Showing posts with label world. Show all posts

 


காஸாவில் இஸ்ரேல் நடத்தும் போரில் இனப் பேரழிவு தொடர்பான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் சர்வதேச நீதிமன்றம் இன்று (26) வழங்கிய தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.


பலஸ்தீனர்கள் இனப் பேரழிவு நடவடிக்கைகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை இருப்பதாக சர்வதேச நீதிமன்றம் தெரிவித்தது.

இனப் பேரழிவுக்கு எதிரான சட்டத்தின் கீழ் அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டிய பிரிவினர் என்றும் சர்வதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வரும் போரில் இஸ்ரேல் காசாவின் பெரும்பகுதியை தரைமட்டமாக்கி விட்டதுடன், 1.9 மில்லியன் மக்களை தங்கள் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றிய நிலையில், குறைந்தது 25,900 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 


டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தாண்டு சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங் பங்கேற்றார்.

டெல்லி கடமைப் பாதையில் நடைபெற்ற குடியரசு தின விழாவுக்கு திரௌபதி முர்முவும் இமானுவேல் மக்ரோங்கும் சிறப்பு அலங்கார குதிரை வண்டியில் சென்றனர். அவர்களுக்குப் பின்னால் குடியரசுத் தலைவரின் பாதுகாப்புப் பிரிவினர் அணிவகுத்துச் சென்றனர். அவர்கள் இருவரையும் பிரதமர் நரேந்திர மோதி வரவேற்றார்.

இதையடுத்து, தேசிய கீதம் ஒலிக்க, 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க தேசிய கொடியை ஏற்றினார் குடியரசுத் தலைவர் முர்மு.

பின்னர், பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது. மேலும், பாதுகாப்புப் படைகளில் பயன்படுத்தப்படும் பீரங்கி வாகனங்களின் அணிவகுப்பும் நடைபெற்றது.

 


பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக், பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேத் என்பவரை மறுமணம் செய்து கொண்டார்.


அவர் 2010 இல் சானியா மிர்சாவை மணந்தார், இருவருக்கும் ஒரு மகன் உள்ளார்.


டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா இன்ஸ்டாகிராமில்: "திருமணம் கடினமானது. விவாகரத்து கடினம். உங்கள் கடினமானது. உடல் பருமன் கடினமானது. பொருத்தமாக இருப்பது கடினம். உங்கள் கடினத்தைத் தேர்ந்தெடுங்கள். கடனில் இருப்பது கடினம். நிதி ரீதியாக ஒழுக்கமாக இருப்பது கடினம். உங்கள் கடினத்தைத் தேர்ந்தெடுங்கள். தொடர்புகொள்ளுங்கள். கடினமானது. தொடர்பு கொள்ளாமல் இருப்பது கடினம். கடினமானதை தேர்ந்தெடுங்கள். வாழ்க்கை ஒருபோதும் எளிதாக இருக்காது. அது எப்போதும் கடினமாகவே இருக்கும்

 


ஈரான் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 4  குழந்தைகள் மற்றும் 3 பெண்கள் உயிரிழப்பு: ஈரான் அரசு

🔹பாகிஸ்தானின் எல்லைகடந்த தாக்குதல் குறித்து உடனடியாக உரிய விளக்கம் அளிக்க ஈரான் அரசு கேட்டுள்ளது

🔹பாகிஸ்தான் பிரதமர் அன்வர்-கக்கர் தனது வெளிநாட்டுப் பயணத்தை முன்கூட்டியே முடித்துக் கொண்டு நாடு திரும்புவதாக அறிவித்துள்ளார்

🔹ஈரானில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது தாக்குதல்கள் நடத்தியதில், பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது


 ஈரான் மீது பாகிஸ்தான் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தி பதிலடி!


🔹பாகிஸ்தான் விமானப்படை ஈரானில் உள்ள முகாம்கள் மீது இன்று காலை தாக்குதல் நடத்தியுள்ளது


🔹ஈரானின் சரவண் பகுதி அருகே குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்ததாக தகவல்


🔹பலூச் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் கூறும் நிலையில், பொதுமக்கள் சிலர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது


 பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்கள் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்!

பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி முற்றுகையிடப்பட்டது போருக்கு துணை போவதாக கூறி அதிபர் ஜோ பைடனுக்கு எதிராக கடுமையான கண்டன முழக்கங்களும் எழுப்பப்பட்டது பல்லாயிரக்கணக்கான மக்கள் வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டதால், வாஷிங்டன் நகரத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது சிலர் வெள்ளை மாளிகை முன்பு வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வேலிகளை சேதப்படுத்தியும், போலீஸார் மீது பொருட்களை வீசியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் பாதுகாப்புக் கருதி வெள்ளை மாளிகை ஊழியர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் சிலர் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

 


-நந்தினி வெள்ளைசாமி-


’ஜென் இசட்’ எனப்படும் 2,000களின் தொடக்கத்தில் பிறந்த ‘2கே கிட்ஸ்கள்’ அதிகமாக ஆபாசப் படங்கள் பார்ப்பதாகவும் அதற்காக அவர்களைத் தண்டிக்காமல் முறையாகத் தெளிவுபடுத்தி அவர்களை சமூகம் மீட்க வேண்டும் எனவும், சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


அம்பத்தூர் காவல் நிலையத்தில் 28 வயது இளைஞர் ஒருவர் குழந்தைகள் தொடர்பான ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக, அவர் மீது குழந்தைக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் (போக்சோ) மற்றும் தொழில்நுட்பச் சட்டப் (ஐ.டி. சட்டம்) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி, அந்த இளைஞர் தாக்கல் செய்த மனு மீதான சமீபத்திய விசாரணையின் போதுதான் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் இந்த கருத்துகளைத் தெரிவித்திருந்தார்.


