளிப்பு பத்திரங்கள் முக்கியமான 07 நிபந்தனைகளை உள்ளடக்கி காணப்பட்டன. 


அதில், தனி நபரொருவர் ஆகக் குறைந்த பிரிபடக் கூடிய அளவான (பெரும்பாலும் 05 பேட்சஸ் ஆகும்) காணியினை சேமித்து வெத்துக் கொண்டு மிகுதியை மாத்திரம் கைமாற்றல், அல்லது வேறு ஏதாவது மாற்றுக்காணி இருந்தால் மாத்திரம் கைமாற்றல், கைமாறும் பொழுது GS,  DS  என்பவர்களின் அனுமதியுடன் கைமாறல்,  இரத்த உறவுகளுக்குல் மாத்திரம் கைமாறல் மற்றும்

நன்கொடை உறுதிகள் மூலமாக மாத்திரம் கைமாறல் என்பன முக்கியமானவையாகும்.


எனினும், கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் இனிமேல் மேற்சொன்ன நிபந்தனைகள் அற்ற அதாவது பூரண அளிப்பு பத்திரம் வழங்கும் திட்டம் அரச காணிகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் முதற் கட்டமாக நாடளாவிய ரீதியில் 10000 நிபந்தனைகளற்ற பூரண அளிப்பு பத்திரம் வழங்கும் வைபவம் எதிர்வரும் 2023.02.05ம் திகதி தம்புளையில் இடம் பெற இருக்கின்றது. அதில் சுமார் 2000 அளிப்பு பத்திரங்கள் அம்பாறை மாவட்டத்திற்கு வழங்கப்படுகின்றன. அதிலும் சம்மாந்துறைக்கு 700 அளிப்பு பத்திரங்களும், திருக்கோவிலுக்கு 600 அளிப்பு பத்திரங்களும் வழங்கப்படுகின்றன.


குறிப்பாக இவ் அளிப்புப் பத்திரங்கள் மூலம், விற்கவோ வாங்கவோ எந்த சட்டக்கட்டுப்பாடும் கிடையாது என்பதுடன் எந்தளவு விசாலம் கொண்ட காணித்துண்டுகளும் நன்கொடை அல்லது கிரய உறுதிகள் மூலம் கைமாறிக்காெள்ளலாம். இதில் மிக முக்கிய விடயம் யாதெனில் இவ்வைகையான அளிப்புக்களை GS மற்றும் DS ஆகியோரின் அனுமதியின்றி கைமாறிக்கொள்ளலாம். உதாரணமாக கோடிக்கணக்கில் கைமாறப்பட்ட கடை நிலங்களுக்கு கூட எதிர்வரும் காலங்களில் சட்டரீதியான உறுதி பெற முடியும்.


மேலும், முன்னர் வழங்கப்பட்ட அளிப்புப் பத்திரங்களை உறுமய திட்டத்தினுள் உள்வாங்கும் நடவடிக்கைகளும் விரைவில் மேற்கொள்ளப்படலாம். 


எனினும், அம்பாறை மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட 2000 நிபந்தனைகளற்ற பூரண அளிப்பு பத்திரங்களில் சுமார் 1600ற்கும் மேற்பட்ட ஆவணங்கள் கல்முனை காணிப்பதிவகத்தில் பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவ் 1600 ஆவணங்களும் 2024.02.01ம், 02ம்  திகதிகளில் பதிவு நடவடிக்கைக்காக சமர்பிக்கப்பட்டு அனைத்து ஆவணங்களும் 2024.02.03ம் திகதி உரிய உரிய பிரதேச செயலகங்களிடம் கையளிக்கப்பட்டது. 


குறிப்பாக கல்முனை காணிப்பதிவக காணிப்பதிவாளர் திரு.சிவசுந்தரம் சுசிகரன் அவர்களின் தலைமையில் காணிப்பதிவக அனைத்து ஆண் மற்றும் பெண் உத்தியோகத்தர்களும் இரவு வேளையிலும் கடமைபுரிந்து பதிவு நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டனர்.


அப்துல் பாசித்.

காணிப்பதிவகம் - கல்முனை.

 


76 வது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் காலிமுகத்திடலில் ஆரம்பமாகியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகையுடன் அணி வகுப்பு உள்ளிட்ட ஏனைய நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளன.

கொழும்பு காலி முகத்திடலில் இந்த விழா நடைபெற்று வருவதுடன், தாய்லாந்து பிரதமர் ஷ்ரத்தா தவிசின் சுதந்திர தின நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

'புதிய நாட்டைக் கட்டியெழுப்புவோம்' என்பதே இந்த ஆண்டு சுதந்திர தினத்தின் தொனிப்பொருளாகும்.

 


(எஸ்.அஷ்ரப்கான்)


விஞ்ஞான பீடத்தின் முன்னால் இன்று காலை இடம் பெற்ற விபத்தில் 12 வயது உடைய ஹாறுன் பாசிர் எனும் சிறுவன் சம்பவ இடத்திலே பலி

வாகனம் (லொரி) செலுத்தி வந்த  சாரதி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


 குற்றவியல் விசாரணை திணைக்களத்தினால் நேற்று (02) கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சற்றுமுன் மாலிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.