Showing posts with label education. Show all posts


 ( வி.ரி.சகாதேவராஜா)


சம்மாந்துறை வலய தமிழ் பாட ஆசிரிய ஆலோசகர் இசட் .எம்.மன்சூர் தனது 60ஆவது வயதில் ஓய்வுபெறுவதையிட்டு வலயக்கல்விப் பணிமனையில் பிரிவுபசாரநிகழ்வு நேற்று முன்தினம் (16) வியாழக்கிழமை இடம்பெற்றது.

சம்மாந்துறை வலய கல்வி சார் உத்தியோகத்தர்களின் நலன்புரி ஒன்றிய தலைவரும் உதவிக் கல்விப் பணிப்பாளருமான விபுலமாமணி தேசமான்ய வி.ரி.சகாதேவராஜா தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது 


சம்மாந்துறை வலய நிருவாக பிரதிக் கல்விப்பணிப்பாளர் எம்வை.யாசீர் அரபாத் முன்னிலையில்  நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான திருமதி  நிலோபரா, எச்.நைரூஸ்கான், பி.பரமதயாளன் உள்ளிட்ட கல்வி சார் உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.

 ஓய்வுபெறும் ஆசிரியஆலோசகர்  மன்சூர் தொடர்பாக பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் ,வலய கணினி நிலையப் பொறுப்பதிகாரி ஜலீல்,உதவிக்கல்விப்பணிப்பாளர் எம் எம் எம். ஜௌபர்  ஆகியோர் உரையாற்றினர்.ஆசிரிய ஆலோசகர் றிஸ்வி கவிதையாற்றி வாசித்தார்.

மன்சூரின் அர்ப்பணிப்பான சேவையைப்பாராட்டி பணிப்பாளர் அரபாத் பொன்னாடை போர்த்திக்கௌரவித்தார்.

11 வருட காலம் ஆசிரியர் பணியும் 25 வருட காலம் ஆசிரியர் ஆலோசகர் பணியையும் நிறைவு செய்து 2024.05.17ம் திகதி ஓய்வு பெறும்  Z.M. மன்சூர் நல்லதொரு கவிஞராவார்.

ஆசிரிய ஆலோசகர் மன்சூர் ஏற்புரைநிகழ்த்துகையில் தான் 36வருடங்களுக்குமேல் கல்விச்சேவையாற்றியதாகவும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் யாருடனும் முரண்படவில்லை.மாறாக அனைவரும் ஒத்துழைப்பு நல்கியதாக நன்றி கூறினார்.


 சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளராக கல்முனை வலயக்கல்வி பணிமனையின் பிரதிக்கல்வி பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபீர் கடமைகளை பொறுப்பேற்றார். 


நூருல் ஹுதா உமர் 


சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தின் பணிப்பாளராக கல்முனை வலயக்கல்வி பணிமனையின் நிர்வாகத்துக்கு பொறுப்பான பிரதிக்கல்வி பணிப்பாளராக கடமையாற்றி வந்த எம்.எச்.எம். ஜாபீர் இன்று (17) கடமைகளை பொறுப்பேற்று கொண்டார். 


சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளராக கடமையாற்றி வந்த டாக்டர் எஸ்.எம். செய்யத் உமர் மௌலானா அவர்கள் கடந்த வாரம் காலமானதையடுத்து நிலவிய வெற்றிடத்தை நிரப்பும் வகையில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம். டபிள்யு.ஜி.திஸாநாயக்க அவர்களினால் எம்.எச்.எம். ஜாபீர் சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளரின் கடமைகளை நிறைவேற்றும் விதமாக நியமிக்கப்பட்டுள்ளார். 


சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தில் 08 வருடங்கள் அளவில் உதவிக்கல்வி பணிப்பாளராகவும், பிரதிக்கல்வி பணிப்பாளராகவும் கடமையாற்றிய அனுபவம் கொண்ட எம்.எச்.எம். ஜாபீர் அவர்கள் வலயக்கல்வி பணிப்பாளரின் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட இந்நிகழ்வில் சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலக பிரதிக்கல்வி பணிப்பாளர்கள், உதவிக்கல்வி பணிப்பாளர்கள், கணக்காளர், கல்முனை வலயக்கல்வி அலுவலக பிரதிக்கல்வி பணிப்பாளர்கள், உதவிக்கல்வி பணிப்பாளர்கள், கணக்காளர், இரண்டு கல்வி வலயங்களையும் சேர்ந்த ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், அதிகாரிகள், பிரதேச முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

 


ஏறாவூர் மாணவர்களின் அழகிய முன்மாதிரி

 

நேற்று (15) கல்விப் பொதுத்ததராதர சாதாரண தரப்பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் ஏறாவூர், மீராகேணி மாக்கான் மாக்கார் தேசிய பாடசாலை மாணவர்கள் தங்களது பாடசாலையை சிரமதானம் செய்து சுத்தப்படுத்தி விட்டு சென்றுள்ளனர். 


அல்ஹம்துலில்லாஹ்.


