Showing posts with label sports. Show all posts

 


நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லமிச்சனேவுக்கு (Sandeep Lamichhane) அந்நாட்டு நீதிமன்றம் 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

அவர் 18 வயது யுவதியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

விசாரணைக்கு பின்னர் காத்மாண்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும், சம்பந்தப்பட்ட யுவதிக்கு நேபாள நாணயத்தில் சந்தீப் லாமிச்சானேவுக்கு இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அவருக்கு 3 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆகஸ்ட் 2022 இல் சம்பந்தப்பட்ட யுவதியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் குற்றம் சாட்டப்பட்டார், மேலும் அவர் மேற்கில் நடந்த லீக் கிரிக்கெட் போட்டிக்காக நேபாளத்திற்கு திரும்பியபோது கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவருக்கு பிணை வழங்கப்பட்டது, பிணையில் இருந்த அவர் மீண்டும் நாட்டின் தேசிய அணிக்காக விளையாடினார்.

 


கேப்டவுனில் தொடங்கியுள்ள இரண்டாவது டெஸ்டின் முதல் நாளிலேயே தென் ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் 55 ரன்களுக்குள் முடிவுக்கு வந்துள்ளது. அந்த அணியை ஆல் அவுட்டாக்க இந்தியாவுக்கு முதல் நாள் காலையில் வெறும் 23.2 ஓவர்கள் மற்றும் இரண்டு மணி நேரமே தேவைப்பட்டது. இந்திய தரப்பில் முகமது சிராஜ் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது தவிர பும்ரா மற்றும் முகேஷ் குமார் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.


முதல் டெஸ்டில் வெறும் மூன்றே நாட்களில் சரணடைந்த இந்திய அணி இரண்டாவது டெஸ்டை சிறப்பாக தொடங்கியுள்ளது. இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். தென் ஆப்ரிக்க அணி எடுத்த 55 ரன்களே டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக ஒரு அணி எடுத்த மிகக் குறைந்த ஸ்கோராகும்.


முதல் இன்னிங்சில் இந்தியாவுக்கு தென் ஆப்ரிக்காவும் பந்துவீச்சில் பதிலடி கொடுத்தது. சிறப்பாக இன்னிங்சை தொடங்கிய இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 153 ரன் எடுத்திருந்த நிலையில், அதன் பிறகு 11 பந்துகளில் ஒரு ரன் கூட எடுக்காமல் கைவசம் இருந்த 6 விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அதிசயம் நிகழ்ந்தது எப்படி?


இந்திய அணியில் அஸ்வின் நீக்கம்

பாக்சிங் டே டெஸ்டில் தோற்றுவிட்ட இந்திய அணி இரண்டாவது டெஸ்டில் வெல்ல முனைப்பு காட்டுகிறது. இந்திய அணியில் முழு உடல் தகுதியை எட்டிவிட்ட ரவீந்திர ஜடேஜா அணிக்குத் திரும்பியுள்ளார். இதனால், முதல் டெஸ்டில் விளையாடிய தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் நீக்கப்பட்டார்.


தென் ஆப்ரிக்க அணியில் அறிமுக வீரராக டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இடம் பெற்றார். லுங்கி நிகிடி அணிக்குத் திரும்பினார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கேஷவ் மகராஜ் தனது 50-வது டெஸ்டை விளையாடுகிறார். தென் ஆப்ரிக்க அணி 4 வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் ஒரு ஸ்பின்னருடன் விளையாடுகிறது.


இந்தியா அசத்தல் தொடக்கம்

கேப்டவுனில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி சார்பில் பும்ரா, சிராஜ் ஜோடி புதிய பந்தில் கலக்கலாக பந்துவீசி தென் ஆப்ரிக்க வீரர்களை திணறடித்தது.


பும்ரா 142 கி.மீ. வேகத்தில் இன்ஸ்விங்கர்களை வீச, மறுபுறம் முகமது சிராஜ் துல்லியமாக பந்தை பிட்ச் செய்தார். நான்காவது ஓவரில் ஆஃப் ஸ்டம்பிற்குள் பந்தை அவர் ஆங்கிள்-இன் செய்ய மார்க்ராம் விளையாடியே ஆக வேண்டிய கட்டாயம் வருகிறது. அவர் சற்று தாமதமாக ஆட, பந்து வெளிப்புற விளிம்பில் முத்தமிடு பின்னே செல்ல இளம் வீரர் ஜெய்ஸ்வால் அபாரமாக டைவ் அடித்த கேட்ச் செய்தார். எய்டன் மார்க்ரம் 2 ரன்களிலேயே பெவிலியன் திரும்பினார்.


55 ரன்களில் சுருண்ட தென் ஆப்ரிக்காபட மூலாதாரம்,GETTY IMAGES

சிராஜ் பந்துவீச்சில் சரிந்த தென் ஆப்ரிக்கா

மார்க்ரம்மை காலி செய்த பிறகு, சிராஜ், கடந்த டெஸ்டில் சதம் அடித்து இந்தியாவை தோல்விக்கு தள்ளிய டீன் எல்கர் விக்கெட்டிற்கு குறி வைத்தார். எல்கரின் ஸ்டம்புகளையும் உடலையும் நோக்கி சிராஜ் பந்துவீசினார். சிராஜ் வீசிய முதல் ஓவரிலேயே டீன் எல்கருக்கு எட்ஜ் ஆகி பந்து மிட்விக்கெட்டுக்கு மேல் பறந்தது.


இம்முறை, சிராஜ் ஸ்டம்புக்கு வெளியே வீசிய பந்தை டீன் எல்கர் அடித்தாட முற்பட்டார். அவரது பேட்டில் பின்புறம் பட்ட பந்து ஸ்டம்புகளை பதம் பார்த்தது. இதனால், தென் ஆப்ரிக்க அணி 8 ரன்களுக்கு இரண்டாவது விக்கெட்டை இழந்தது.


தொடக்கத்திலேயே அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்த தென் ஆப்ரிக்க அணி, அந்த அதிர்ச்சியில் இருந்து கடைசி வரை மீளவே இல்லை. 8 ரன்னுக்கு 2வது விக்கெட்டை இழந்த தென் ஆப்ரிக்கா, மேலும் 7 ரன்களை எடுப்பதற்குள்ளாக அடுத்த 2 விக்கெட்டுகளை இழந்தது. பும்ரா தன் பங்கிற்கு அறிமுக வீரர் டிரிஸ்டன் ஸ்டப்சை பெவிலியனுக்கு அனுப்ப, ஷோர்ஜியை சிராஜ் அவுட்டாக்கினார்.


55 ரன்களில் சுருண்ட தென் ஆப்ரிக்காபட மூலாதாரம்,GETTY IMAGES

சிராஜ் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தல்

இதன் பிறகு தென் ஆப்ரிக்க வீரர்கள் வருவதும் போவதுமாகவே இருந்தனர். ஒருவர் கூட களத்தில் நிலைக்கவிலைலை. இதனால் தென் ஆப்ரிக்க அணி 55 ரன்களுக்குள்ளாகவே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துவிட்டது. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக கைல் வெர்னான் 15 ரன்கள் எடுத்தார்.


தென்னாப்பிரிக்காவை 55 ரன்களுக்குள் கட்டுப்படுத்த இந்தியாவுக்கு முதல் நாள் காலையில் வெறும் 23.2 ஓவர்களும் இரண்டு மணி நேரமுமே தேவைப்பட்டன. இந்திய தரப்பில் முகமது சிராஜ் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ரா மற்றும் முகேஷ் குமார் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.


பும்ராவுக்கு பிறகு 2-வது வீரர் சிராஜ்

2016-ம் ஆண்டுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே செஷனில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் முகமது சிராஜ் ஆவார். முன்னதாக, ஜஸ்பிரித் சிங் பும்ரா இதனை சாதித்துள்ளார். சர்வதேச அளவில் டிரென்ட் போல்ட் (2 முறை), வெர்னான் பிலாண்டர், கிறிஸ் வோக்ஸ் ஆகியோருக்குப் பிறகு 5-வது வீரர் சிராஜ் ஆவார்.


55 ரன்களில் சுருண்ட தென் ஆப்ரிக்காபட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியா அதிரடி தொடக்கம்

தென் ஆப்ரிக்காவை 55 ரன்னுக்கு சுருட்டிய உத்வேகத்தில் இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. கேப்டன் ரோகித் சர்மாவும் இளம் வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலும் தொடக்க வீரர்களாக களம் கண்டனர். தென் ஆப்ரிக்க அணிக்காக முதல் ஓவரை நிகிடி வீசினார். காயத்தில் இருந்து மீண்டு ஓராண்டுக்குப் பிறகு சர்வதேச போட்டியில் ஆடும் அவர் இரண்டாவது பந்தையே நோபாலாக வீசினார்.


அடுத்த இரு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டிய ரோகித் சர்மா, அந்த ஓவரின் கடைசிப் பந்திலும் பவுண்டரி அடித்தார். இதனால் முதல் ஓவரில் மட்டும் இந்திய அணி 13 ரன்களை திரட்டியது.


இளம் வீரர் யாஷஷ்வி ஜெய்ஸ்வால் ஏமாற்றம்

இந்திய அணி முதல் இன்னிங்சை உற்சாகமாக தொடங்கிய நிலையில், ரபாடா வீசிய மூன்றாவது ஓவரில் முதல் பந்தில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஸ்டம்புகளை பறிகொடுத்தார். 7 பந்துகளை சந்தித்த அவர் ரன் ஏதும் எடுக்கவில்லை.


அடுத்து வந்த ஷூப்மன் கில், கேப்டன் ரோகித்துடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினார். இருவருமே அதிரடி காட்டியதால் இந்திய அணியின் ரன் ரேட் 6-க்கும் அதிகமாகவே தொடர்ந்து இருந்து வந்தது. இதனால், 9.4 ஓவர்களிலேயே தென் ஆப்ரிக்காவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரான 55 ரன்களைக் கடந்து இந்திய அணி முன்னிலை பெற்றது.


இந்தியா vs தென் ஆப்ரிக்காபட மூலாதாரம்,GETTY IMAGES

ரோகித் 39 ரன்களில் அவுட்

அதிரடியாக விளையாடி அசத்திய ரோகித் சர்மா அணியின் ஸ்கோர் 72ஆக இருந்த போது ஆட்டமிழந்தார். பர்கர் வீசிய பந்தில் ஜேன்சனிடம் கேட்ச் கொடுத்து அவர் பெவிலியன் திரும்பினார். 50 பந்துகளை எதிர்கொண்ட அவர் 7 பவுண்டரிகளுடன் 39 ரன்களை எடுத்தார். அடுத்து வந்த நட்சத்திர வீரர் கோலியும் அதிரடியாகவே ஆடினார்.