அந்த இளைஞர் ஆபாச காணொளிகளைப் பார்க்கும் பழக்கத்திலிருந்து விடுபட கவுன்சிலிங் எடுத்துக்கொள்வதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து, அவர் மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்டன.


போக்சோ சட்டம், 2012 பிரிவு 14(1)-ன் படி, குற்றம்சாட்டப்பட்ட நபர் ஆபாச நோக்கங்களுக்காக குழந்தையைப் பயன்படுத்துவது குற்றம் என, இந்த வழக்கின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, ஐ.டி. சட்டம், 2000, பிரிவு 67(பி)-ன் படி, குழந்தைகள் தொடர்பான ஆபாச காணொளிகளை உருவாக்குவதோ, பரப்புவதோ, வெளியிடுவதோ குற்றம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே, குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்களைப் பார்ப்பது குற்றமல்ல எனக் கூறி, அவர் மீதான வழக்குகளை ரத்து செய்வதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார்.



நீதிபதி கூறியது என்ன?

2கே கிட்ஸ்: ஆபாசப் படங்களை அதிகமாக பார்ப்பது ஏன்? அவர்களை எப்படி மீட்பது?பட மூலாதாரம்,WWW.HCMADRAS.TN.NIC.IN

இந்த வழக்கு தவிர்த்து ஜென் இசட் தலைமுறை குழந்தைகளிடையே மொபைல், இணையப் பயன்பாடு அதிகரித்துள்ளதால், அவர்கள் ஆபாசப் படங்கள், காணொளிகளைப் பார்ப்பது அதிகரித்துள்ளதாக நீதிபதி தெரிவித்திருப்பது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.


சமீபத்தில் வெளியான ஆய்வில், 18 வயதுக்கு உட்பட்டவர்களுள் 10இல் 9 சிறுவர்களும், 10இல் 6 சிறுமிகளும் ஆபாசப் படங்கள் பார்ப்பதாகவும் இதனால் அவர்களுக்கு உடல், மன ரீதியான பாதிப்புகள் ஏற்படும் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்திருக்கிறார்.


“ஆண் ஒருவர் ஆபாசப் படம் பார்க்க முதலில் பழகுவது தனது 12வது வயதில்தான். 12 வயது முதல் 17 வயது வரையுள்ள பதின்பருவ சிறுவர்கள்தான் ஆபாசப் படங்களுக்கு அடிமையாகும் அபாயத்தில் அதிகம் இருக்கிறார்கள். சுமார் 71% பதின்பருவத்தினர் தங்கள் பெற்றோரிடம் இருந்து மறைக்கும் வகையிலான ஆன்லைன் செயல்களைச் செய்கிறார்கள்,” என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளார்.



ஆபாசப் படங்களால் ஏற்படும் தவறான புரிதல்

ஆபாசப் படம் பார்க்கும் பதின்பருவத்தினர் பட மூலாதாரம்,

பதின் பருவத்தினர் ஆபாசப் படங்களுக்கு அடிமையாவது ஏன், அதை எப்படித் தடுப்பது என்பது குறித்து, சென்னையைச் சேர்ந்த மனநல ஆலோசகர் சுவாதிக்கிடம் பேசினோம்.


”பதின் பருவத்தில் உடலுறவு குறித்து அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருக்கும். முன்பு, உடலுறவு சார்ந்த புத்தகங்கள், சி.டி-க்கள் வாயிலாகப் பார்த்தனர். இப்போது இணையம் வாயிலாகப் பார்க்கின்றனர். முன்பு போன்று அல்லாமல் அவற்றைப் பார்ப்பதற்கு எந்தத் தடையும் இல்லை. அது சார்ந்த காணொளிகள் எளிதாகக் கிடைப்பது இதற்கு முக்கியக் காரணம் என்றார்.


ஆபாசப் படங்கள் பார்ப்பதைவிட அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள்தான் அதிகம் என்கிறார் அவர். ஆபாசப் படங்கள் பொதுவாகவே உடலுறவை மிகைப்படுத்தியே காண்பிக்கும் என்பதே மனநல ஆலோசகர்கள், பாலியல் நல மருத்துவர்களின் கூற்றாக இருக்கிறது.


எனவே, மிகையாகக் காட்டப்படும் சில விஷயங்களை பதின்பருவத்தினர் உண்மை என நினைத்துக்கொள்வார்கள் என்றும் எதிர்காலத்தில் ஆபாசப் படங்களில் காட்டப்படுவது போன்றே தன் துணையும் இருக்க வேண்டும், உடலுறவில் ஈடுபட வேண்டும் என எதிர்பார்க்கும் ஆபத்து இருப்பதாக சுவாதிக் தெரிவித்தார்.


குறிப்பாக, ஆபாசப் படங்களில் சட்டத்திற்குப் புறம்பான உறவுகளையே பெரும்பாலும் காட்டுவதாகக் கூறும் அவர், இதனால் எதிர்காலத்தில் தன் துணை மீது சந்தேகம் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகக் கூறுகிறார்.


BTS இசைக்குழுவை காண தனியே தென் கொரியா செல்ல துணிந்த தமிழக சிறுமிகள் - அதில் அப்படி என்ன சிறப்பு?



எப்படி தடுப்பது?

சென்னை உயர் நீதிமன்றம்பட மூலாதாரம்,

”பள்ளிகளில் பாலியல் கல்வியைக் கற்றுத்தர வேண்டும். பாலியல் கல்வி மீதான தவறான புரிதலைக் களைய வேண்டும். மேலும், பெற்றோர் - குழந்தைகள் உறவு சீராக இருந்தால் குழந்தைகள் இதுதொடர்பாக வீட்டிலேயே பேச முடியும்.