இவ்வாறான முன்மாதிரி வரவேற்கப்பட வேண்டியதும் ஊக்குவிக்கப்பட வேண்டியதொன்றாகும். குறித்த மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்று சிறந்த கல்விமான்களாக மிளிர அல்லாஹ்வை பிரார்த்திக்கிறோம்.   


Photo credit to it's respective owner


மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரிக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் விஜயம் : அபிவிருத்தி பணிகளுக்காக நிதியும் ஒதுக்கினார் !

நூருல் ஹுதா உமர்

கல்முனை பிராந்தியத்தில் மட்டுமன்றி தேசிய ரீதியாகவும் புகழ்பெற்ற மருதமுனை கமு/கமு/ ஷம்ஸ் மத்திய கல்லூரிக்கு பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் விஜயம் செய்து பாடசாலையின் கல்வி அடைவு மட்டங்கள், பௌதீக மற்றும் ஆளணி விடயங்கள், கல்வி மேம்பாட்டு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.

கல்லூரி முதல்வர் எம்.எம். ஹிர்பஹான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி, ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு செயலாளர் மற்றும் உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் சங்க செயலாளர் மற்றும் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டு பாடசாலையின் மேம்பாட்டு விடயங்கள் மற்றும் கல்வி அபிவிருத்தி தொடர்பில் ஹரீஸ் எம்.பியுடன் கலந்துரையாடியதுடன் பாடசாலையின் மைதான தேவைகள், சிற்றுண்டிச்சாலை புனர்நிர்மாணம் உட்பட பல்வேறு விடயங்களை எடுத்துரைத்தனர்.

இதன்போது மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி மேம்பாட்டுக்காக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களினால் ஒதுக்கப்பட்ட நிதிக்கான ஆவணத்தை பாடசாலை அதிபர் எம்.எம்.ஹிர்பஹானிடம் பாராளுமன்ற உறுப்பினர் கையளித்தார். இதன்போது கமு/கமு/ அல்- ஹம்ரா வித்தியாலயம், கிரீன் மக்ஸ் விளையாட்டுக்கழகம், பிரைட் பியூச்சர் விளையாட்டுக்கழகம் போன்றவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டு கடிதமும் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் எம்.எம்.எம். உமர் அலி, பாராளுமன்ற உறுப்பினரின் ஆலோசகர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான், இணைப்பு செயலாளர் சப்ராஸ் நிலாம், மக்கள் தொடர்பாடல் செயலாளர் யூ.எல்.என். ஹுதா உமர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


மருதமுனை அல்- மனார் மத்திய கல்லூரிக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் விஜயம் : அபிவிருத்தி பணிகளுக்காக நிதியும் ஒதுக்கினார் !
நூருல் ஹுதா உமர்
கல்முனை பிராந்தியத்தில் மட்டுமன்றி தேசிய ரீதியாகவும் புகழ்பெற்ற மருதமுனை கமு/கமு/ அல்- மனார் மத்திய கல்லூரிக்கு பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் விஜயம் செய்து பாடசாலையின் கல்வி அடைவு மட்டங்கள், பௌதீக மற்றும் ஆளணி விடயங்கள், கல்வி மேம்பாட்டு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.
கல்லூரி முதல்வர் ஐ. உபைதுல்லா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதி அதிபர்களான எம்.எம். அனஸ், ரஸ்மி மூஸா, உதவி அதிபர் எம்.எஸ். நிஹால், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு செயலாளர் ரீ. றிஹான் மற்றும் உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் சங்க பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டு பாடசாலையின் மேம்பாட்டு விடயங்கள் மற்றும் கல்வி அபிவிருத்தி தொடர்பில் ஹரீஸ் எம்.பியுடன் கலந்துரையாடினர்.
இதன்போது மருதமுனை அல்- மனார் மத்திய கல்லூரி மேம்பாட்டுக்காக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களினால் ஒதுக்கப்பட்ட நிதிக்கான ஆவணத்தை பாடசாலை அதிபர் ஐ. உபைதுல்லாஹ் விடமும், பெண்கள் பிரிவின் கடிதத்தை பிரதி அதிபர் எம்.எம். அனஸ் அவர்களிடமும் பாராளுமன்ற உறுப்பினர் கையளித்தார். இதன்போது மஸ்ஜிதுன் நூர் ஜும்மா பள்ளிவாசலின் நிதி ஒதுக்கீட்டு கடிதத்தையும் பள்ளிவாசல் பொருளாளர் எஸ்.எம். றபாயிடீனிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் எம்.எம்.எம். ஹாரீஸ் (நவாஸ்), பாராளுமன்ற உறுப்பினரின் ஆலோசகர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான், இணைப்பு செயலாளர் சப்ராஸ் நிலாம், மக்கள் தொடர்பாடல் செயலாளர் யூ.எல்.என். ஹுதா உமர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


 நூருல் ஹுதா உமர்


கல்முனைக் கல்வி வலயத்தில் தரம் 5 புலமைப்பரிசில் அடைவு மட்டத்தை அதிகரிக்கும் நோக்குடன் நடாத்தப்பட்ட வலய மட்டத்திலான பரீட்சை தொடர்பாக  சாய்ந்தமருது, நிந்தவூர் மற்றும் காரைதீவு கல்விக் கோட்ட அதிபர் ஆசிரியர்களுக்கான மீளாய்வுக் கூட்டம் இன்று (2024.05.09) கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது.

கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ்.சஹுதுல் நஜீம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் கலந்து கொண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அடைவு மட்டத்தினை அதிகரிப்பதற்கான மாகாண மட்டத்தில் எதிர்காலத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள செயற்பாடுகள் தொடர்பாகவும் இவ்விடயம் தொடர்பாக அதிபர், ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாகவும் விளக்கிக் கூறினார்.

இக்கூட்டத்தில் கல்முனை கல்வி வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆரம்பக் கல்வி ஆசிரிய ஆலோசகர்கள், வளவாளர்கள், பாடசாலை அதிபர்கள், பிரதி, உதவி அதிபர்கள், தரம் 5 வகுப்புகளுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 


(நூருல் ஹுதா உமர்)


சம்பள உயர்வு மற்றும் ஏனைய வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி 8வது நாளாகவும் நடைபெற்று வருகின்ற தொடர்ச்சியான வேலை நிறுத்த போராட்டங்களினால் பல்கலைக்கழகத்தில் கல்வி மற்றும் ஏனைய ஆய்வு கூட செயல்பாடுகள் முடக்கப்பட்ட நிலையில் பல்கலைக்கழக மாணவர் சமூகம் மிகுந்த பிரச்சினைகளை ஆட்கொண்டுள்ளது.

இருந்த போதிலும் கடந்த எட்டு வருடங்களாக அரசாங்கத்தினால் வாக்களிக்கப்பட்டு நிறைவேற்றப்படாமல் இருக்கின்ற கல்வி சாரா உத்தியோகத்தர்களில் சம்பள முரண்பாடு மற்றும் ஏனைய மாதாந்த படி அதிகரிப்பு போன்ற விடயங்கள் உடன் தீர்க்கப்பட வேண்டும் என்றும் பல்கலைக்கழக சூழலை வினைத்திறன் மிக்க சூழலாக மாற்றி கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளுக்கு பக்கபலமாக தொழில் படுகின்ற கல்வி சாரா உத்யோத்தர்களின் நீண்ட கால குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்றும் அரசாங்கம் இவ்விடயத்தில் கூடிய கவனம் எடுத்து இந்த விடயங்களை தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின்செயலாளர் எம்.ஏ.ஏ.எம். சமீம் அவர்கள் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

மேலும் பல்கலைக்கழகங்களை பொறுத்தமட்டில் கல்வி சாரா ஆளனியினர் பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் தொடங்கி ஏனைய கல்வி சார்ந்த நடவடிக்கைகளுக்கு பக்க பலமாகவும் பல்கலைக்கழகத்தின் உயர்வுகளுக்கும் அதன் வினைத்திறன் மிக்க சேவைகளுக்கும் மாணவர்கள் தொடக்கம் ஆசிரிய சமூகம் வரை தங்களது அயராத பங்களிப்புகளை வழங்கி வருகின்ற இந்த வேளையில் ஏனைய அரசுதுறை ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சம்பள அதிகரிப்புகள் இதுவரை காலமும் மறுக்கப்பட்ட நிலையில் அவர்களது கோரிக்கையை முன்னுறுத்தி கடந்து எட்டு வருடங்களாக மேற்கொள்ளப்படுகின்ற தொடர்ச்சியான இந்த போராட்டம் அரசாங்கத்தின் உயர்மட்டங்களின் கவனத்திற்கு செல்லப்பட்டு உடனடியாக அவர்களுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று இலங்கை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏகோபித்த தீர்மானத்தை வழிமொழிந்தவராக அரசாங்கம் இவ்விடத்தில் உடன் கரிசனை காட்டப்பட வேண்டும் என்றும் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் எம்.ஏ.எம். சமீம் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

 


(வி.ரி.சகாதேவராஜா)


சம்மாந்துறை வலயத்தில் இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் இடமாற்றம் காரணமாக ஏற்பட்ட வெற்றிடங்களுக்கு புதிய நியமனக் கடிதங்களை வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா வழங்கி வைத்தார்.

சம்மாந்துறை வலய நிர்வாகத்திற்கு பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் பி.எம்.யசீர் அரபாத் மொகைடீன் இதனை அறிவித்தார்.

கல்வி முகாமைத்துவ பிரதி கல்விப் பணிப்பாளராக எச்.
நைரூஸ்கான் நியமிக்கப்பட்டுள்ளார். ஏலவே இப்பதவியை அலங்கரித்த திருமதி நிதர்ஷினி மகேந்திரகுமார் மட்டக்களப்பு வலயத்திற்கு இடமாற்றலாகிச் சென்றதையடுத்து இவ்வெற்றிடம் ஏற்பட்டது.