சுப்மன் கில் - கோலி ஜோடி இந்திய அணியை 100 ரன்களை எளிதாக கடக்கச் செய்தது. 19.5 ஓவர்களிலேயே இந்திய அணி 100 ரன்களை கடந்தது.


இந்தியா vs தென் ஆப்ரிக்காபட மூலாதாரம்,GETTY IMAGES

கில், ஸ்ரேயாஸ் அடுத்தடுத்து அவுட்

கில் - கோலி ஆகிய இருவருமே அபாரமாக ஆடியதால் இந்திய அணி வலுவான முன்னிலை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில், கில் விக்கெட்டை பர்கர் வீழ்த்தினார். அடுத்து வந்த ஸ்ரேயாசை தனது அடுத்த ஓவரில் பர்கர் சாய்த்தார். ஸ்ரேயாஸ் ரன் ஏதும் எடுக்காமலேயே பெவிலியன் திரும்பினார்.


அதன் பிறகு கே.எல்.ராகுல் களம் புகுந்தார். கோலியுடன் கைகோர்த்த ராகுல் விக்கெட் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தும் நோக்கில் நிதானமாக ஆடினார். இதனால், அணியின் ரன் ரேட் மந்தமானது.


இந்தியா vs தென் ஆப்ரிக்காபட மூலாதாரம்,GETTY IMAGES

பூஜ்யம் ரன்னுக்கு 6 விக்கெட்

வலுவான முன்னிலையை நோக்கி முன்னேறிய இந்திய அணி ஒரு கட்டத்தில் 4 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்களை எடுத்திருந்தது. அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. 33 பந்துகளில் 8 ரன்களை எடுத்திருந்த கே.எல்.ராகுல் நிகிடி பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் வெர்ரேனிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.


அதன் பிறகு என்ன நடந்ததென்றே தெரியவில்லை. ஸ்கோர் போர்டில் ஒரு ரன் கூட ஏறாத நிலையில், விக்கெட் மட்டும் மளமளவென சரிந்தது. ரவீந்திர ஜடேஜா, பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் ஒரு ரன் கூட எடுக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதற்கு நடுவே கோலி 46 ரன் எடுத்த நிலையில் ரபாடா பந்துவீச்சில் வீழ்ந்தார்.


4 விக்கெட் இழப்பிற்கு 153 ரன் எடுத்திருந்த இந்திய அணி அதன் பிறகு 11 பந்துகளில் ஒரு ரன் கூட எடுக்காமல் கைவசம் இருந்த 6 விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ், ஜடேஜா, பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் டக்அவுட் ஆயினர்.


இந்திய அணி 153 ரன்களில் ஆல்அவுட்டானது. இதன் மூலம் முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்காவை விட இந்திய அணி 98 ரன்கள் முன்னிலை பெற்றது. தென் ஆப்ரிக்கா தரப்பில் ரபாடா, நிகிடி, பர்கர் ஆகிய மூவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.


இந்தியா vs தென் ஆப்ரிக்காபட மூலாதாரம்,GETTY IMAGES

தென் ஆப்ரிக்கா இரண்டாவது இன்னிங்ஸ்

முதல் இன்னிங்சில் 98 ரன் பின்தங்கிய நிலையில் தென் ஆப்ரிக்க அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. மார்க்ரம் ஒருபுறம் நிலைத்து நிற்க மறுபுறம் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினர். டீன் எல்கர் 12 ரன்களிலும், டோனி டி ஷோர்ஜி 1 ரன்னிலும், அறிமுக வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 1 ரன்னிலும் வரிசையாக ஆட்டமிழந்தனர்.


முகேஷ் குமார் 2 விக்கெட்டுகளையும், பும்ரா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். முதல் இன்னிங்சில் அசத்தலாக பந்துவீசிய சிராஜூக்கு இன்னும் விக்கெட் கிடைக்கவில்லை.


முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்ரிக்க அணி இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி இந்திய அணியைக் காட்டிலும் இன்னும் 36 ரன்கள் பின்தங்கியுள்ளது. இதனால், தற்போதைய நிலையில் இரண்டாவது டெஸ்டில் இந்தியாவின் கை சற்று ஓங்கியுள்ளது என்றே சொல்லலாம்.


கேப்டவுன் மைதானத்தில் முதல் நாளிலேயே, அதாவது ஒரே நாளில் 23 விக்கெட்டுகள் சரிந்துள்ளன.


இந்தியா vs தென் ஆப்ரிக்காபட மூலாதாரம்,GETTY IMAGES

வரலாற்றில் இதுவே முதன் முறை

இந்த டெஸ்டில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் கடைசி 6 விக்கெட்டுகளை ஒரு ரன் கூட எடுக்காத நிலையில் இழந்துள்ளது. தென் ஆப்ரிக்க அணியோ கடைசி 11 பந்துகளில் இந்த 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளது.


நூறாண்டுக்கும் மேற்பட்ட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை நடந்துள்ள 2,522 போட்டிகளிலும் ஒருமுறை கூட இதுபோன்று நிகழ்ந்ததே இல்லை என்கிறது ஈ.எஸ்.பி.என். கிரிக்இன்ஃபோ வலைதளம். இந்திய அணி தான் முதன் முறையாக ஒரு ரன் கூட எடுக்காமல், அதாவது பூஜ்யம் ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை தாரை வார்த்துள்ளது. அந்த வகையில் இந்திய அணிக்கு இது மோசமான சாதனையாகும்.


இந்தியா சாதனை

தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக முதல் இன்னிங்சில் இந்திய அணி 9.4 ஓவர்களில் முன்னிலை பெற்றது. 2001-ம் ஆண்டுக்குப் பிறகு ஒரு அணி இவ்வளவு விரைவில் முன்னிலை பெறுவது இதுவே முதன் முறையாகும். இதற்கு முன்பாக, 2005-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்க்கு எதிராகவும், 2013-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராகவும் 11.2 ஓவர்களில் முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா முன்னிலை பெற்றதே சாதனையாக இருந்து வந்தது. அந்த இரு போட்டிகளும் இதே கேப்டவுன் மைதானத்தில் தான் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.


தென் ஆப்ரிக்க அணியால் மீண்டு வர முடியுமா?

இந்தியா - தென் ஆப்ரிக்கா இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்டை வென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. இந்த டெஸ்டில் வென்றால் மட்டுமே இந்திய அணியால் டெஸ்ட் தொடரை சமன் செய்ய முடியும். தென் ஆப்ரிக்க அணியால் முதல் இன்னிங்ஸ் வீழ்ச்சியில் இருந்து மீண்டு வர முடியுமா?


எம்.என்.எம்.அப்ராஸ்) 


அம்பாரை மாவட்டத்தில் முன்னணி விளையாட்டு கழகமான பாலமுனை ரைஸ் ஸ்டார் விளையாட்டு கழகத்தின் புதிய நிருவாக தெரிவு அல்-ஹிதாயா மகளிர் கல்லூரியில்(26)இடம்பெற்றது. 

இது இதன் போது கழகத்தின் செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடல்கள் இடம் பெற்றதுடன்,மற்றும் புதிய ஆண்டுக்கான (2024-2015)நிருவாக உறுப்பினர்கள் தெரிவும் இடம்பெற்றது இதன் போது கழகத்தின் தலைவராக மீண்டும் ஐ.எல்.எம்.பாயிஸ் தெரிவானதுடன்,செயலாளராக எம்.ஏ.சிபான்,பொருளாளராக எல்.எம்.ஹம்தான், உப தலைவராக வை.எம்.அசாம்,உப செயலாளர் ஏ.எல்.அஸ்மின்,நிர்வாக சபை உறுப்பினர்களாக எம்.எல்.எம்.மனாப்,எம்.எப்.பர்ஹான்,ஐ.எல்.எம். பாரிஸ்,எம்.ஏ.அப்துல்அலீம்,எம்.சாஜின்,எம்.ஏ.றினாஸ், ஏ.எம்.ஜுபான்,எம்.எப்.பர்ஸாத் ஆகியோரும்,ஏனைய விளையாட்டு பிரிவுகளின் தலைவர்களாகஎம்.ஐ.அஸாம் (உதைபந்து),ஏ.ஆர்.பையிஸ்(கிரிக்கட்),கே.ஆர்.கியாஸ்(எல்லே)ஏ.எல்.எம்.சீத்(கடினபந்து),ஏ.ஆசிக்(கடினபந்து உபதலைவர்),என்.நஸீல்(றகர்),ஏ.சனூஸ் (தடகளம்),ஏ.எல்.அம்ருல்லாஹ்(கபடி),எம்.என். இனாமுல் ஹக்(கரப்பந்து),வை.ஜர்பான்(ஹொக்கி) எம்.என்.எம்.முஸ்னித்(துரோபோல்),எம்.எச். றுகைமி அகமட்(ஊடகம்),என்.எம்.ஹாபிஸ் (கல்வி மேம்பாபாட்டுக்க்கான் இணைப்பாளர்) ஆகியோர் தெரிவானார்கள்.

 


அர்ஜுன ரணதுங்க தனது நண்பரின் மகளின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக பம்பாய் சென்றுள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரை நேற்று இரவு சந்தித்தார். படத்தில் இருக்கும் குழந்தை அர்ஜுனனின் பேரன்


 (வி.சுகிர்தகுமார்) 0777113659  


 சுமார் 6 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் தொழிலை இழந்துள்ளனர். சுமார் 1000 இற்கு மேற்பட்ட கல்விமான்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். 

என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.  

 விநாயகபுரம் மின்னொளி  விளையாட்டுக்கழகத்தின் 45 ஆவது வருட நிறைவை முன்னிட்டு நேற்று இரவு (10) இடம்பெற்ற மின்னொளியிலான இரவு நேர கிரிக்கெட் மற்றும் உதைபந்தாட்டப்போட்டிகளின் இறுதிப்போட்டியில் கிரிக்கெட் போட்டியில் பொத்துவில் 'பிறி லயன்ஸ் ' அணியும்,   உதைபந்தாட்ட போட்டியில் திருக்கோவில் 'குட்நிக்;' அணியும் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.
  இறுதிப்போட்டியில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்.

இழந்து 36 ஓட்டங்களை பெற்று எதிரணிக்கு 37 எனும் இலக்கை கொடுத்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பிறி லயன்ஸ்   5.5 ஓவர்கள் நிறைவினில் ஆறு விக்கட்டினை மாத்திரம் இழந்து 37 ஓட்டங்களை  பெற்று வெற்றி பெற்றது.


தொடர்ந்து நடைபெற்ற 30 கழகங்கள் கலந்து கொண்ட உதைபந்தாட்டப்போட்டியின் இறுதிப்போட்டிக்கு தெரிவான விநாயகபுரம் மின்னொளி மற்றும் திருக்கோவில் குட்நிக் அணிகள் சுவாரசியமான போட்டி ஒன்றை ரசிகர்களுக்கு வழங்கினர். ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியின் இறுதி வரை இரு அணிகளும் கோல் போட தவறின.
இறுதியாக தண்டனை உதைமூலம் வெற்றி வாய்ப்பினை வழங்க நடுவர் முடிவு செய்ய 3இற்கு 4 எனும் அடிப்படையில் திருக்கோவில் குட்நிக் அணி வெற்றி பெற்றது.