அவர்களுக்குள் உறவு சரியாக இல்லையென்றால் அவர்களிடமிருந்து மறைத்து அதற்கு அடிமையாகும் வாய்ப்பு அதிகம்,” என்றார் சுவாதிக். குழந்தைகளுக்கு பாலியல், பாலுறுப்புகள் குறித்த சரியான புரிதல்களை உருவாக்க வேண்டும் என அவர் வலியுறுத்துகிறார்.


ஆபாச படங்கள் பார்ப்பதிலிருந்து மீண்ட மாணவர்

தான் ஆபாச படங்களுக்கு அடிமையாகிவிட்டதாக பதின்பருவத்தினர் கண்டறிவது எப்படி என்பதை அவர் விளக்கினார்.


”தூக்கம், பசி, கல்வி இவற்றில் ஏதேனும் பாதிப்புகள் இருக்கிறதா என்பதைக் கண்டறிய வேண்டும். மன அழுத்தம் உள்ளதா என்பதை பார்க்க வேண்டும். ஆபாசப் படங்களை பார்க்கவில்லையென்றால் அந்த நாளே பூர்த்தியடையாதது போன்று சிலருக்குத் தோன்றும். அவற்றைப் பார்ப்பதில் அதிக நேரம் செலவிடுவார்கள்,” என்கிறார் சுவாதிக்.



ஆபாசப் படம் பார்க்கும் பதின்பருவத்தினர் பட மூலாதாரம்,GETTY IMAGES

கொரோனா காலத்தில் மொபைல் பயன்பாடு அதிகரித்ததால், ஆபாசப் படங்களுக்கு அடிமையாகிவிட்ட சிறுவர்கள் பலர் தன்னிடம் மனநல ஆலோசனைக்கு வருவதாக அவர் கூறுகிறார். அப்படி, 11 அல்லது 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் அதிலிருந்து தன்னால் மீள முடியாமல் தன் பெற்றோரின் துணையுடனேயே தன்னிடம் வந்ததாகத் தெரிவிக்கிறார் சுவாதிக்.


“அந்த மாணவர் மொபைல் பார்க்கவில்லையென்றால் எரிச்சலாகிவிடுவார். அவர்களிடம் ஆபாசப் படங்கள் சார்ந்த வணிகம் எப்படி தார்மீக பொறுப்பற்று இயங்குகிறது, அதில் குழந்தைகள், பெண்கள் எப்படி சுரண்டப்படுகிறார்கள் என்பதை எடுத்துக் கூறினோம்.


எடுத்தவுடனேயே அவரிடமிருந்து மொபைலை பிடுங்காமல், கொஞ்சம் கொஞ்சமாக அவற்றைப் பார்க்கும் நேரத்தைக் குறைக்க அறிவுறுத்தினோம். இப்போது முழுவதும் அதிலிருந்து மீண்டுள்ளார்,” என்றார்.


ஆபாசப் படங்களுக்கு அடிமையாவது ஏன்?

ஆபாசப் படம் பார்க்கும் பதின்பருவத்தினர் பட மூலாதாரம்,GETTY IMAGES

சிலர் அதிலிருந்து விடுபட முடியாமல் குற்ற உணர்வில் இருப்பார்கள் என்றும் அவர்களை மீண்டும் அவமதித்து, குற்ற உணர்வை அதிகரிக்காமல் நல்ல முறையில் ஆலோசனை வழங்கி கவுன்சிலிங்கிற்கு அழைத்து வர வேண்டும் என்றும் கூறுகின்றனர் மன நல ஆலோசகர்கள்.


ஆபாசப் படங்களுக்கு பலரும் அடிமையாவது ஏன் என்பதை அறிவியல் ரீதியாக விளக்கினார், சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் கிருபாகர்.


”மது, புகைப் பழக்கம் என எந்த அடிமைப்படுத்தும் பழக்கமாக இருந்தாலும், அதில் ஒரு போதை இருக்கும். எல்லா போதைப் பழக்கங்களின் போதும் நம் மூளை டோபமின் என்னும் ’மகிழ்ச்சி ஹார்மோனை’ வெளியிடும்.


அதனால் தான் நாம் அவற்றுக்கு அடிமையாகிறோம். அதுதான் ஆபாசப் படங்களைப் பார்க்கும்போதும் நிகழ்கிறது. அதனால்தான் பலரும் அவற்றை திரும்பத் திரும்பப் பார்க்கின்றனர்,” என்றார்.


ஆப்கன்: 'குழந்தைக்கு உணவளிக்க முடியாவிட்டல் விஷம் கொடுக்கச் சொல்கிறார்கள்'

28 டிசம்பர் 2023

அமோனியா கசிவு: நள்ளிரவில் கதவைத் தட்டி காப்பாற்றியது யார்? 8 கிராமங்களில் என்ன நடந்தது?

27 டிசம்பர் 2023

அரசு என்ன செய்ய வேண்டும்?

ஆபாசப் படம் பார்க்கும் பதின்பருவத்தினர் பட மூலாதாரம்,GETTY IMAGES

குழந்தைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அல்லாமல், சில கண்காணிப்புகளைப் பெற்றோர்கள் மேற்கொள்ள வேண்டும் என்கிறார் கிருபாகர்.


“அரசு கொள்கையளவில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். குழந்தைகளுக்கு சொந்தமாக மொபைல் வாங்கி தருவதற்கென ஒரு வயது இருக்கிறது. மேலும், தங்கள் மொபைல்களில், குழந்தைகள் சில உள்ளடக்கங்களைப் பார்க்க முடியாத வண்ணம் அமைப்புகளை பெற்றோர் மாற்றி வைத்திருக்க வேண்டும்,” என்றார் கிருபாகர்.