அதேவேளை, கல்வி அபிவிருத்திக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளராக பி.பரமதயாளன் நியமிக்கப்பட்டுள்ளார்.ஏலவே இப்பதவியை அலங்கரித்த ஏ.எல். அப்துல் மஜீத் அக்கரைப்பற்று வலயத்திற்கு இடமாற்றலாகிச் சென்றதையடுத்து   இவ்வெற்றிடம் ஏற்பட்டது.

திட்டமிடல் பிரிவு பிரதிக் கல்விப் பணிப்பாளர் 
திருமதி ஏசி.நுஸ்ரத் நிலோபரா சம்மாந்துறை கோட்டக் கல்விப்பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.ஏலவே இப்பதவியை அலங்கரித்த ஏ.நசீர் திருக்கோவில் வலயத்திற்கு இடமாற்றலாகிச் சென்றதையடுத்து இவ்வெற்றிடம் ஏற்பட்டது.


 (வி.ரி. சகாதேவராஜா)


சம்மாந்துறை கல்வி வலயத்திலிருந்து இம்முறையும் தேசிய மட்ட ஒலிம்பியாட் (கணிதம் ) போட்டியில் தெரிவாகியுள்ள  
மல்வத்தை விபுலானந்தா மகா வித்தியாலய சாதனை மாணவி சிவரூபன் ஜினோதிகாவிற்கு ஊக்குவிப்பு உதவி வழங்கி வைக்கப்பட்டது.

லண்டன் கற்பகப்பிள்ளையார் ஆலய  சபையின் இலங்கைக்கான இணைப்பாளரும் இலங்கை அகிலன் பவுண்டேசனின் உதவிப்பணிப்பாளருமான கலாநிதி விஆர். மகேந்திரனிடம்  உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இவ் ஊக்குவிப்பு உதவி நேற்று முன்தினம் வழங்கி வைக்கப்பட்டது.

இந்தியாவின் ஸ்ரீமத் பரசமய கோளறி நாதர் ஆதீன 39 ஆவது குரு மகா சன்னிதான பீடத் தலைவர் புத்தாத்மானந்த சரஸ்வதி சுவாமிகள் அதனை மாணவிக்கு வழங்கி வைத்தார்.

அச்சமயம் அதிபர் திருமதி கௌசல்யா ஞானேஸ்வரன்,சமூக செயற்பாட்டாளர்களான  முன்னாள் தவிசாளர் கலாநிதி கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தா. பிரதீபன் ஆகியோரும் சுவாமிகளின் இந்திய பிரதிநிதிகளும் மாணவியின் பெற்றோரும் கலந்து கொண்டார்கள்.

இம்முறை தெரிவான மற்றுமொரு மாணவி மதுஸ்காவிற்கும் இவ் வுதவி இவ்வாரம் வழங்கி வைக்கப்படும் என வீஆர் மகேந்திரன், பணிப்பாளர் சகாவிடம் உறுதியளித்தார்.

 


40 வருடங்கள் கல்விச் சேவையாற்றிய

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ் எம் எம்.அமீர் தனது 60 வது வயதில் ஓய்வு பெற்றுள்ளார்.

ஆரவாரமின்றி ஓய்வு நிலைக்கு சென்ற மருதமுனையைச் சேர்ந்த எஸ்.எம்.எம்.அமீர் 
1964 மார்ச் மாதம் 23 அன்று  பிறந்தவர் .சிவத்த மரைக்கார் முகம்மது அமீர்,இயல்பிலேயே சாந்தமான குணம் கொண்டவர். பேசுவதற்கும்,பழகுவதற்கும் இனிமையானவர்.1984ல் அமீர்  பட்டதாரி ஆசிரியர் நியமனம் பெற்றார்.பொருளியல் பாடத்தை மாணவர்கள் விரும்பி கற்க இவரிடம் செல்வதுண்டு.

இலங்கை கல்வி நிருவாக சேவைப் பரீட்சையில்கூடிய புள்ளிகளைப் பெற்று தன்னை ஓர் கல்வி அதிகாரியாக தரமுயர்த்திக் கொண்டார்.

ஆசிரியராக
திட்டமிடல்மற்றும்மீளாய்வுபிரதிக்கல்விப்பணிப்பாளராக
அதிபராக கல்வித் துறையில் தன்னை அர்பணித்த அவர் சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளரானார்.
பின்னர் மட்டக்களப்புமத்திகல்விவலயத்தின் வலயக்
கல்விப் பணிப்பாளராக இறுதி இரு வருடங்கள் இருந்து  ஓய்வுபெற்றார்.

தன் சேவைக் காலத்தில் தன்னடக்கத்துடன் மிக மென்மையாக நடந்து கொண்ட கல்வியதிகாரிகளுள் அமீரும் ஒருவராவார்.

 


அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான முஸ்லிம் கலாசார போட்டி நிகழ்வு-2024

........................................................