அம்பாரை மட்டக்களப்பு திருகோணமலை உள்ளிட்;ட மாவட்டங்களை சேர்ந்த அணிகள் போட்டித்தொடர்களில் பங்கேற்றதுடன் வெற்றியீட்டிய அணிகளுக்கும் வீரர்களுக்கும் பெறுமதியான வெற்றிக்கிண்ணங்களும் பணப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

வெற்றிக்கிண்ணங்களை வழங்கி வைத்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் உரையாற்றுகையில் சிறந்த முறையில் 45 வருடங்களாக விளையாட்டுத்துறை மாத்திரமன்றி கல்வித்துறைக்கும் அளப்பரிய பங்காற்றி வரும் மின்னொளி அணியினை பாராட்டினார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர் இந்த நாட்டிலே இடம்பெற்றுவரும் பொருளாதார நெருக்கடி காரணமாக சுமார் 6 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் தொழிலை இழந்துள்ளனர். சுமார் 1000 இற்கு மேற்பட்ட கல்விமான்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். கடந்த இருவருடங்களாக நிலவுகின்ற முறையற்ற பொருளாதார கொள்கையே இதற்கு காரணம்.
இந்நிலையில் எமது கையில் உள்ள ஓரே ஆயுதம் கல்வியாகும். போராட்டம் மௌனிக்கப்பட்டாலும் கல்வி என்கின்ற ஆயுதமே எம்மை பலப்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்தார்.

 


நூருல் ஹுதா உமர் 


மருதமுனை மனாரியன் 88 அமைப்பின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களின் கீழ் "மருதமுனை இளைஞர் விளையாட்டு கழகங்களுக்கு உதவுவோம்" எனும் செயற்திட்டத்தின் கீழ் அல் ஹாஜ் கலீல் முஸ்தபா அவர்களினால் மருதமுனையிலுள்ள விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுகின்ற நிகழ்வு மனாரியன் 88 அமைப்பின் பிரதான செயற்பாட்டாளர் ஐ.எல். முக்தார் அவர்களினால் முன்னெடுக்கப்படுகின்றன.

மேலும் மருதமுனையில் காணப்படுகின்ற சுமார் 33 இளைஞர் விளையாட்டு கழகங்களுக்கும் வருடாந்தம் உதவிகளை தொடர்ந்து வழங்கும் செயற்திட்த்தின் கீழ் இதுவரைக்கும் 11 கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த குறிப்பிட்ட செயற்திட்டம் தொடர்பாக மருதமுனை " ஈஸ்ட்டன் யூத் விளையாட்டு கழகம் மற்றும் பர்வின் ரெடிங் , லதான் அக்ரோ இன்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்களின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அல்-ஹாஜ் கலீல் முஸ்தபா அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் மருதமுனை பிரதான வீதி முஸ்தபா கட்டிட தொகுதியில் இன்று இடம் பெற்றது. 

இந் நிகழ்வில் மருதமுனை "ஈஸ்ட்டன் யூத் " விளையாட்டு கழகம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் சவால்கள் மற்றும் கழக கட்டமைப்பு, முன்னேற்றம் மற்றும் எதிர்கால உதவிகள் என்பன போன்ற விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டதுடன், விளையாட்டு உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன


 (நூருல் ஹுதா உமர்)


கிழக்கு மாகாண வெட்மிண்டன் சங்கத்தின் 2023/2027 ஆகிய நான்கு ஆண்டு காலப் பகுதிக்கான தலைவராக  ஓய்வுபெற்ற கல்வியல் கல்லூரி உதவி முதல்வர் எம்.எச்.எம். மன்சூர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண வெட்மிண்டன் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் நிருவாக சபை தேர்தலும் சாய்ந்தமருது தனியார் விடுதி கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே இவர் தெரிவுசெய்யப்பட்டார்.

மேலும் 2023/2027 ஆகிய நான்கு ஆண்டு காலப் பகுதிக்கான நிர்வாகசபையின் பிரதித் தலைவராக ஓய்வு பெற்ற ஆசிரிய ஆலோசகர் ஐ.எல்.எம். இப்ராஹிம் தெரிவு செய்யப்பட்டதுடன் உப தலைவர்களாக மட்டக்களப்பு மாவட்ட வெட்மிண்டன் சங்கத்தின் தலைவர் எஸ். ராஜேந்திரன், அம்பாறை மாவட்ட வெட்மிண்டன் சங்கத்தின் உப தலைவர் எம்.ஏ.எஸ்.பி. முனசிங்க, கல்முனை வலயக் கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர் ஏ.எம். அன்ஸார், சம்மாந்துறை பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் எல். சுலக்சன், ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி ஏ. எட்வார்ட் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதுடன் பொதுச்செயலாளராக இலங்கை வெட்மிண்டன் சங்கத்தின் உப தலைவர் ஆசிரியர் அலியார் பைஸர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

சங்கத்தின் பொருளாளராக தேசிய சேமிப்பு வங்கி முகாமையாளர் கே. சுரேஸும், பிரதி செயலாளராக காத்தான்குடி மத்திய கல்லூரி விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஏ.ஆர்.எம். சஜானும், உதவி செயலாளராக அட்டாளைச்சேனை அந் நூர் மகா வித்தியாலய ஆசிரியர் ஜெ. பஸ்மீரும், பிரதி பொருளாளராக மூதூர் முஸ்லிம் மத்திய கல்லூரி ஆசிரியர் ஏ.எச்.வை. அரபாத்தும், உதவி பொருளாளராக அம்பாறை மாவட்ட வெட்மிண்டன் சங்கத்தின் உப தலைவர் நிமால் அபேவிக்ரம வும் தெரிவு செய்யப்பட்டதுடன் கணக்கு பரிசோதகர்களாக சம்மாந்துறை கோரக்கர் மகா வித்தியாலய விளையாட்டு பயிற்றுவிப்பாளர் கே.எல்.எம். சக்கி மற்றும் லங்கா ஐ.ஓ.சி. கல்முனை முகாமையாளர் ஈ.எம். நௌஸர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

இந்த வருடாந்த பொதுக்கூட்டமும் நிர்வாக சபைத் தேர்தலின் போது கிழக்கு மாகாண வெட்மிண்டன் சங்கத்தின் சட்ட ஆலோசகர்களாக சிரேஷ்ட சட்டத்தரணிகளான கிழக்கு மாகாண வெட்மிண்டன் சங்கத்தின் முன்னாள் தலைவர் வி. வினோபா இந்திரன், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் ஆகியோர் சபையோரால் தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 


 71 வயதில் வெறும் காலுடன் ஓடி சாதனை படைத்த  அகிலம் அக்கா.


அண்மையில் பிலிப்பைன்ஸ் இல் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட முள்ளியவளை, முல்லைத்தீவை சேர்ந்த திருமதி அகிலத்திருநாயகி (ஓய்வு பெற்ற சிறைச்சாலைகள் உத்தியோகத்தர்) இரண்டு தங்கப் பதக்கங்களை பெற்றார்.


1500m ஓட்டம் _ தங்கப் பதக்கம்

5000m விரைவு நடை _தங்கப் பதக்கம்

800m  ஓட்டம் _வெங்கலப் பதக்கம்

5000m ஓட்டம்_நான்காம் இடம்

 


நடந்துகொண்ட விதம் குறித்து விமர்சனம்

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியர்கள் விளையாட்டுத் திறமையைக் காட்டவில்லை என்று தி கிரானிக்கிள் செய்தித்தாள் தலைப்புச் செய்தியை வெளியிட்டுள்ளது.


மேலும் அது, "காயம் மிகவும் ஆழமாக இருந்தது. ஆஸ்திரேலிய அணி கோப்பையுடன் கொண்டாடிய நேரத்தில், இந்திய வீரர்கள் மரியாதையின்றி நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்படுகிறார்கள்," என்று எழுதியிருந்தது.


இந்த உலகக்கோப்பைத் தொடரில் இதுவரை எந்தப் போட்டியிலும் தோல்வி அடையாத இந்திய அணிக்கு எதிராக வெற்றி பெற்றதால், இந்த வெற்றியும் சிறப்பு வாய்ந்தது என்று அந்த நாளிதழ் எழுதியிருக்கிறது.


"1 லட்சத்து 30 ஆயிரம் திறன் கொண்ட மைதானம் காலியாக இருந்த நேரத்தில் கோப்பையை ஒப்படைத்ததால், இந்த மாபெரும் சாதனையின் அளவை ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் அவரது குழுவினர் உணர்ந்திருக்க மாட்டார்கள்," என்று அந்த அறிக்கை கூறுகிறது.


"மேலும், கோப்பை ஆஸ்திரேலிய அணியிடம் ஒப்படைக்கப்பட்ட சமயம், இந்திய அணி களத்தில் எங்கும் காணப்படவில்லை," என்று அந்தச் செய்தி கூறுகிறது.


"இந்திய வீரர்கள் உணர்ச்சிவசப்பட்டிருக்கலாம் என்பது புரிந்துகொள்ளத்தக்கது. ஆனால் இது விளையாட்டின் நன்னடத்தைக்கு எதிரானது," என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


முன்னாள் இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் மைக்கேல் வாகன் இந்தச் செயலை வெளிப்படையாக விமர்சித்ததாக ‘தி க்ரோனிக்கிள்’ கூறுகிறது. ஆனாலும் அந்தப் பதிவு நீக்கப்பட்டுள்ளது.


இந்தியா, ஆஸ்திரேலியா, கிரிக்கெட் உலகக்கோப்பைபட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

தயார் செய்யப்பட்ட ஆடுகளம் இந்தியாவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியதாக ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்


'ஆடுகளம் இந்தியாவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது'

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் கருத்துகளை ‘ஹெரால்ட் சன்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில் அவர் ஆடுகளம் தொடர்பான இந்தியாவின் வியூகம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.


தயார் செய்யப்பட்ட ஆடுகளம் இந்தியாவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியதாக பாண்டிங் கூறியுள்ளார்.


"கடந்த மாதம் நடந்த லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அதே ஆடுகளத்தில்தான் உலகக் கோப்பை இறுதிப் போட்டியும் நடந்தது," என்று அவர் கூறியதாக அந்தச் செய்தித்தாள் எழுதுகிறது.


"பாட் கம்மின்ஸும் முந்தைய நாள் ஆடுகளம் குறித்து கவலை தெரிவித்திருந்தார். இறுதியில் ஆஸ்திரேலியா இலக்கை சிறப்பாகத் துரத்த புல்வெளி உதவியது," என்றிருக்கிறார் அவர்.