ஆபாசப் படங்களுக்கு குழந்தைகள் அடிமையாவதைத் தடுக்க அவர்களை மாற்று வழிகளை நோக்கித் திருப்ப வேண்டும் என்கிறார், குழந்தைகள் நல செயற்பாட்டாளர் தேவநேயன்.


”கொரோனா நெருக்கடி காலகட்டத்தில் ஆன்லைன் கல்வியை நெறிப்படுத்தாமல் பயன்படுத்தி வந்தோம். இணைய பாதுகாப்பு குறித்து ஆலோசிக்காமலேயே இணைய கல்வியைப் பயன்படுத்தினோம். கொரோனா நெருக்கடி முடிவுக்கு வந்த பிறகாவது இவற்றைச் செய்திருக்க வேண்டும்,” என்றார், தேவநேயன்.


'உயர்மட்ட குழு தேவை'

ஆபாசப் படம் பார்க்கும் பதின்பருவத்தினர் பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆபாச வலைதளங்கள் 90 சதவீதம் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளில் பதிவு செய்யப்பட்டதாக உள்ளதால், அவற்றை இந்தியாவில் தடை செய்வது பெரும்பாலும் சவாலாகவே உள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.


”குழந்தைகள் ஆபாசப் படங்கள் பார்ப்பதைத் தடுக்க கல்வித்துறையில் உயர்மட்டக் குழு அமைத்து நடைமுறை வாழ்வில் என்ன மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்பதை ஆலோசிக்க வேண்டும்.


இந்தக் குழு அவ்வப்போது சந்தித்து காலத்திற்கு ஏற்ப புதுமைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு எது சரி, எது தவறு என்பதை உணர்த்த வேண்டும்.


மாற்றாக, விளையாட்டு, கலை, வாசிப்பு உள்ளிட்டவற்றில் ஈடுபடுத்த வேண்டும். அதை நவீன குழந்தைகளுக்கு ஏற்றாற்போல் செய்ய வேண்டும். ’கலாசார காவலராக’ இல்லாமல் அதை முறைப்படுத்த வேண்டும்,” என்றார் தேவநேயன்.


 யேமன், ஹவுதி அமைப்பினர் மீது அதிரடியாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது..


அமெரிக்கா , பிரிட்டன் உட்பட்ட நாடுகள் இணைந்து இந்த தாக்குதலை தொடுத்துள்ளன..


ஜனாதிபதித் தேர்தலை எதிர்நோக்கியுள்ள அமெரிக்காவில் , இப்போதே பைடன் மீது இந்த தாக்குதல் விடயத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

 


Shakib Al Hasan: 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி! வங்கதேச தேர்தலில் வெற்றிபெற்ற கிரிக்கெட் கேப்டன்!

வங்கதேச நாடாளுமன்ற தேர்தலில் வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன், ஆளும் அவாமி லீக் கட்சி சார்பில் மகுரா-1 தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

 


வாக்குப்பதிவு சர்ச்சைக்கு மத்தியில் ஷேக் ஹசீனா வங்கதேசத்தில் ஐந்தாவது முறையாக வெற்றி பெற்றார்

எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு அழைப்பு மற்றும் காலியான வாக்குச்சாவடிகள் பற்றிய அறிக்கைகளுக்குப் பிறகு உத்தியோகபூர்வ வாக்குப்பதிவு 40 சதவீதம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன


ஹொலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஒலிவர் (Christian Oliver) விமான விபத்தில் பலியானார். 

கரீபியன் தீவு அருகே ஏற்பட்ட  குறித்த விபத்தில் அவரது இரண்டு மகள்களும் விமானியும் பலியாகியுள்ளனர். 

இவர் தனது இரண்டு குழந்தைகளுடன் சிறிய ரக விமானத்தில் பெக்கியா என்ற சிறிய தீவில் இருந்து செயின்ட் லூசியா புறப்பட்டபோது, சிறிது நேரத்தில் விபத்து இடம்பெற்றுள்ளது. 

தகவல் அறிந்து செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ் கடலோர காவல்படையினர், நீர்மூழ்கி வீரர்கள், மீனவர்கள் தங்களது படகுகளில் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். 

எனினும், 4 பேரையும் சடலமாகவே மீட்க முடிந்துள்ளது. 

ஜெர்மனியில் பிறந்த Christian Oliver, The Good German என்ற படம் மூலம் அறிமுகம் ஆனார். 2008 இல் Action Comedy படமான Speed Racer படத்தில் நடத்திருந்தார்.

ஆரம்ப காலத்தில் தொலைக்காட்சித் தொடரில் நடித்து பிரபலமானார். அதன்பின் ஒலிவர் 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

 


ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் இன்று (ஜன. 02) டோக்கியோவில் ஹனேடா விமான நிலையத்தின் ஓடுதளத்தில் தரையிறங்கும்போது தீப்பிடித்தது.

என்.ஹெச்.கே எனும் ஜப்பானிய அரசு ஊடகத்தில் அதன் காணொளி வெளியானது. அதில், விமானத்தின் ஜன்னல்கள் மற்றும் அதன் கீழே தீப்பிடித்து எரிவதை காண முடிந்தது. விமானத்தின் ஓடுதளத்திலும் தீ பரவியது.

அந்த விமானம் தரையிறங்கும்போது அங்கிருந்த மற்றொரு விமானத்தில் மோதி இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என, அதிகாரிகளை மேற்கோள் காட்டி என்.ஹெச்.கே ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விபத்து ஏற்பட்டபோது உள்ளே பயணிகள் இருந்தனர்.