எமது கல்லூரியின் இணைப்பாடவிதான அபிவிருத்தி செயற்பாடுகளின் ஓர் அங்கமாக கடந்த 28/04/2024 அக்கரைப்பற்று ஆயிஷா பாலிகா மகாவித்தியாலத்தில் நடைபெற்ற இவ்வாண்டுக்கான அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான முஸ்லிம் கலாசார போட்டி நிகழ்வின்  அக்கரைப்பற்று வலய  பாடசாலைகளுக்கிடையிலான முதல் கட்ட நிகழ்வில் எமது அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மாணவர்கள் 

பின்வரும் நிலைகளை பெற்று வெற்றிவாகை சூடிக்கொண்டனர்.என்பதுடன் மாகாண மட்டத்திற்கும் தெரிவு செய்யப்பட்டனர்.


1.H.அப்துல் வதூத்-கிராஅத் (கனிஷ்ட பிரிவு) முதலாம் இடம்

2.S.இமாம் அஹமட்-கிராஅத் (சிரேஷ்ட பிரிவு) முதலாம் இடம்

3.MA.அன்சாப்-கிராஅத் (இடைநிலைப் பிரிவு)

மூன்றாம் இடம்

4.MM.ராசிம்-அதான் கூறுதல் (இடைநிலைப் பிரிவு).முதலாம் இடம்

5.L.முஹன்னத்-அதான் கூறுதல் (சிரேஸ்ட பிரிவு) இரண்டாம் இடம்

6.R.பாத்திமா ரஸா -நஸீத் (சிரேஸ்ட பிரிவு)

இரண்டாம் இடம்

7.AG.பிஸ்மி ஸஹா-அஸ்மாஉல் ஹுஸ்னா (சிரேஸ்ட பிரிவு) மூன்றாம் இடம்


இதற்கிணங்க இம்மாணவர்களை போட்டி நிகழ்வுகளுக்காக பயிற்றுவித்த எமது பாடசாலை இஸ்லாம் பாட ஆசிரியர்களான அஷ்ஷேக் HM.சிப்னாஸ் (இணைப்பாளர்) ,அஷ்ஷேக் ANM.ஜுனைட்,,I.ஸிப்கா ஆசிரியை குறிப்பாக இம்மாணவர்களை பயிற்றுவிப்பதில் இரவு பகலாக தன்னை அர்ப்பணித்த இஸ்லாம் பாட ஆசிரியர் அஷ்ஷேக் NM.நிஷாத் ஆகியோருக்கும் மேலதிகமாக பல்வேறு உதவிகளை புரிந்த பிரதி அதிபர்

AL.நஸீபா(SLPS) ,ALM.இல்யாஸ் ஆசிரியர் அவர்களுக்கும் வெற்றிபெற்ற மாணவச் செல்வங்களுக்கும் அதிபர் AH.பௌஸ் (SLEAS) அவர்கள் பாடசாலை சமூகம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றார்.


தகவல்-

NM.முஹமட் ஸாலிஹ் (SLPS)

பிரதி அதிபர்

இணைப்பாடவிதானம்

அக்/முஸ்லிம் மத்திய கல்லூரி 

(தேசிய பாடசாலை)

 


(எஸ்.அஷ்ரப்கான்)


சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழாவும் கௌரவிப்பு நிகழ்வும்
அதிபர் யு.எல். நசார் தலைமையில் (02) வியாழக்கிழமை இடம்பெற்றது.

இவ்விழாவில் பிரதம அதிதியாக கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வரும் மெட்றோபொலிட்டன் கல்லூரியின் ஸ்தாபகருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப்  கலந்து கொண்டார். 

பாடசாலை அதிபரின்  அழைப்பை ஏற்று கள விஜயம் செய்த முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப் இப்பாடசாலைக்கு அவசர தேவையாக இருந்த கனணியும், பிரின்டிங் மெசினையும் நிகழ்வில் கலாநிதி சிராஸ் மீராசாஹிப்  பாடசாலைக்கு வழங்கி வைத்தார்.

குறித்த நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சிராஸ் மீராசாஹிப் அவர்களினால்  சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. 

தான் படித்த ஆரம்ப பாடசாலைக்கு தன்னாலான சகல உதவிகளை செய்து தருவதாக உறுதி வழங்கியதோடு, குறித்த பாடசாலையின் அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க இப்பாடசாலையின் வேன்ட் வாத்திய குழு மாணவர்களுக்கான புதிய சீருடையையும் மிக விரைவில் தயார்படுத்தி தருவதாக உறுதியளித்தார்.

இந்நிகழ்வில்  தான் கற்ற பாடசாலையின் ஆசிரியர்களையும் கௌரவிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தனது மெட்ரோ பொலிட்டன் கல்லூரியில் 100% பூரண புலைமைப்பரிசில்களுடன் Education and Training Management எனும் (British Qualification) கற்கைநெறியினை 03 ஆசிரியர்களுக்கு கற்க கூடிய வாய்ப்பினை வழங்கினார். 

இந்நிகழ்வில் கல்முனை வலயக்கல்வி பிரதிக் கல்வி பணிப்பாளர் , பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க அங்கத்தவர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 


( வி.ரி. சகாதேவராஜா)

மல்வத்தை பிராந்திய உயர்தர கணித விஞ்ஞான  மாணவர்களின் மேலதிக கற்றலுக்கான இரு வருட உதவியை
அவுஸ்திரேலியா இணைந்த கரங்கள் அமைப்பு  வழங்க முன்வந்துள்ளது .