போட்டிக்குப் பிறகு ரிக்கி பாண்டிங் கூறுகையில், “இந்த ஆடுகளம் நான் எதிர்பார்த்ததை விட மெதுவாக இருந்தது. இது எதிர்பார்த்ததை விட குறைவாகவே சுழன்றது, ஆனால் அனைவரும் ஆடுகளத்திற்கு ஏற்றவாறு சிறப்பாக பந்து வீசினர்,” என்றார்.


போட்டிக்குப் பிறகு இந்திய கேப்டன் ரோகித் சர்மா, அணியின் தோல்விக்கு ஆடுகளத்தை காரணம் கூறவில்லை. அவர் "இரவு விளக்குகளின் கீழ் இது கொஞ்சம் சிறப்பாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும், ஆனால் இப்போது நான் எந்த காரணத்தையும் கூற விரும்பவில்லை," என்றார்.


வர்ணனையின் போது, பாண்டிங், “உண்மையைச் சொல்வதானால், ஆடுகளம் நன்கு தயாரிக்கப்பட்டதே, இந்தியாவுக்குப் பின்விளைவை ஏற்படுத்தியிருக்கலாம்," என்றார்.


அதே சமயம் ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய அணியைவிட ஆடுகளத்தை நன்றாகப் புரிந்துகொண்டதாக இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.


இந்தியா, ஆஸ்திரேலியா, கிரிக்கெட் உலகக்கோப்பைபட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

'நரேந்திர மோதி ஸ்டேடியத்தில் நிலவிய அமைதி கம்மின்ஸுக்கும் அவரது அணியினருக்கும் பொன்னான தருணம்' என்று ஒரு பத்திரிகை எழுதியிருக்கிறது


'ஆஸ்திரேலிய வீரர்களின் குரல் மட்டுமே மைதானத்தில் எதிரொலித்தது'

‘தி ஏஜ்’ பத்திரிகை, ‘90,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சத்தம் எழுப்பிய மைதானத்தில், விராட் கோலியின் விக்கெட் வேரோடு பிடுங்கப்பட்ட சத்தத்திற்குப் பிறகு, 11 ஆஸ்திரேலிய வீரர்களின் உற்சாகக் குரல்கள் மட்டுமே கேட்டன,’ என்று எழுதியிருக்கிறது.


அது மேலும், "கோலியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், கம்மின்ஸ் தனது அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார், பின்னர் மீதமுள்ள பணியை டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஸ் லபுசேன் இடையேயான 192 ரன்களின் பார்ட்னர்ஷிப் மூலம் முடித்தார்," என்று எழுதியிருக்கிறது.


“ஆடுகளத்தை விட்டு கோலி வெளியேறினாலும், ஹெட்டின் சதம் அடித்த தருணத்தில், நரேந்திர மோதி ஸ்டேடியத்தில் நிலவிய அமைதி கம்மின்ஸுக்கும் அவரது அணியினருக்கும் பொன்னான தருணம். இந்திய பிரதமர் நரேந்திர மோதி கூட கோப்பையை கம்மின்ஸிடம் ஒப்படைக்க தாமதப்படுத்தினார்,” என்று அந்தச் செய்தித்தாள் எழுதியிருக்கிறது.


இந்தியா, ஆஸ்திரேலியா, கிரிக்கெட் உலகக்கோப்பைபட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இந்தியாவைத் தோற்கடித்து உலகக் கோப்பையை வென்றது தனது அணியின் மிகப்பெரிய சாதனை என்று கேப்டன் பாட் கம்மின்ஸ் கருதுகிறார்


கம்மின்ஸ் ஒரு துணிச்சலான தலைவர் என்பதை நிரூபித்தார்

‘தி சண்டே மார்னிங் ஹெரால்ட்’ பத்திரிகை, 'இந்தியாவில் உலகக் கோப்பையை வெல்வது கிரிக்கெட்டின் உச்சம்’, என்று கூறியதாக எழுதியிருக்கிறது.


இந்தியாவைத் தோற்கடித்து ஆஸ்திரேலியா உலகக் கோப்பையை வென்றது தனது அணியின் மிகப்பெரிய சாதனை என்று கேப்டன் பாட் கம்மின்ஸ் கருதுவதாக அந்தச் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.


கம்மின்ஸ், “இது சர்வதேச கிரிக்கெட்டின் உச்சம் என்று நான் நினைக்கிறேன், குறிப்பாக இந்தியாவில் இதுபோன்ற பார்வையாளர்களுக்கு முன்னால் வெற்றி பெற்றது. இது நம் அனைவருக்கும் மிகவும் சிறப்பான ஆண்டாகும். எங்கள் அணி ஆஷஸ் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பையும் வென்றுள்ளது. இது வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும்,” என்று அவர் கூறியதாக அச்செய்தித்தாள் கூறுகிறது.


மேலும், கம்மின்ஸைப் பாராட்டி எழுதியிருக்கும் அந்த நாளிதழ், “முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறும் அபாயத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணியை, அடுத்த ஒன்பது போட்டிகளிலும் வெற்றிபெறச் செய்த கம்மின்ஸ் ஒரு துணிச்சலான மற்றும் தீர்க்கமான கேப்டன் என்பதை நிரூபித்துள்ளார்," என்று கூறியிருக்கிறது.


தமிழ்நாட்டில் சோழர்கள் ஆட்சியில் விற்பனை செய்யப்பட்ட அடிமைகளின் வரலாறு

18 நவம்பர் 2023

ஏ.டி.எம். கார்டு வைத்திருந்தாலே விபத்து, ஆயுள் காப்பீடுகள் உண்டு - எப்படி பெறுவது?

18 நவம்பர் 2023

பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் நீங்கள் பார்க்கும் வீடியோ மூலம் இவர்கள் சம்பாதிப்பது எப்படி?

7 நவம்பர் 2023

ODI விதியை மாற்றக் கோரிக்கை

ஒருநாள் கிரிக்கெட்டின் விதியை மாற்றுமாறு கோரிய மிட்செல் ஸ்டார்க்கின் கருத்தை கெய்ர்ன்ஸ் போஸ்ட் பத்திரிகை வெளியிட்டுள்ளது.


ஒருநாள் போட்டிகளில் இரண்டு புதிய பந்துகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற விதியை மாற்ற வேண்டும் என்று மிட்செல் ஸ்டார்க் கருதுகிறார்.


ஏனெனில் இது ஆட்டத்தை பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக மாற்றியுள்ளது. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் இந்த உலகக் கோப்பையின் எட்டு ஆட்டங்களில் சராசரியாக 43.40 மற்றும் எகானமி ரேட் 6.55-இல் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இது அவர்களின் சிறந்த செயல்திறன் அல்ல, 2015 மற்றும் 2019 உலகக் கோப்பைகளை விட மோசமானது."


ஸ்டார்க், தனது திறமைக்கு ஏற்றவாறு செயல்படவில்லை என்பதை ஒப்புக்கொண்டதாகக் கூறினார், ஆனால் 25 ஓவர்களுக்குப் பிறகு புதிய பந்தைப் பயன்படுத்துவது ரிவர்ஸ் ஸ்விங்கை மிகவும் கடினமாக்கியது, குறிப்பாக பகலில்.


இந்த உலகக் கோப்பையில் பகலில் பந்துவீசும்போது ஸ்டார்க் பவர் பிளேயில் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. ஆனால் இந்தியா மற்றும் நெதர்லாந்துக்கு எதிராக இரவில் பந்துவீசும்போது சிறப்பாகச் செயல்பட்டார்.


"நான் ஒரு பந்து தான் பயன்படுத்தப்பட வேண்டும் என்று நினைக்கிறேன், இரண்டு அல்ல," என்று அவர் கூறினார்.



 இன்று நடக்கும் உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சற்று தடுமாற்றத்துடனே ஆடியது. 100 ரன்களை எட்டுவதற்குள்ளாக 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை கோலி - லோகேஷ் ராகுல் ஜோடி காப்பாற்றியது. ஆனாலும் அந்த ஜோடியும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. இந்திய அணி 240 ரன்களில் ஆல் அவுட்டானது.

அதனைத் தொடரந்து இந்தியா நிர்ணயித்த 241 ரன் இலக்கை டிராவிஸ் ஹெட் சதத்தின் உதவியுடன் ஆஸ்திரேலிய அணி எளிதாக எட்டியுள்ளது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா இறுதிப் போட்டியில் மீண்டும் ஒருமுறை ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்துள்ளது.

இரு அணிகளிலும் மாற்றம் இல்லை
இரு அணிகளுமே எந்தவிதமான மாற்றமும் இன்றி களமிறங்கியுள்ளன. இந்திய அணியில் அஸ்வின் இடம் பெறுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அஸ்வினுக்கு இடமில்லை. வழக்கம் போல், ஜடேஜா, குல்தீப் ஆகிய இரு சுழற்பந்துவீச்சாளர்கள் மட்டுமே உள்ளனர்.

ஆனால், ஆஸ்திரேலியாவில் மேக்ஸ்வெல், ஆடம் ஸம்பா, டிராவிஸ் ஹெட் ஆகிய 3 சுழற்பந்துவீச்சாளர்கள் இருப்பது பெரிய பலம். இதில் டிராவிஸ் ஹெட், மேக்ஸ்வெல் முழுநேர சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லாவிட்டாலும் இருவரும் ஆட்டத்தை எந்த நேரத்திலும் திருப்பக்கூடியவர்கள்.

இந்தியா vs ஆஸ்திரேலியா: ரோகித், கோலி, ஷமி 20 ஆண்டு ஏக்கத்தை இன்று தீர்ப்பார்களா?பட மூலாதாரம்,GETTY IMAGES
இந்தியாவுக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி
ஆமதாபாத்தில் இன்று நடக்கும் உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது.

ரோஹித் சர்மா, சுப்மான் கில் ஆட்டத்தைத் தொடங்கினர். மிட்செல் ஸ்டார்க் வீசி ய முதல் ஓவரில் 3 ரன்கள் மட்டுமே இந்திய அணி சேர்த்தது. ஹேசல்வுட் வீசிய 2வது ஓவரில் மிட்விக்கெட்டிலும், கவர்ஸ் திசையிலும் 2 பவுண்டரிகளை விளாசினார்.

ஹேசல்வுட் வீசிய 4வது ஓவரில் ஷார்ட் பாலை, ரோஹித் சர்மா கிராஸ்பேட் ஷாட் மூலம் சிக்ஸருக்குப் பறக்கவிட்டார். அடுத்த பந்தை மிட்-ஆன் திசையில் பவுண்டரிக்கு விரட்டி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். 5வது ஓவரை ஸ்டார்க் வீசினார். 2வது பந்தை மிட்-ஆன் திசையில் ஸம்பாவிடம் கேட்ச் கொடுத்து கில் 4 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

ஆனால், மறுமுனையில் கேப்டன் ரோகித் சர்மா வழக்கம் போல் அதிரடியில் மிரட்டினார். இதனால், இந்திய அணி 6.3 ஓவர்களில் 39 பந்துகளில் 50 ரன்களை எட்டியது.