விமானத்திற்குள் இருந்த 367 பயணிகள் மற்றும் பணியாளர்கள் உள்பட 379 பேரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக, என்.ஹெச்.கே. ஊடகம் தெரிவித்துள்ளது.

ஜே.ஏ.எல். 516 என்ற அந்த விமானம் ஹொகைடோவிலிருந்து புறப்பட்டது என்றும் தெரிவித்துள்ளது.

 


ஜப்பானில் 7.6 என்ற அளவிலான பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

நோட்டோ உள்ளிட்ட கடற்கரையோரப் பகுதியில் தீவிர சுனாமி எச்சரிக்கை முன்னதாக விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அதனை ‘சுனாமி எச்சரிக்கை’ என ஜப்பான் அரசு தளர்த்தியுள்ளது. நீகாட்டா மற்றும் டோயாமா போன்ற நகரங்களுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இஷிகாவா நகரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 32,500 வீடுகளில் மின் தடை ஏற்பட்டதாக உள்ளூர் அதிகாரிகளை மேற்கோளிட்டு கியோடோ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இங்குள்ள பல வீடுகள் நிலநடுக்கத்தால் இடிந்துவிட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதனிடையே தென்கொரியாவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதியிலும் சிறியளவில் சுனாமி அலைகள் எழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 43 செமீ (1.4 அடி) உயரம் கொண்ட சுனாமி அலை கிழக்கு மாகாணமான கேங்வோனை அடைந்ததாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் கூறுகிறது. கடல் மட்டம் உயரும் என்ற அச்சத்தின் காரணமாக உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறு முன்னதாக அதிகாரிகள் இந்த மாகாணத்தில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர் ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் முன்னதாக, ஜப்பானின் மேற்கு கடலோரப் பகுதியில் அமைந்திருக்கும் மத்திய கடற்கரை பிராந்தியமான இஷிகவாவை மையமாக கொண்டு 7.6 அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. "இந்தப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் உடனடியாக வெளியேற வேண்டும்" என்று என்.எச்.கே. என்ற ஜப்பானின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. ஜப்பானின் நோட்டோ பகுதியின் கடற்கரை பகுதியில் உள்ள மக்களை "உயரமான பகுதிகளுக்கு உடனடியாக செல்லுமாறு" இஷிகவா அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 5 மீட்டர் (சுமார் 16 அடி) உயரமுள்ள அலைகள் நோட்டோ பகுதியை நோக்கி வந்துள்ளதாக ஜப்பானின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. நோட்டோ பகுதிக்கு அருகிலுள்ள நீகாட்டா, டோயாமா உள்ளூர் நிர்வாகமும் சுனாமி எச்சரிக்கையை மக்களுக்கு விடுத்துள்ளது. இந்த பகுதிகளில் 3 மீட்டர் உயரமுள்ள அலைகள் வரக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 'காலி செய்யுங்கள்' என்ற வாசகம் ஜப்பானின் அரசு தொலைக்காட்சியில் பெரிய வடிவில் தோன்றி மக்களை உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. புதிய எச்சரிக்கை ஜப்பானின் மேற்கு கடலோர பகுதியில் அமைந்திருக்கும் இஷிகவா, நீகாட்டா, டோயாமா, நகானோ ஆகிய பகுதிகளில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக புதிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசின் செய்தித்தொடர்பாளரான யோசிமாஷா ஹயாஷி, உள்ளூர் மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் மேலும் நிலநடுக்கம் வர வாய்ப்புள்ளதாகவும், மக்கள் அதற்கேற்றார் போல் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார் உள்ளூர் நேரப்படி மாலைக்கு பிறகு கடந்த 5 மணி நேரத்தில் மத்திய ஜப்பானின் இந்த பகுதிகளில் 50 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக 7.6 என்ற அளவில் ரிக்டர் ஸ்கேலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அணு உலைகளுக்கு பாதிப்பா? ஜப்பான் சுனாமிபட மூலாதாரம்,JAPAN METEOROLOGICAL AGENCY நிலநடுக்கம் ஏற்பட்டதையும், சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களில் மக்கள் தஞ்சம் புகுந்துள்ளதையும் வீடியோவாக எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர். ஜப்பான் அணு உலை பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்தை அதிகாரிகள், நிலநடுக்கத்தால் அணு உலையிலிருந்து எவ்வித அணுக் கதிர்வீச்சும் கசியவில்லை என்று தெரிவித்துள்ளது. ஜப்பானின் மிகப்பெரிய அணு உலை மின்சார தயாரிப்பாளரான கன்சாய் எலெக்ட்ரிக் நிறுவனம், நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் இருக்கும் அணுஉலைகளில் 'அசாதாரண நிலை ஏதுமில்லை' என்று விளக்கமளித்துள்ளது. முன்னதாக 2011ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து அணு உலைகள் பாதிக்கப்பட்டன. இந்த அணு உலை விபத்தினால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது இஸ்ரோவின் எக்ஸ்போசாட் 9 மணி நேரங்களுக்கு முன்னர் திருப்பூர்: 'சாமி பயம் காட்டி' பட்டியலின மக்கள் செருப்பு அணிவதை தடுத்த ஆதிக்க சாதியினர் 29 டிசம்பர் 2023 ஜப்பான் சுனாமிபட மூலாதாரம்,REUTERS ஜப்பான் நிலநடுக்கம் சுனாமிபட மூலாதாரம்,EPA சுனாமியால் என்ன பாதிப்பு? நிலநடுக்கம் மற்றும் சுனாமியைடுத்து இஷிகவா பகுதியிலிருந்து டோக்கியோ நகரத்திற்கு இயக்கப்படும் புல்லட் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக ஜப்பான் ரயில்வே அறிவித்துள்ளது. இஷிகவா பகுதியிலுள்ள சூசு நகரத்தில் நிலநடுக்கத்தால் பல வீடுகள் மற்றும் மின்சார கம்பங்கள் ஆகியவை முற்றிலும் இடிந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள இஷிகவா பிராந்தியத்தில் 36,000 வீடுகளுக்கு மின் விநியோகம் தடைபட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகளை சுட்டிக் காட்டி கியோடோ நியூஸ் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையப்புள்ளியான இஷிகவாவிற்கு செல்லும் முக்கிய நெடுஞ்சாலைகளும் மூடப்பட்டுள்ளன. (இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது) இந்தியர்களுக்கு உதவி எண்கள் ஜப்பான் நிலநடுக்கம் சுனாமிபட மூலாதாரம்,X/INDIANEMBTOKYO நிலநடுக்கம் மற்றும் சுனாமி பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்புக்காக, ஜப்பானிலுள்ள இந்திய தூதரகம் உதவி எண்களை அறிவித்துள்ளது. இந்தியர்களுக்கு உதவுவதற்காக கட்டுப்பாடு அறை திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நிர்வாகத்தின் அறிவுறுத்தலை கேட்டு நடந்து கொள்ளுமாறும், உதவி தேவைப்படும் இந்தியர்கள் தூதரகத்தால் கொடுக்கப்பட்டுள்ள தொலை பேசி எண் மற்றும் இமெயில் முகவரியை தொடர்பு கொள்ளுமாறு ஜப்பானிலுள்ள இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.