"Aim to excellent out come" என்று இவ் வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண வைபவம் மல்வத்தை விபுலானந்த தேசிய பாடசாலையின் அதிபர் திருமதி கௌசல்யா கணேஸ்வரன் தலைமையில் நேற்று(3) வெள்ளிக்கிழமை நடைபெற்றது .

பிரதம அதிதியாக சம்மாந்துறை வலய உதவிக் கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா  கலந்து சிறப்பித்தார்.
 கௌரவ அதிதியாக இணைந்த கரங்கள் அமைப்பின் இணைப்பாளர் ஏ. காந்தன் கலந்து சிறப்பித்தார் . மேலும் கணித பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் எம் எம் எம். ஜௌபர் ஆசிரிய ஆலோசகர் ஹபீப் மற்றும் மேலதிக வகுப்பு ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

மல்வத்தை வீரமுனை பிராந்தியத்தில் கணித விஞ்ஞான பாடத்தை கற்கும் 12 மாணவர்களுக்கான இரு வருட பிரத்தியேகமான விசேட வகுப்புகள் நடாத்த நிதிஉதவி அங்கு வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த மாணவர்களும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர்.

 


இலங்கையில் தொழிற்துறை கல்வியையும் புதிய கண்டுபிடிப்புக்களையும் மேற்கொண்டு நவீன உலகினை வெற்றிகொள்ள மாணவர்கள் மத்தியில் விஞ்ஞான ஆர்வத்தை மேம்படுத்தும் விதமாக தாய் நாட்டின் பிரசித்தி பெற்ற விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டதே தேசிய விஞ்ஞான மன்றம் (NSF) ஆகும்.


இந்த அமைப்பினால் வருடந்தோரும் படசாலை மாணவரகள் மத்தியில் பல்வேறு மட்டங்களில் போட்டி நிகழ்வுகள் நடாத்தப்பட்டு பெறுமதிமிக்க சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


அந்த வகையில்,எமது அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மாணவர்கள் வலய,மாகாண போட்டிகளில் வெற்றிபெற்றதன் மூலம் தேசிய மட்டத்திற்கு தெரிவாகி

 தேசிய மட்டத்தில் STREAM EDUCATION அபிவிருத்தி சம்பந்தமான பாடல் நிகழ்வினில் இரணடாம் இடத்தினை பெற்றுக்கொண்டனர்.


இவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 30/04/2024 அன்று கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு கல்வியமைச்சர் கௌரவ சுசில் பிரேம் ஜயந்த அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் தலைசிறந்த விஞ்ஞானிகளும் வைத்திய நிபுணர்களும் கலந்து சிறப்பித்தனர்.


எமது கல்லூரியில் உயர்தர விஞ்ஞானப் பிரிவில் கல்வி பயிலும்

1.Haroon Fathima Hishma 

2.Mansoor Fathima Hasna 

3.Riswan Iffath Nama 

4.Ilmy Fathima Reeza

5.Mohammad Sulfikar Perveze Mushari ஆகிய மாணவர்களே இவ்வாறு சான்றிதழ்கள் வழஙகி கௌரவிக்கப்பட்டனர்.


மேலும் இந்நிகழ்வுக்கு தேசிய விஞ்ஞான மன்றத்தின் அழைப்பின் பேரில் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலை அதிபர் AH.பௌஸ் (SLEAS) அவர்களும் இணைப்பாடவிதான அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கான பிரதி அதிபர் லெப்டினன் NM.முஹமட் ஸாலிஹ் (SLPS) அவர்களும் மாணவர்களுடன் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


அத்துடன்,எமது பாடசாலையினதும் ஊரினதும் நாமத்தை நாடறியச் செய்த இவ்வெற்றிக்காக மாணவர்களை தயார் படுத்திய அதிபர் AH.பௌஸ் (SLEAS) முன்னைநாள் இணைப்பாட விதான உதவி அதிபர் MA.சம்சுல் பழீல் மற்றும் ஆசிரியர்களான ALM.நவாஸ்,ALM.இல்யாஸ்,MA.ஹக்கீமா ஆசிரியை ஆகியோருக்கும் MA.பர்ஸானா (Do) வெற்றி பெற்ற மாணவர்கள் என யாவருக்கும் பாடசாலை சமூகம் தனது நல்வாழ்த்துக்களை கூறி நிற்கின்றது.

 


( வி.ரி.சகாதேவராஜா)

இலங்கை கல்வி நிருவாக சேவையைச் சேர்ந்த நைறுாஸ்கான் ஹிதாயத்துல்லாஹ் சம்மாந்துறை கல்வி வலயத்தின் முகாமைத்துவத்திற்கு பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் டொக்டர் எஸ்.எம்.எம்.எஸ். உமர் மௌலானா அவருக்கான நியமனக் கடிதத்தை நேற்று வழங்கி வைத்தார்.