ஸ்டார்க் வீசிய 7வது ஓவரில் லென்த்தில் வீசப்பட்ட பந்தை கோலி பவுண்டரிக்கு விரட்டினார். 2வது பந்திலும் அவுட்சைட் ஆஃப்சைடில் வீசப்பந்தை கட் செய்து பவுண்டரிக்கு அனுப்பினார். ஸ்டார்க் வீசிய 3பந்தை மிட் ஆஃப் திசையில் தட்டிவிட்டு கோலி ஹாட்ரிக் பவுண்டரி விளாசினார். இந்திய அணி 7-வது ஓவரில் 50 ரன்களை எட்டியது.

மேக்ஸ்வெல் 8வது ஓவரை வீச அழைக்கப்பட்டார். மேக்ஸ்வெல் பந்துவீச்சை ரோஹித், கோலி நிதானமாகவே அணுகினர். 5வது பந்தில் கோலி பவுண்டரிக்கு அனுப்பினார்.

மேக்ஸ்வெல் 10வது ஓவரை வீசினார். 2வது பந்தில் ரோகித் சர்மா இறங்கிவந்து லாங்-ஆன் திசையில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார், மூன்றாவது பந்தில் கவர்ஸ் திசையில் பவுண்டரி அடித்தார். ஆனால், 4வது பந்தை ரோகித் கவர் திசையில் அடித்த பந்தை ஓடிச் சென்று டிராவிஸ் ஹெட் அருமையான கேட்ச் பிடித்தார்.

ரோகித் சர்மா 31 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடங்கும். 10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் சேர்த்திருந்தது.

பேட் கம்மின்ஸ் 11வது ஓவரை வீசினார். முதல் பந்தை கம்மின்ஸ் லென்த்தில் வீச கோலி தட்டிவிட்டு ஒரு ரன் எடுத்தார். அடுத்த பந்தை ஸ்ரேயாஸ் சந்தித்தார். துல்லியமாக வீசப்ப்பட்ட பந்துக்கு ஸ்ரேயாஸ் தாமதமாக ரெஸ்பான்ஸ் செய்யவே அவுட்சைட் எட்ஜ் எடுத்து கேட்சானது. 4 ரன்னில் ஸ்ரேயாஸ் ஆட்டமிழந்தார்.

கோலி - லோகேஷ் ராகுல் நிதான ஆட்டம்
இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்தபின் பேட்டிங்கில் சற்று நிதானம் காட்டத் தொடங்கியது. கோலி, ராகுல் இருவரும் ஆடம் ஸம்பா, மேக்ஸ்வெல் பந்துவீச்சை எச்சரிக்கையுடனே கையாண்டனர். 16.4 ஓவர்களில் இந்திய அணி 100 ரன்களை எட்டியது.

ரோகித் சர்மா களத்தில் இருந்தவரை இந்திய அணி 6.3 ஓவர்களில் 39 பந்துகளில் 50 ரன்களை எட்டியது. ஆனால், அடுத்த 50 ரன்களை எட்டுவதற்கு, 55 பந்துகளை எடுத்துக்கொண்டது. அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்ததால், ரன் ரேட் வேகமும் குறைந்தது.

இந்திய அணியின் ரன் வேகம் 10 ஓவர்களாகக் குறைந்துவிட்டது. 11வது ஓவர்கள் முதல் 20வது ஓவர்கள் வரை இந்திய அணி ஒருபவுண்டரி கூட அடிக்கவில்லை. 10 ஓவர்கள் முடிவில் 80 ரன்கள் சேர்த்திருந்த இந்திய அணி அடுத்த 10 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் மட்டுமே சேர்த்தது. விராட் கோலி - லோகேஷ் ராகுல் ஜோடி களத்தில் நிலைத்து ஆடியது.

இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்பட மூலாதாரம்,GETTY IMAGES
விராட் கோலி அவுட்
விக்கெட் சரிவை தடுத்து நிறுத்த இந்திய அணியின் மந்தமான ஆட்டம் தொடர்ந்தது. 25 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் சேர்த்திருந்தது. 20 ஓவர்களில் 115 ரன்கள் சேர்த்திருந்த இந்திய அணி அடுத்த 5 ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே சேர்த்தது. விராட் கோலி 56 பந்துகளில் அரைசதம் அடித்தார்

இந்த உலகக்கோப்பையின் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டே ரன்களில் இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்து தவித்த போது நிலைத்து ஆடி இந்தியாவை கரை சேர்த்த இந்த ஜோடி இம்முறையும் சாதிக்கும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு சிறிது நேரத்தில் பொய்த்துப் போனது.

சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கோலி - லோகேஷ் ராகுல் ஜோடி 29-வது ஓவரில் பிரிந்தது. ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் வீசிய அந்த ஓவரின் மூன்றாவது பந்தை விராட் கோலி தடுத்து ஆட, பேட்டில் பட்டு ஸ்டம்புகளை பதம் பார்த்தது.

ராகுல்-கோலி கூட்டணி 4-வது விக்கெட்டுக்கு 67ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். இந்திய அணி 30 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் சேர்த்ததது.

இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்பட மூலாதாரம்,GETTY IMAGES
ரவீந்திர ஜடேஜா ஏமாற்றம்
ரவிந்திரா ஜடேஜா, ராகுலுடன் சேர்ந்து ஆடினார். சுழற்பந்துவீச்சாளர்கள் மேக்ஸ்வெல், ஆடம்ஸம்பா, ஹெட் ஆகியோரின் பந்துவீச்சை எதிர்கொண்டு ஆட மிகுந்த சிரமப்பட்டார். பொறுப்புடன் ஆடிய கேஎல் ராகுல் 86 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

ஹேசல்வுட் வீசிய 36-வது ஓவரில் ஜடேஜா 9 ரன்னில் விக்கெட் கீப்பர் இங்கிலிஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்திய் அணி 5-வது விக்கெட்டை இழந்தது. இந்திய அணியின் ரன் ரேட் ரோஹித் சர்மா இருந்தபோது, 8 ரன்ரேட்டில் பயணித்தது, ஆனால், 35 ஓவரின்போது 4 ரன்ரேட்டாகக் குறைந்தது. ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய பேட்டர்கள் திணறினர்.

இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்பட மூலாதாரம்,GETTY IMAGES
16 ஓவர்களுக்குப் பின் பவுண்டரி
இந்திய அணி கடைசியாக 10 ஓவர்களில் பவுண்டரி அடித்தது. அதன்பின் 16ஓவர்களாக பவுண்டரி அடிக்கவில்லை. ஏறக்குறைய 16 ஓவர்களுக்குப் பின் மேக்ஸ்வெல் வீசிய 27-வது ஓவரில் ராகுல் பவுண்டரி அடித்தார்.

20 ஓவர்கள் முதல் 30 ஓவர்கள் வரை இந்திய அணி, 35 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

28 ஓவர்களில் ஒரு பவுண்டரி
40 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி 28 ஓவர்களில் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்திருந்தது. கடைசியாக 10 ஓவரில் ஒரு பவுண்டரி அடித்ததற்கு பின், 27-வது ஓவரில் ஒரு பவுண்டரியும், அடுத்த 20 ஓவர்களில் ஒரு பவுண்டரியும் இந்திய அணி அடித்தது. கடைசியாக ஸம்பா வீசிய 39-வது ஓவரின் கடைசிப்பந்தில் சூர்யகுமார் பவுண்டரி அடித்தார்.

ராகுல் விக்கெட்டும் காலி
இந்திய அணி 41-வது ஓவரில் 200 ரன்களை எட்டியது. 42-வது ஓவரை ஸ்டார்க் வீசினார். ஸ்டார்ஸ் வீசிய 3-வது பந்து லேசாக லெக் கட்டராக வந்தது, இதைக் கணிக்காமல் ராகுல் பேட்டை வைக்க பந்து பேட்டில் பட்டு விக்கெட் கீப்பர் இங்கிலிஸிடம் கேட்சானது. ராகுல் 66ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷமி வந்த வேகத்தில் லெக்திசையில் ஒரு பவுண்டரி அடித்தார்.

ஷமியும் வீழ்ந்தார்
ஸ்டார்க் 44வது ஓவரை வீசினார். 250 ரன்கள் சேர்த்துவிட்டால் டிபெண்ட் செய்துவிடலாம் என்ற நம்பிக்கையில் சூர்யகுமார், ஷமி பேட் செய்தனர். ஆனால் ஸ்டார்க் வீசிய பந்து நன்றாக ரிவர்ஸ்ஸ்விங் ஆகத் தொடங்கியது. ஸ்டார்க் வீசிய 3-வது பந்து லென்த்துக்கு மேல் வந்ததால் அதை அடிக்க முற்பட்டார் ஷமி ஆனால், பந்து அவரை ஏமாற்றிவிட்டு, பேட்டில்பட்டு விக்கெட் கீப்பர் இங்கிலிஸிடம் கேட்சானது. ஷமி 6 ரன்னில் வெளியேறினார்.

37 ரன்களுக்கு 4 விக்கெட்
அடுத்து வந்த பும்ராவும் விக்கெட்டை நிலைப்படுத்தப் போராடினார். ஆனால், பும்ரா வந்தவுடன் ஆடம் ஸம்பா பந்துவீச அழைக்கப்பட்டார். ஸம்பா வீசிய 45-வது ஓவரில் பும்ரா கால்காப்பில் வாங்கி ஒரு ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

இந்திய அணி 178 ரன்கள்வரை 4 விக்கெட்டுகளை இழந்து வலுவாக இருந்தது. ஆனால், அதன்பின் 37 ரன்களுக்குள் கடைசி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

குல்தீப் ஏன் முன்பே களமிறங்கவில்லை?
ஸ்டார்க் வீசிய 46-வது ஓவரில் ஒரு ரன் எடுத்து குல்தீப்பிடம் ஸ்ட்ரைக்கை சூர்யகுமார் ஒப்படைத்தார். ஸ்டார்க் ஓவரை எப்படி சமாளிக்கப் போகிறார் குல்தீப் என்று வியந்த நிலையில் அருமையாக டிபெண்ட் செய்து, ரன்களைச் சேர்த்தார். குல்தீப் யாதவ் டெய்லெண்டராக இருந்தபோதிலும் ஓரளவுக்கு சிறப்பாக பேட் செய்தார். ஆனால், ஏன் ஷமிக்கு முன்பாக குல்தீப்பை களமிறக்கவில்லை என்ற கேள்வியை வர்ணனையாளர்கள் முன்வைத்தனர்.