#JapanEarthquake #Tsunami


ஐக்கிய நாடுகள் அவையின் பொருத்தனைகளைில்  ஒன்றான மனிதப் படுகொலைகளை தடுத்து நிறுத்தும் குற்றவியல்,பொருத்தனை ஒழுங்கு விதிகளை மீறியதற்காக, இஸ்ரேலுக்கு எதிராக குற்றவியல் பிரேரனையினைக் கொண்டு வருகின்றது.

தென்னாப்பிரிக்கா குடியரசு போப்ரோசீடிங் நிறுவனங்கள் இஸ்ரியல் நிலைக்கு எதிராக மற்றும் தற்காலிக நடவடிக்கைகளைக் குறிப்பிடுமாறு நீதிமன்றங்களைக் கோரும் நடவடிக்கைளை முன்னெடுத்துள்ளது.

 Rep/BBC.


தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் சென்னை தீவுத் திடலில் இருந்து கட்சி அலுவலகத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் குன்றியிருந்த விஜயகாந்த் பல தருணங்களில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க் கிழமையன்று மீண்டும் மருத்துவமனையில் நிம்மோனியா காய்ச்சலுக்காக விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

முதலில் அவரது வீடு மற்றும் தேமுதிக தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரின் உடல் பின்னர் சென்னை தீவுத்திடலில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.

அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள், அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள் மற்றும் தேமுதிக தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு அவரது உடல் பூந்தமல்லி நெடுஞ்சாலை ஈவேரா சாலை வழியாக தேமுதிக தலைமை அலுவலகம் வரை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இந்நிலையில் 6 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், விஜயகாந்த் குடும்பத்தினர் மற்றும் முக்கிய அமைச்சர்கள் முன்னிலையில் விஜயகாந்த் அவர்களின் உடல் முழு அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

 


மணமகன் கனடா செல்வதற்காக மட்டுமே மணமகளை திருமணம் செய்து கொள்வார். இருவரும் கனடா சென்ற பிறகு அவர் மனைவிக்கு விவாகரத்து வழங்கி விடுவார். இதுதான் கபுர்த்தலாவை சேர்ந்த இரு குடும்பங்களுக்குள் போடப்பட்ட திருமண ஒப்பந்தம்”


இந்த ஒப்பந்தம் அதிகாரப்பூர்வ ஸ்டாம்ப் பேப்பரில் கையெழுத்திடப்பட்டுள்ளது. ( ஒப்பந்தத்தின் நகல் பிபிசியிடம் உள்ளது)


இந்த விஷயத்தில், கனடா செல்வதற்காக அந்த பெண் 12ம் வகுப்பு முடித்த பிறகு IELTS தேர்வில் தேர்ச்சி பெற்று கனடாவுக்கு படிக்க செல்ல வேண்டும். அதற்கான மொத்த செலவையும் மணமகன் பார்த்து கொள்வார். இதற்கு கைமாறாக, அந்த பெண் மணமகனை கணவன் விசாவில் கனடாவிற்கு அழைத்துச் செல்ல வேண்டும்.


கனடா சென்றபிறகு அந்த பெண் ஏமாற்றி விட கூடாது என்பதற்காக பெண்ணின் பெற்றோர் கொடுத்த நகைகளை அந்த மணமகனே தன்னிடம் வைத்திருந்தார்.


உறவினர்கள் வருகையோடு திருமணம் நடைபெற்றது. சட்டபூர்வமாக பதிவும் செய்யப்பட்டது.


ஆனால், அந்த பெண்ணை பெற்றோர்கள் மணமகன் வீட்டிற்கு அனுப்பவில்லை. காரணம் அவர்கள் பார்வையில் அது கனடாவுக்கு செல்வதற்கான ஒப்பந்தம் தானே தவிர, நிஜமான திருமணம் கிடையாது. ஆனால், ஒப்பந்தத்தை மீறி அந்த பெண் முன்னதாகவே கனடா சென்று விட்டதால் தற்போது இந்த வழக்கு காவல்நிலையம் மற்றும் நீதிமன்றம் வரை வந்துவிட்டது.