ஏலவே இப் பதவியில் இருந்த திருமதி நிதர்சினி மகேந்திரகுமார் மட்டக்களப்பு வலயத்திற்கு இடமாற்றலாகிச் சென்றதையடுத்து இவ்வெற்றிடம் ஏற்பட்டது.

மருதமுனை சைக்கிளிங் கிறீன் கழகத்தின் ஸ்தாபக அங்கத்தவரும், நீண்ட துார வேக சைக்கிளோட்ட வீரருமான  நைரூஸ்கான்,
பாண்டிருப்பு முஸ்லிம் பிரிவு அல்மினன் வித்தியாலயம், மருதமுனை சம்ஸ் மத்திய கல்லுாரி (தேசிய பாடசாலை), அட்டாளைச்சேனை கல்வியல் கல்லுாரி போன்றவற்றின் பழைய மாணவராவார்.

 இவர் 1997ம் வடக்கு கிழக்கு மாகாணத்தில் சம்பியனான சம்ஸ் மத்திய கல்லுாரி பாடசாலை உதைபந்தாட்டக் கழகத்தின் தலைவராக இருந்ததுடன், 1998 ல் பாடசாலை மாணவராக இருக்கும் போது, அகில இலங்கை சுதந்திர பொன்விழா கட்டுரைப்போட்டி சிரேஸ்ட பிரிவில் முதலிடம் பெற்றதற்காக அப்போதைய ஜனாபதி சந்திரிக்க பண்டாரநாயக்க குமாரத்துங்கவிடமிருந்து தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இளம் கலைமானியையும், திறந்த பல்கலைக் கழகத்தின் பட்டப்பின் பின் கற்கை கல்வியியல் டிப்ளோமாவையும் பெற்றுள்ள இவர், திறந்த பல்கலைக்கழகத்தில் கல்வியியல் முதுமாணி பட்டப் பின் படிப்பையும் மேற்கொண்டு வருகின்றார்.

2016ம் ஆண்டு தமிழ் மொழி மூல இலங்கை அதிபர்கள் சேவைப் பரீட்சையில் முதலாம் இடம் பெற்று, பெரியநீலாவணை புலவர்மணி மகாவித்தியாலயத்தில் பிரதி அதிபராக பணி புரிந்து, 2017ம் ஆண்டு இலங்கை கல்வி நிருவாக சேவைக்கு உள்ளீர்க்கப்பட்டு, திருக்கோவில் கல்வி வலயத்தில் ஐந்து வருடங்களுக்கு அதிகமாக உதவிக் கல்விப் பணிப்பாளராக பணி புரிந்து 2022ம் ஆண்டு, சம்மாந்துறை கல்வி வலயத்திற்கு மாற்றலாகினார்.

 


(வி.ரி. சகாதேவராஜா)


திருக்கோவில் வலயக்கல்விப் பணிமனையின் கல்வி அபிவிருத்திக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் அலியார் நசீர், இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் 2 ற்கு பதவி உயர்வு பெற்றுள்ளார்.

சம்மாந்துறை வலய கோட்டக் கல்விப்பணிப்பாளராக, உடற்கல்வி பாட உதவிக் கல்விப் பணிப்பாளராக நான்கு வருடங்கள் பணியாற்றிய நிந்தவூரைச் சேர்ந்த ஜனாப்.ஏ.நசீர் கடந்த வாரம் திருக்கோவில் வலயத்திற்கு இடமாற்றலாகிச் சென்றிருந்தார்.

சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர்
உமர் மௌலானாவின் வழிகாட்டலில் கோட்டக் கல்விப்பணிப்பாளர் ஏ. நசீர்  எடுத்த பெருமுயற்சியின் காரணமாக சம்மாந்துறை கோட்ட கல்வி காரியாலயம் புதுப் பொலிவு பெற்று தற்போது சிறப்பாக காட்சியளிப்பது குறிப்பிடத்தக்கது.


( வி.ரி.சகாதேவராஜா)

தேசிய கணித ஒலிம்பியாட் போட்டியில் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி மாணவன் பிரதீபன் கேசித் தெரிவாகி சாதனை படைத்துள்ளார்.

பாணாடிருப்பை சேர்ந்த பிரதீபன் பிருந்தா தம்பதியினரின் மூத்த புதல்வனான கேசித் கடந்த புலமைப் பரிசில் பரீட்சையில் 170 புள்ளிகளைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தேசிய ஒலிம்பியாட் கணித விஞ்ஞான போட்டியில் தேசிய மட்டத்திற்கு பங்குபற்றிய மாணவர்களையும் மற்றும் தேசிய ஒலிம்பியாட் குழுவிற்கு தெரிவு செய்யப்பட்டிருக்கும் மாணவன்  பிரதீபன் கேசித்தையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று (29) திங்கட்கிழமை கல்லூரியில் நடைபெற்றது.

கல்லூரி அதிபர்  அருட்சகோதரர் ச.இ.றெஜினோல்ட் தலைமையில் கோலாகலமாக நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதீபன் கேசித் விசேடமாக பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

 


நூருல் ஹுதா உமர் 


இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு மூவரை பரிந்துரை செய்வதற்கான விஷேட பேரவை ஒன்றுகூடல் இன்று 2024.04.29 ஆம் திகதி பேராசிரியர் கொலின் என் பீரிஸ் அவர்களது தலைமையில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கொழும்பில் உள்ள Academic Program Centre இல் இடம்பெற்றது.


பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 03/2023 ஆம் இலக்க சுற்றுநிருபத்தில் கோரப்பட்டுள்ளத்தான் அடிப்படையில் பேரவை உறுப்பினர்கள், விண்ணப்பதாரிகளுக்கு ஏழு அளவுகோல்களின் (Criteria) கீழ் புள்ளிகள் இட்டு, பெற்ற அதிகூடிய புள்ளிகள் அடிப்படையில் மூவரை தெரிவு செய்தனர்.


இதன் அடிப்படையில் முதலாவதாக தற்போதைய உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்களும் இரண்டாவதாக பேராசிரியர் ஏ.எம். றஸ்மி அவர்களும் மூன்றாவதாக பேராசிரியர் எப். ஹன்ஸியா றவூப் ஆகியோர் அதிக புள்ளிகள் அடிப்படையில் பேரவையால் பரிந்துரை செய்யப்பட்டனர்.


தென்கிழக்கு பல்கலைக்கழக தற்போதைய உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்களது முதலாவது பதவிக்காலம் எதிர்வரும் 2024.08.09 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில் குறித்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றுநிருபத்துக்கமைய பல்கலைக்கழக பேரவையின் சார்பில் பதில் பதிவாளர் எம்.ஐ.எம். நௌபர் அவர்கள் விண்ணப்பங்களுக்கான அழைப்பை கடந்த 2024.02.08 ஆம் திகதி விடுத்திருந்தார்.


அதன் அடிப்படையில் தற்போதைய உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், பேராசிரியர் எப். ஹன்ஸியா றவூப், பேராசிரியர் ஏ.எம். றஸ்மி, பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன், பேராசிரியர் எம்.வி.எம். இஸ்மாயில், பேராசிரியர் ஏ.எம். முஸாதிக் மற்றும் கலாநிதி ஏ.சி.எம். ஹனஸ் உள்ளிட்ட ஏழுபேர் விண்ணப்பித்திருந்தனர்.


தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு இம்முறை தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மாத்திரமே விண்ணப்பித்திருந்தனர்.


 பல்கலைக்கழகத்துக்கு வெளியேயிருந்து எவரும் விண்ணப்பிக்கவில்லை.

கடந்த 2021.08. 09 ஆம் திகதியன்று பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்கள் 5 ஆவது உபவேந்தராக நியமிக்கப்பட்டிருந்தார். இன்று தெரிவு செய்யப்பட்டுள்ள குறித்த மூவரில் ஒருவரை ஜனாதிபதி ஆறாவது உபவேந்தராக நியமிப்பார்.

 ( வி.ரி. சகாதேவராஜா)

 காரைதீவு விளையாட்டுக் கழகத்தின் 40 வருட நிறைவை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட "விபுலவிருட்சம்" KSC@40 என்ற நூல் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

காரைதீவு விளையாட்டு கழகத் தலைவர் ரொட்டரியன் விஜயரெத்தினம் விஜயசாந்தன்  தலைமையில் காரைதீவு விபுலானந்தா மைதானத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன்  கலந்து சிறப்பித்தார்.

முதற் பிரதியை தலைவர் சாந்தன் பிரதம அதிதி மகேசனிடம் வழங்கி வைத்தார்.

ஏனைய அதிதிகளான அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன்    காரைதீவு பிரதேச செயலாளர்
சிவ. ஜெகராஜன் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் உள்ளிட்ட அதிதிகளுக்கும் அவர் வழங்கி வைத்தார்.

மலர் ஆசிரியர் முன்னாள் தலைவர் த.தவக்குமார் நூலாக்ககுழு ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா செயலாளர் எஸ்.கிருசாந் முன்னிலையில் நிகழ்வு நடைபெற்றது.

 


(வி.ரி.சகாதேவராஜா)


காரைதீவில் நடப்பாண்டின் கல்விச் சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

காரைதீவு விளையாட்டு கழகத்தின் 41 வது வருட சித்திரை புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது குறித்த சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

 கழகத் தலைவர் வி.விஜயசாந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கபொத சாதாரண தரத்தில் 9ஏ பெற்ற மற்றும் கபொத உயர்தர பரீட்சையில் 3ஏ சித்தி பெற்ற மாணவர்கள் 29 பேர் பெற்றோர்கள் முன்னிலையில் சான்றோரால் பாராட்டப்பட்டார்கள்.

பிரதம அதிதியான விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன்
ஏனைய அதிதிகளான அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன்    காரைதீவு பிரதேச செயலாளர்
சிவ. ஜெகராஜன் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் மற்றும் 
கழக போசகர்களான  வே.இராஜேந்திரன், வே.த.சகாதேவராஜா உள்ளிட்ட அதிதிகளும் கலந்துகொண்டு கௌரவித்தனர்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.