பந்து வராமலே ஆட்டமிழந்த சூர்யகுமார்
கம்மின்ஸ் 48-வதுஓவரை வீசினார். கம்மின்ஸ் பந்துவீச்சுக்கு சூர்யகுமார் தொடக்கத்தில் இருந்தே திணறினார். அவர் வீசிய ஸ்லோ பவுன்ஸரில் ரன் சேர்க்க முடியாமல் பேட்டை சுழற்றினார் சூர்யார். ஆடுகளம் மெதுவாக மாறிவிட்ட நிலையில் ஹேசல்வுட் ஸ்லோ பவுன்ஸர் தொடர்ந்து வீச, சூர்யகுமார் திணறினர். பந்து வருவதற்கு முன்பாகவே சூர்யகுமார் பேட்டை சுழற்றி குழப்பமடைந்தார். ஹேசல்வுட் வீசிய 3-வது பந்தில், பந்து வருவதற்கு முன்பாகவே சூர்யகுமார் பேட்டை சுழற்ற பந்து தாமதமாக வந்து கிளவ்வில் பட்டு விக்கெட் கீப்பர் இங்கிலிஸிடம் சென்றது. சூர்யகுமார் 18 ரன்னில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் விரித்த வலையில் சிக்கி ஆட்டமிழந்து வெளியேறினார்.

இந்த உலகக் கோப்பைத் தொடர் முழுவதும் சூர்யகுமார் யாதவ் பெரிதாக எந்த இன்னிங்ஸும் ஆடவில்லை. கிடைத்த வாய்ப்புகளையும் பயன்படுத்தவில்லை. மிகவும் அருமையான வாய்ப்பாக அமைந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும் 360 டிகிரி வீரர் ஏதாவது செய்வார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே இருந்தது.

இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்பட மூலாதாரம்,GETTY IMAGES
ரசிகர்களை குஷிப்படுத்திய சிராஜ்
50-வது ஓவரை ஹேசல்வுட் வீசினார். முதல் பந்தில் குல்தீப் ஒரு ரன் எடுக்க, 2வது பந்தை சிராஜ் எதிர்கொண்டார். நீண்ட நேரத்துக்குப்பின் பவுண்டரி அடித்து சிராஜ் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். கடைசிப்பந்தில் இரு ரன்கள் எடுக்க முயன்று குல்தீப் 10 ரன்னில் ரன் அவுட்ஆகினார்.

50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 240 ரன்களுக்கு ஆட்டமிழந்து 241 ரன்களை ஆஸ்திரேலிய அணிக்கு இலக்காக நிர்ணயித்தது.

ஆஸ்திரேலியத் தரப்பில் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், ஹேசல்வுட், கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

இந்தியா - பாகிஸ்தான் லீக் ஆட்டத்தில் என்ன நடந்தது?
உலகக்கோப்பை இறுதிப்போட்டி நடைபெறும் இதே மைதானத்தில்தான் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய லீக் ஆட்டம் நடைபெற்றது. அதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 191 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதனை துரத்திய இந்திய அணி 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 30-வது ஓவரில் வெற்றி பெற்றது.

பந்துவீச்சில் இந்தியா பதிலடி
241 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. 1.30 லட்சம் ரசிகர்களுக்கு மத்தியில் இந்திய பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வது அவ்வளவு எளிதானது அல்ல என்பது ஆஸ்திரேலிய பேட்டர்களுக்குத் தெரியும்.

இதனால் தொடக்கம் முதலே மிகுந்த கவனத்துடன் ஒவ்வொரு பந்துகளையும் எதிர்கொண்டனர். பும்ரா வீசிய முதல் ஓவரில் டிராவிஸ் ஹெட் 2 பவுண்டரிகள் உள்பட 15 ரன்கள் சேர்த்தார்.

இந்த உலகக் கோப்பை முழுவதும் ஷமியின் பந்துவீச்சு மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியநிலையில் அவர் 2வது ஓவரை வீச வந்தார். ஷமி வீசிய ஓவரில் 2வது பந்து ஆஃதிசையில் விலகிச் செல்லவே அதை வார்னர் தொட, ஸ்லிப்பில் நின்றிருந்த கோலியிடம் கேட்சானது. வார்னர் 7 ரன்னில் வெளியேறினார். வார்னர் விக்கெட்டை ஷமி வீழ்த்தியவுடன் அரங்கில் இருந்த ரசிகர்களின் முழக்கம், அரங்கையே அதிரவைத்தது.

அடுத்து மிட்ஷெல் மார்ஷ் களமிறங்கி, ஹெட்டுடன் சேர்ந்தார். இருவருமே ஆபத்தான பேட்டர்கள் என்பதால், இருவரின் விக்கெட்டுகளை வீழ்த்த இந்தியப் பந்துவீச்சாளர்கள் கடும் சிரமப்பட்டனர். பும்ரா வீசிய 3-வது ஓவரில் ஆஸ்திரேலியா ஒரு ரன் மட்டுமே எடுத்தது.

ஷமி வீசிய 4-வது ஓவரை மார்ஷ் சந்தித்தார். 3-வது பந்தில் மிட்-ஆஃப் திசையில் மார்ஷ் சிக்ஸர் விளாச, ரசிகர்கள் அனைவரையும் நிசப்தமாக்கினார். 4-வது ஓவரை பும்ரா வீசினார். பும்ராவின் ஒவ்வொரு பந்தும் மிகத் துல்லியமாக ஈட்டிபோல் இறங்கியதால் மார்ஷ் எதிர்கொள்ளத் திணறினார். 3-வது பந்தை அடிக்க முற்பட்டு, விக்கெட் கீப்பர் ராகுலிடம் கேட்ச் கொடுத்து மார்ஷ் 15 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்பட மூலாதாரம்,GETTY IMAGES
டிஆர்எஸ்-ஸை தவறவிட்ட ஸ்மித்
அடுத்து ஸ்டீவன் ஸ்மித் களமிறங்கி, டிராவிஸ் ஹெட்டுடன் சேர்ந்தார். ஷமி வீசிய 6-வது ஓவரில் ஆஸ்திரேலியா ஒரு ரன் மட்டுமே சேர்த்தது. 7-வது ஓவரை பும்ரா வீசினார். பும்ராவின் பந்துவீச்சில் அனல் தெறித்தது, துல்லியத்தன்மையும், லைன்லென்த்தும் கச்சிதமாகவும் இருந்ததால் ஸ்மித்தும், டிராவிஸ் ஹெட்டும் தடுமாறினார். இருப்பினும் 4-வது பந்தில் மிட்ஆன் திசையில் ஸ்மித் பவுண்டரி அடித்தார்.

கடைசிப் பந்தை ஸ்மித்துக்கு ஸ்லோவாக பும்ரா வீசினார். ஆனால் சற்றும் எதிர்பாராத ஸ்மித் கால்காப்பில் வாங்கினார்.இந்திய வீரர்களின் கோரிக்கையால், களநடுவரும் அவுட் வழங்கினார்.

இதற்கு டிஆர்எஸ் எடுக்காமல் ஸ்மித்தும் மவுனமாக வெளியேறினார். ஆனால், ஸ்மித் சென்றபின் பால்டிராக்கிங்கில் பார்த்தபோது பந்து ஸ்டெம்பில் படவில்லை என்பது தெரியவந்தது. டிஆர்எஸ் எடுக்காமல் ஸ்மித் தவறு செய்து, விக்கெட்டை இழந்து 4 ரன்னில் வெளியேறினார்.

பும்ரா 2வது விக்கெட்டை வீழ்த்தியதும் அரங்கில் இருந்த லட்சக்கணக்கான ரசிகர்கள் கரகோஷத்தாலும், முழக்கத்தாலும் ஆரவாரம் செய்த சத்தம் விண்ணைப் முட்டியது.

இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்பட மூலாதாரம்,GETTY IMAGES
அடுத்து லபுஷேன் களமிறங்கி, டிராவிஸ் ஹெட்டுடன் இணைந்தார். ஷமி வீசிய 8-வது ஓவர் மெய்டனாக அமைந்தது. பும்ரா வீசிய 9-வது ஓவரும் மெய்டனாக வீசினார். இரு ஓவர்களையும் பும்ரா, ஷமியும் மெய்டன்களாக வீசி ஆஸ்திரேலிய பேட்டர்களுக்கு கடும் நெருக்கடி அளித்தனர். ஷமி வீசிய 10-வது ஓவரில் ஹெட் 2 பவுண்டரிகளை விளாசினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் சேர்த்திருந்தது.

20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி3 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் சேர்த்தது. 10 ஓவர்களில் 60 ரன்கள் சேர்த்த ஆஸ்திரேலியா அடுத்த 10 ஓவர்களில் 44 ரன்கள் சேர்த்து ஒரு விக்கெட்டை இழந்தது.

டிராவிஸ் ஹெட் அரைசதம்
21-வது ஓவரை குல்தீப் வீசினார். 2வது பந்தில் ஹெட் ஒரு ரன் எடுத்து, 58-பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். கடும் நெருக்கடி, அழுதத்துக்கு மத்தியில் நிலைத்து ஆடி, ஹெட் சிறப்பாக அரைசதம் அடித்தார். குல்தீப் வீசிய 3-வது பந்தில் லாபுஷேன் பவுண்டரி விளாசினார். கடைசி 5 ஓவர்களில் 24 ரன்கள்வரை ஆஸ்திரேலியா சேர்த்தால் ஷமி பந்துவீச அழைக்கப்பட்டார்.

ஷமி வீசிய 23-வது ஓவரில் ஹெட் பவுண்டரி உள்பட 5 ரன்கள் சேர்த்தார். அடுத்து, ஜடேஜா வீசிய 25-வது ஓவரின் முதல் பந்தில் ஹெட் பவுண்டரி விளாசினார். 25 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 135ரன்கள் சேர்த்து வெற்றஇயை நோக்கி நகர்ந்தது.

இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்பட மூலாதாரம்,GETTY IMAGES
உதிரிகளால் பாதிப்பு
இந்திய அணி 10 ஓவர்கள் முடிவில் உதிரிகள் எண்ணிக்கையில் 17 ரன்களை கொடுத்திருந்தது. இது இந்திய அணியின் வெற்றிக்கு கடைசி நேரத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். 11 முதல் 15-ஓவர்கள் வரை குல்தீப் யாதவும், ஜடேஜாவும் மாறி, மாறி பந்துவீசினர், ஆனால், ஆஸ்திரேலிய பேட்டர்கள் விக்கெட்டை நிலைப்படுத்தும் நோக்கில் பெரிய ஷாட்களுக்கு செல்லவில்லை. ஆனால் குல்தீப் வீசிய 16-வது ஓவரின் 5-வது பந்து தவறாக வீசப்படவே காத்திருந்த ஹெட் அதை சிக்ஸருக்கு பறக்கவிட்டார்.