சமீபத்தில், ஒப்பந்த திருமணத்தில் மோசடி செய்ததாக கூறி கபுர்த்தலாவை சேர்ந்த மணமகனின் குடும்பத்தார், மணமகள் மற்றும் அவரது பெற்றோர்கள் மீது வழக்கு பதிந்துள்ளனர். இதில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது.



மணமகன் குடும்பத்தின் தகவல்படி, இதற்காக அவர்கள் 40 லட்சம் வரை செலவு செய்துள்ளனர்.


ரூ. 45 லட்சம் மோசடி வழக்கு

முதல் வழக்கில் புகார்தாரர் பஞ்சாப் கபுர்த்தலாவாசியான பல்ஜித் ஜக்கியின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) புகாரின்படி, அவரது பெற்றோர்கள் மோகாவை சேர்ந்த கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற நபரோடு அறிமுகமாகியுள்ளனர். இவர்களிடம் கவிதா தனது மகள் ஸ்வாதியை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வெளிநாட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு பிறகு ஜக்கியின் இளைய தம்பி சவுரப்புக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அந்த பெண்ணை ஒப்பந்த திருமணம் செய்து வைக்கலாம் என்று முடிவு செய்துள்ளனர். அந்த சமயத்தில் இருவருக்கும் இடையில் 9 வயது வித்தியாசம் இருந்துள்ளது.


ஒப்பந்தத்தின்படி, திருமண செலவு மற்றும் ஸ்வாதியின் ஒட்டுமொத்த படிப்பு செலவையும் பல்ஜித் ஜக்கியின் குடும்பம் பார்த்து கொள்ளும். அதற்கு கைமாறாக ஸ்வாதி கனடா சென்று தனது கணவர் சவுரபை அங்கு அழைத்து கொள்ள வேண்டும்.


ஸ்வாதி மற்றும் சவுரப் 2019ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். முதல் தகவல் அறிக்கையின்படி, திருமண செலவுகள் அனைத்தும் மணமகனின் குடும்பத்தால் செய்யப்பட்டுள்ளது. 2019 செப்டம்பர் மாதம் ஸ்வாதிக்கு கனடா விசா கிடைத்து அவரும் அங்கு சென்று விட்டார்.


மணமகன் குடும்பத்தின் தகவல்படி, இதற்காக அவர்கள் 40 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளனர்.


கனடா சென்ற மூன்று மாதங்கள் கழித்து ஸ்வாதி தனது கணவர் சவுரபையும் அங்கு அழைத்து கொள்வதாக ஒப்பந்தத்தில் ஒப்புக்கொண்டுள்ளார் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் அதை செய்யவில்லை, இந்த சமயத்தில் சவுரபும் இந்தியாவில் இறந்துவிட்டார்.


அதற்கு பிறகு 2023ம் ஆண்டு மார்ச் மாதம் சவுரபின் மூத்த சகோதரர் பல்ஜித்தை திருமணம் செய்து கொள்வதற்காக இந்தியா வந்துள்ளார் ஸ்வாதி. இந்நிலையில் அவர்கள் இருவருக்குமிடையில் 13 ஆண்டுகள் வயது வித்தியாசம் இருந்துள்ளது.


ஜக்கியின் தகவல்படி, இந்த திருமணம் எந்த அழுத்தமும் இல்லாமல் நடந்துள்ளது. அனைத்து திருமண செலவுகளும் மீண்டும் ஜக்கியின் குடும்பத்தால் செய்யப்பட்டுள்ளது. 20 நாட்கள் இந்தியாவில் தங்கி விட்டு ஜக்கியை கனடாவுக்கு அழைத்து செல்வதாக உறுதியளித்துவிட்டு மீண்டும் கனடா சென்றுள்ளார் ஸ்வாதி.


ஆனால், அதற்கு பிறகு ஸ்வாதி தனது மொபைல் அழைப்புகளையும் ஏற்கவில்லை , அவரையும் கனடா அழைத்து செல்லவில்லை என்று தனது புகாரில் தெரிவித்துள்ளார் பல்ஜித். மேலும், ஸ்வாதி மற்றும் அவரது தாய் கவிதா தங்களை 45 லட்சம் ஏமாற்றி விட்டதாக தனது புகாரில் தெரிவித்துள்ளார் அவர்.


கத்தார்: மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களுக்கு தண்டனை குறைப்பு - முழு விவரம்

28 டிசம்பர் 2023

பிரிட்டன்: கொலை, தகாத உறவு என கூலிப்படை தலைவன் போல் வாழ்ந்த மத போதகர்

28 டிசம்பர் 2023

கனடா செல்வதற்காக பெண்களை திருமணம் செய்யும் ஆண்கள்பட மூலாதாரம்,BBC/PUNEET BARNALA

படக்குறிப்பு,

எந்த திருமண ஒப்பந்தமும் போடப்படவில்லை. நடந்து உண்மையான திருமணம் என மனைவி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது


பெண்ணின் தரப்பு என்ன சொல்கிறது?

கனடா சென்றுள்ள ஸ்வாதி மற்றும் அவரது தாய் கவிதாவிடமும் இதுகுறித்து பேசியது பிபிசி. இதற்கு பதிலளித்த ஸ்வாதி பல்ஜித் ஜக்கி குற்றம்சாட்டியுள்ள அனைத்து புகார்களும் அடிப்படையற்றவை என்று கூறியுள்ளார்.