44 ஆண்டுகளுக்குப் பின்..
இந்திய அணியில் சுழற்பந்துவீச்சாளர்கள் 15 ஓவர்களுக்கும் மேல் உலகக் கோப்பையில் பந்துவீசி விக்கெட் வீழ்த்தாமல் செல்வது ஏறக்குறைய 44 ஆண்டுகளுக்குப்பின் இப்போதுதான் நடக்கிறது. கடைசியாக 1979ம் ஆண்டு உலகக் கோப்பையில் ஜூன் 16ம் தேதி மான்செஸ்டரில் இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் விக்கெட் இன்றி இருந்தனர்.

ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு அருகே வந்தது. பும்ரா வீசிய 40-வது ஓவரிலும், சிராஜ்வீசிய 41-வது ஓவரிலும் லாபுஷேன் பவுண்டரி விளாசி வெற்றிக்கு அருகே அணியைக் கொண்டு சென்றார்.

43-வது ஓவரை சிராஜ் வீசினார். ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு 10 ரன்களே தேவைப்பட்டது. சிராஜ் ஓவரில் பவுண்டரி அடித்த ஹெட் 5-வது பந்தில் சுப்மான் கில்லிடம் கேட்ச் கொடுத்து 137 ரன்களில் ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு ஹெட்-லாபுஷேன் 192 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர்.

அடு்த்து வந்த மேக்ஸ்வெல் வெற்றிக்கான 2 ரன்களை அடித்து அணியை வெற்றிக்குக் கொண்டு சென்றார். 43 ஓவர்களில்ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்பட மூலாதாரம்,GETTY IMAGES
உலகக்கோப்பை இறுதிப்போட்டியை காண செல்லாதது ஏன்?
ஆமதாபாத்தில் நடைபெறும் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான உலகக்கோப்பை இறுதிப்போட்டியை பார்க்க தாம் அழைக்கப்படவில்லை என்று இந்தியாவுக்கு முதன்முறையாக உலகக் கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியுள்ளார்.

ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி ஸ்டேடியத்திற்கு ஏன் செல்லவில்லை என்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட போது பதிலளித்த கபில்தேவிடம் ,"நீங்கள் என்னை அழைத்தீர்கள், நான் இங்கு வந்தேன், அவர்கள் என்னை அழைக்கவில்லை, நான் செல்லவில்லை" என்றார்.

"1983-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற எனது முழு அணியையும் அழைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும், ஆனால் நிறைய வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. எவ்வளவு பேர் இருக்கிறார்கள், சில நேரங்களில் மக்கள் மறந்துவிடக்கூடிய பொறுப்புகள் அதிகம்." என்று கபில்தேவ் கூறினார்.

இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்பட மூலாதாரம்,ANI
உலகக்கோப்பை இறுதிப்போட்டி குறித்து பிரபலங்கள் கூறியது என்ன?
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பெரிய ஸ்கோர் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி 240 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணிக்கு 242 எனும் சுமாரான இலக்கை இந்தியா நிர்ணயத்துள்ளதால் இந்திய அணி ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

இந்தியா சார்பாக அதிகபட்சமாக கேஎல் ராகுல் 66 ரன்கள் எடுத்தார்.

இந்த நிலையில் உலகக்கோப்பை இறுதிப்போட்டி குறித்து பிரபலங்கள் X சமூக வலைதளத்தில் என்ன கூறுகிறார்கள் என்பதை பார்க்கலாம்.

ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் அதிகமாக மெதுவான வந்துகளை வீசி இந்திய பேட்ஸ்மேன்களை திணறடித்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், “மெதுவான பவுன்சரை சரியாக அடிப்பது மிகவும் கடினம். அந்த பந்து வெளியிடப்பட்டவுடன் உள்ளுணர்வு வேலை செய்கிறது பின்னர் இது ஒரு மெதுவான பந்து என்பதை நீங்கள் உணர்கிறீர்கள். ஆனால் பெரும்பாலான நேரங்களில் அந்த பந்தை நீங்கள் அடிப்பதற்கு தாமதமாகிவிடுகிறது” எனத் தெரிவித்தார்.

இந்தியா ஆஸ்திரேலியாபட மூலாதாரம்,X
ஆஸ்திரேலிய முன்னாள் வீரரான சைமன் ஹூக்ஸ் கூறுகையில்,“ 241 ரன்களை அடிக்க வேண்டும். இந்த எண்ணை இதற்கு முன்பு எங்கோ கேள்விபட்டுள்ளோம். இந்தப் போட்டியும் 2019 இறுதிப்போட்டி போல பரபரப்பாக இருக்கும். ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜெயிக்கும். பேட் கம்மிங்ஸ் வெற்றி ரன்களை அடிப்பார்” எனத் ஆருடம் தெரிவித்துள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலியாபட மூலாதாரம்,X
ராபின் உத்தப்பா கூறுகையில், “பேட்டிங் செய்ய கடினமான விக்கெட் ஆனால் நிச்சயமாக இந்தியா இன்னும் சில ரன்கள் அடித்திருக்கலாம் என விரும்பியிருக்கும். ஆட்டத்தில் இந்தியாவின் எழுச்சியை ஆரம்ப விக்கெட்டுகள் தீர்மானிக்கும். இடது கை பேட்ஸ்மேன்களுக்கும் ஷமிக்குமான போட்டியை பார்க்க காத்திருக்கிறேன்” என தெரிவித்தார்.

இந்தியா ஆஸ்திரேலியாபட மூலாதாரம்,X
நடுவர் இவரா? இந்திய ரசிகர்கள் புலம்பல்
இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்பட மூலாதாரம்,GETTY IMAGES
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான உலகக்கோப்பை இறுதிப் போட்டி நடைபெற்று வரும் நிலையில், போட்டி நடுவர் ரிச்சர்ட் கெட்டில்ப்ரோ குறித்து சமூக வலைதளங்களில் விவாதம் நடந்து வருகிறது.

சிலர் அவரை இந்திய அணிக்கு துரதிர்ஷ்டமான அம்பையர் என அழைக்கிறார்கள். மற்றவர்கள் இந்த கூற்றுகள் அனைத்தையும் இந்திய அணி வெற்றியின் மூலம் தவறென நிரூபிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

ஆனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறி வருவதை பார்க்கும் பொழுது உண்மையிலேயே ரிச்சர்ட் கெட்டில்ப்ரோ இந்திய அணிக்கு துரதிர்ஷடம்தானா என்ற கேள்வியை சமூக வலைதளத்தில் ரசிகர்கள் எழுப்பியுள்ளனர்.

இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்பட மூலாதாரம்,X
அரையிறுதியில் சதமடித்த ஸ்ரேயாஸ் ஐயர் இந்த போட்டியில் நான்கு ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கேப்டன் ரோகித் சர்மா 47 ரன்களும், தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில் 4 ரன்களும் மட்டுமே சேர்க்க முடிந்தது.

இதுபோன்ற சூழ்நிலையில், ரிச்சர்ட் கெட்டில்ப்ரோ தொடர்பான பல ட்வீட்கள் சமூக ஊடக தளத்தில் காணப்படுகின்றன

இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்பட மூலாதாரம்,X
ரோஹித் சாதனை
இந்தியா vs ஆஸ்திரேலியா: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா - 20 ஆண்டு ஏக்கம் இன்று தீருமா?பட மூலாதாரம்,GETTY IMAGES
இந்த உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் ஒரு அணியின் கேப்டனாக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பெற்றுள்ளார்.

இந்தத் தொடரில் மட்டும் ரோகித் சர்மா 581 ரன்கள் விளாசி, வில்லியம்ஸன் 2019ஆம் ஆண்டு 578 ரன்கள் சேர்த்திருந்ததை முறியடித்தார். இதன் மூலம் உலகக்கோப்பைத் தொடரில் கேப்டனாக இருந்து அதிக ரன் குவித்த வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.

ஜெயிலர் இசையில் கோலி
அடுத்தாக கிங் கோலி களமிறங்கினார். கோலி களமிறங்கும்போது, அரங்கில் ஜெயிலர் படத்தின் பின்னணி இசை முழக்கத்துடன் வந்தார், அந்த ஓவரின் கடைசிப்பந்தில் ரோஹித் லாங்-ஆன் திசையில் சிக்ஸருக்குப் பறக்கவிட்டார். 5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் சேர்த்தது.

மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் இதுவரை கோலி 150 பந்துகளைச் சந்தித்துள்ளார். இதில் கோலி மொத்தம் 148 ரன்கள் சேர்த்துள்ளார். 4 சிக்ஸர், 10பவுண்டர் விளாசிய கோலி, ஒருமுறை மட்டுமே ஆட்டமிழந்துள்ளார்.

உலகக்கோப்பை IND vs AUS: பேட் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது ஏன்? வியூகம் என்ன?பட மூலாதாரம்,GETTY IMAGES
"இந்தியா வெல்லும்"
இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், "Come on Team India" என்று பாஜக X தளத்தில் தனது அதிகாரபூர்வ பக்கத்தில் பதிவிட்டிருந்தது. அதை ரீட்வீட் செய்த காங்கிரஸ் கட்சி, "JEETEGA INDIA" இந்தியா வெல்லும் என இந்திய கிரிக்கெட் அணியையும் இந்தியா கூட்டணியையும் மறைமுகமாக குறிக்கும் வகையில் பதிவிட்டுள்ளது.

இந்தியா vs ஆஸ்திரேலியா: ரோகித், கோலி, ஷமி 20 ஆண்டு ஏக்கத்தை இன்று தீர்ப்பார்களா?
டாஸ் யாருக்கு சாதகம்?
உலகக்கோப்பை IND vs AUS: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா - 20 ஆண்டு ஏக்கம் இன்று தீருமா?
ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானத்தில் இந்த ஆட்டம் நடக்கிறது. மைதானத்தில் உள்ள 5ஆம் எண் ஆடுகளம் போட்டிக்கு பயன்படுத்தப்படுகிறது.

இந்த ஆடுகளம், “இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் நடந்த மைதானத்தைவிட சற்று வித்தியாசமானது. இந்த ஆடுகளம் நன்கு காய்ந்துள்ளது, அதிகமாக ரோலிங் செய்யப்படவில்லை.

ஆடுகளம் நன்கு காய்ந்து, ஆங்காங்கே திட்டுத் திட்டாக சமனற்று இருக்கிறது. இந்த இடங்களில் சுழற்பந்துவீச்சாளர்கள் பந்தை பிட்ச் செய்தால் நன்கு ட்ர்ன் ஆகும். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பந்து நன்கு டர்ன் ஆகியிருக்காது.

இந்த ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்தால், ரன் ஸ்கோர் செய்வது மிகவும் கடினமாக இருக்கும். ஆனாலும் பொறுமையாக விளையாடி ரன்களை சேர்ப்பது அவசியம். இந்தியா போன்ற வலிமையான அதைப் பற்றிக் கவலைப்படாமல் ரன்களைச் சேர்த்துவிடும் என்று நம்புகிறேன். ஆஸ்திரேலிய அணிக்கு ஆடம் ஸம்பா பந்துவீச்சு முக்கியத்துருப்புச்சீட்டாக இருக்கும்.

நரேந்திர மோதி மைதானத்தில் உலகக் கோப்பை தொடரில் நான்கு போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் மூன்று போட்டிகளில், இரண்டாவது பேட் செய்த அணி தான் வெற்றி பெற்றுள்ளது.ஒரு போட்டியில் மட்டுமே முதலில் பேட் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது. அது ஆஸ்திரேலியாவாகும்.

இந்தியா இந்த உலகக் கோப்பை போட்டியில் நரேந்திர மோதி மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆடி,வெற்றி பெற்றது.

இந்த மைதானத்தில் இது வரை ஆடிய எந்த அணியும் 300 ரன்களுக்கு மேல் எடுத்ததில்லை.

உலகக்கோப்பை IND vs AUS: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா - 20 ஆண்டு ஏக்கம் இன்று தீருமா?
ஆதலால், முதலில் இந்திய அணி பேட் செய்தால் ரன் சேர்ப்பது சிரமமாக இருக்கும், ரன் சேர்ப்பதும் எளிதாக இருக்காது. நேரம் செல்லச் செல்ல சுழற்பந்துவீச்சுக்கு ஆடுகளம் சாதகமாகி, பந்து நன்றாக டர்ன் ஆகி, பவுன்ஸ் ஆகும்.

அப்போது இந்திய பேட்டர்கள் கனித்து ஆடுவது அவசியம். இல்லாவிட்டால், விக்கெட்டுகளை இழக்கவும் நேரிடலாம். 15 ஓவர்களுக்கு பிறகு, ஆஸ்திரேலிய அணி ஸ்லிப் வைத்து ஆடம் ஸம்பாவை பந்துவீச வைத்தாலும் வியப்பேதும் இல்லை.

அந்த அளவுக்கு ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக மாறும். அதிலும் மேக்ஸ்வெல், டிராவிஸ் ஹெட் ஆகியோரின் பந்துவீச்சும் இந்திய பேட்டர்களுக்கு சற்று சவாலாகவே இருக்கும்.

சமனற்ற இடத்தில் பந்துவீச்சாளர்கள் பந்தை பிட்ச் செய்தால், பேட்டர்கள் எதிர்பாராத அளவுக்கு பந்து டர்ன் ஆகலாம். இந்திய பேட்டர்கள் விக்கெட்டை நிலைப்படுத்தி சற்று பொறுமையாக ஆடி 250 ரன்களுக்கு மேல் சேர்த்துவிட்டால் இந்த ரன்களை சேஸிங் செய்வது கடினமாக இருக்கும்.

மாலை 5 மணிக்கு மேல் விழும் பனிப்பொழிவு சேஸிங்கில் முக்கியப் பங்கு வகிக்கும். காலநிலை குளிர்ச்சியாக மாறி, காற்றில் ஈரப்பதம் அதிகமாகிவிட்டால், பந்து பேட்டர்களை நோக்கி வரத் தொடங்கும்.

சேஸிங் எளிதாக மாறிவிடலாம். ஆதலால் முதலில் பேட் செய்யும் அணி ஸ்கோர் செய்வதைப் பொறுத்து போட்டியின் முடிவு அமையும்.

 


இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது, ​​பார்வையாளர் ஒருவர் திடீரென மைதானத்திற்குள் நுழைந்தார்.

பாலத்தீன கொடி இடம்பெற்ற முகக் கவசமும், பாலத்தீன விடுதலை (Free Palestine), பாலத்தீனம் மீது குண்டுவீசுவதை நிறுத்துங்கள் (Stop Bombing in Palestine) ஆகிய வாசகங்கள் இடம்பெற்ற டி சர்ட்டுடனும் கையில் கொடியுடனும் அவர் காட்சியளித்தார்.

மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் மைதானத்திற்குள் நுழைந்த அந்த நபரின் பெயர் தெரியவந்துள்ளது. அவர் அகமதாபாத்தில் உள்ள சந்த்கேடா காவல் நிலையத்திற்கு போலிசாரால் அழைத்து வரப்பட்டுள்ளார்.

விராட் கோலி பாலத்தீனம்

பட மூலாதாரம்,GETTYIMAGES

கோலியை நெருங்கிய இளைஞர் யார்?

சிறிது நேரத்தில் பாதுகாப்புப் படையினர் இவரைப் பிடித்து மைதானத்திற்கு வெளியே அழைத்துச் சென்றாலும் இது மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடாக பார்க்கப்படுகிறது.

செய்தி நிறுவனமான ANI சமூக ஊடக தளமான X இல் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது, அதில் இந்த நபரை காவல்துறை அழைத்துச் செல்கிறது.

இந்த வீடியோவில் அந்த நபர் தனது பெயரை ஜான்சன் என கூறி உள்ளார். அவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் என்றும் விராட் கோலியை மைதானத்தில் சந்திக்கச் சென்றிருந்ததாகவும் கூறுகிறார்.

அவர் பாலஸ்தீன ஆதரவாளர் என்றும் கூறினார்.

இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்

பட மூலாதாரம்,ANI/GETTY IMAGES

ஆமதாபாத் மைதானத்தில் பாதுகாப்பு குறைபாடா?

சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் இந்த பாதுகாப்பு குறைபாட்டை பொறுப்பற்றத்தன்மை என்றுக் கூறி விமர்சித்து வருகின்றனர்.

ஆஷிஷ் என்ற நபர் X சமூக வலைதளத்தில் குறிப்பிடுகையில், "நரேந்திர மோதி ஸ்டேடியத்திலேயே பாதுகாப்பு குறைபாடு நடந்துள்ளது. ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் பொறுப்பில்லாமல் நடந்துகொண்டுள்ளனர். இது உலகக் கோப்பை இறுதிப் போட்டி, தெரு கிரிக்கெட் அல்ல” என்று விமர்சித்துள்ளார்.

பிரிதேஷ் ஷா என்பவர் எழுதுகையில், "இது மிகவும் தவறானது. பார்வையாலர் எப்படி உள்ளே நுழைய முடியும்? நரேந்திர மோதி மைதானத்தின் ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு மிகவும் பொறுப்பற்றதாக உள்ளது” எனத் தெரிவித்தார்.

சென்னையிலும் இளைஞர் அத்துமீறல்

முன்னதாக சென்னை சேப்பாக்கத்தில் இதே இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதிய லீக் சுற்றில் ஜார்வோ என்கிற டேனியல் ஜார்விஸ் ஆடுகளத்திற்குள் அத்துமீறிச் சென்றார். தொடர்ந்து இது போன்ற செயலில் ஈடுபட்டு வந்த் அவரை பாதுகாப்பு ஊழியர்கள் ஆடுகளத்தில் இருந்து வெளியேற்றியதோடு, உலகக்கோப்பை போட்டிகள் நடக்கும் மைதானங்களுக்குள் வர டேனியல் ஜார்விஸ்க்கு ஐசிசி தடைவிதித்தது குறிப்பிடத்தக்கது.


 மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (புதன், நவம்பர் 15) நடக்கும் உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்துடன் பலப்பரீட்சை நடத்துகிறது இந்திய அணி.

கடந்த 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் நியூசிலாந்து அணியிடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இந்த ஆட்டம் இருக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

இந்த உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி அனைத்து அணிகளுக்கும் சிம்ம சொப்னமாகத் திகழ்ந்து வருகிறது. பந்துவீச்சு, பேட்டிங், ஃபீல்டிங் என அனைத்திலும் எந்தவிதமான பெரிய குறைபாடுகளும் இல்லாமல் அனைத்து அணிகளுக்கும் சவாலான ஆட்டத்தை இந்திய வீரர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

இதனால்தான் 9 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்று 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் அரையிறுதிக்கு இந்திய அணி தகுதி பெற்றிருக்கிறது.

நியூசிலாந்து அணியும் இந்திய ஆடுகளங்களுக்கு ஏற்ப தங்களைத் தயார் செய்து கொண்டு தொடக்கத்தில் அதிரடியாக பல வெற்றிகளைப் பெற்றது. ஆனால், சமவலிமை கொண்ட அணிகளுடன் மோதும்போது பல சறுக்கல்களைச் சந்தித்து, தடுமாறி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.

இந்த அரையிறுதி ஆட்டம் இரு அணிகளுக்குமே முக்கியமானது. ஏனென்றால் நியூசிலாந்து அணி இதுவரை பலமுறை அரையிறுதிச் சுற்றுக்குள் சென்றும் கோப்பையை வெல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் வெளியேறியது.

இந்தியாவைப் பொறுத்தவரை கோப்பையை வெல்லக்கூடிய அனைத்து தகுதிகளும் இருந்தும், கடந்த 2 உலகக்கோப்பைத் தொடர்களாக அரையிறுதியுடன் வெளியேறியது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை அளித்தது. அதிலும் கடந்த 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் 18 ரன்களில் தோல்வி அடைந்ததை ரசிகர்கள் இன்னும் மறக்கவில்லை.

 


(வி.ரி. சகாதேவராஜா)


தீபத்திருநாளை முன்னிட்டும் காரைதீவு விளையாட்டுக்கழகத்தின் 40 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டும் நடத்திய மாபெரும் பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின்  இறுதிப்போட்டியும் பரிசளிப்பு விழாவும் நேற்றுமுன்தினம்(12)நடைபெற்றது.

கழகத் தலைவர் தம்பிராசா தவக்குமார் தலைமையில், விபுலானந்தா மத்திய கல்லூரி பூப்பந்தாட்ட அரங்கில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில்,
பிரதம அதிதியாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட நிறைவேற்று பொறியியலாளரான பட்டய பொறியாளர்  எந்திரி அருமைநாயகம் லிங்கேஸ்வரன் கலந்து சிறப்பித்தார்.

கௌரவ அதிதிகளாக, கழகத்தின் போசகர்களான காரைதீவு  பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன், உத்தரவு பெற்ற நில அளவையாளர் வே.இராஜேந்திரன், உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.

வெற்றி பெற்ற வீரர்களுக்கு வெற்றி கிண்ணங்கள் வழங்கி வைக்கப்பட்டன .

கழகச் செயலாளர்
எஸ் .கிரிசாந்த் நிகழ்ச்சிகளை தொகுத்து நன்றியுரை வழங்கினார்.

சுற்றுப்போட்டிக்கான அனுசரணையை பட்டயப் பொறியியலாளர் ஏ.லிங்கேஸ்வரன் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


நடப்பு உலகச் சம்பியன் தொடரில், அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பை இழந்தது, பாகிஸ்தான். இதன் மூலம் நியுசிலாந்து அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.