“இதில் எந்த திருமண ஒப்பந்தமும் போடப்படவில்லை. நடந்து உண்மையான திருமணம்” என்று கூறியுள்ளார் அவர்.


விசா மற்றும் கல்விக்கான செலவு மணமகனின் குடும்பத்தால் தான் செலுத்தப்பட்டது என்று ஒப்புக்கொள்ளும் ஸ்வாதி, இருமுறை சவுரபை கனடா அழைத்து கொள்ள விண்ணப்பித்து, அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.


அதற்கு பிறகு சவுரப் இறந்து விட்டார். பிறகு மார்ச் 2023ம் ஆண்டு ஸ்வாதி பரஸ்பர உடன்பாட்டோடு சவுரபின் மூத்த சகோதர் பல்ஜித் ஜக்கியை மறுமணம் செய்து கொண்டுள்ளார்.


இந்நிலையில் திருமணம் முடித்து மீண்டும் ஸ்வாதி கனடா சென்ற பிறகு தொடர்ந்து அவரை மொபைலில் அழைத்து பல்ஜித் துன்புறுத்தி வந்ததாகவும், அதனால் அவர்களது உறவு மோசமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார் ஸ்வாதி. அதே போல் பல்ஜித் கனடா செல்வதற்கான விசாவை தான் விண்ணப்பிக்கவில்லை என்பதையும் அவர் ஒப்புக்கொள்கிறார்.


மறுபுறம், ஸ்வாதி 2023 ஜூனிலிருந்தே தன்னுடன் பேசுவதை நிறுத்தி விட்டதாகவும், அவரது தாயும் இந்த விஷயத்தில் தனக்கு எந்த வித ஆதரவும் வழங்கவில்லை என்றும் கூறுகிறார் பல்ஜித்.


ஸ்வாதியின் தாயும், பல்ஜித் மற்றும் ஸ்வாதிக்கு இடையில் ஒரு சில விஷயங்களில் போனிலேயே சண்டை நடந்தது. அதற்கு பிறகே இருவரின் உறவும் மோசமடைந்தாக கூறுகிறார்.


இந்தியாவில் இருந்து பாயும் சிந்து நதியில் தங்கம் எடுக்கும் பாகிஸ்தான் மக்கள்

28 டிசம்பர் 2023

உடல்நலம்: உங்கள் மலம் நீரில் மூழ்காமல் மிதப்பது ஆபத்தான அறிகுறியா?

3 மணி நேரங்களுக்கு முன்னர்

கனடா செல்வதற்காக பெண்களை திருமணம் செய்யும் ஆண்கள்பட மூலாதாரம்,BBC/PUNEET BARNALA

படக்குறிப்பு,

பெண் IELTS தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டு, கனடாவில் அவரது படிப்பு செலவை ஏற்றுக்கொள்ளும் ஆணை மணந்து கொள்கிறார்.


வெளிநாடு செல்வதில் ஆர்வம்

வெளிநாடு செல்வதற்காக, அதுவும் குறிப்பாக கனடா செல்வதற்காக ஒப்பந்த திருமணம் செய்து கொள்ளும் ட்ரெண்ட் பஞ்சாபில் சில காலமாக நிலவி வருகிறது.


இது போன்ற சம்பவங்களில், பெண் IELTS தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டு, கனடாவில் அவரது படிப்பு செலவை ஏற்றுக்கொள்ளும் ஆணை மணந்து கொள்கிறார்.


பிறகு, அவர் கனடாவை அடைந்தவுடன், அந்த ஆணையும் அவர் கனடாவுக்கு அழைத்து கொள்ள வேண்டும். வேறு முறையில் சொல்ல வேண்டுமானால் ஆணுக்கு கனடாவுக்கு செல்வதற்கான டிக்கெட் போன்றது இந்த திருமணம்.


2021 ஆம் ஆண்டு, இது போன்ற ஒரு வழக்கில் பர்னாலா மாவட்டத்தில் உள்ள கோதே கோபிந்த்புரா கிராமத்தைச் சேர்ந்த லவ்ப்ரீத் சிங் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட போது இந்த நிகழ்வு தலைப்புச் செய்தியானது. இதிலும் லவ்ப்ரீத் சிங் ஐஇஎல்டிஎஸ் தேர்ச்சி பெற்ற பெண்ணான பியாந்த் கவுரை திருமணம் செய்து கொண்டு அவர் வெளிநாடு செல்வதற்கான அனைத்து செலவுகளையும் செய்துள்ளார்.


அந்த பெண் கனடா சென்ற பிறகு, லவ்ப்ரீத் சிங்குடன் மொபைலில் பேசி வந்துள்ளார். ஆனால் ஒருநாள் லவ்ப்ரீத் சிங் தற்கொலை செய்து கொண்டார்.


லவ்ப்ரீத் சிங்கின் இந்த தற்கொலைக்கு பியாந்த் கவுரே காரணம் என்று அவரின் குடும்பத்தார் குற்றம் சாட்டினர்.


இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் உள்ளது. இது நடந்த சமயத்தில் இதே போல் பாதிக்கப்பட்ட பல ஆண்களும் முன்வந்ததாகவும், ஆனால் கனடாவுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை மக்களின் மூளைக்குள் அதிகம் ஏறிக் கிடப்பதால் தற்போது யாரும் முன்வராமல் இருக்கிறார்கள் என்றும் கூறுகிறார் லவ்ப்ரீத் சிங்கின் மாமா ஹர்விந்தர் சிங்.


விஜயகாந்த: சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும் சாகசங்கள் செய்த நாயகன்

28 டிசம்பர் 2023

விஜயகாந்த்: அரசியலிலும் சினிமாவிலும் சாதித்தவை

2 மணி நேரங்களுக்கு முன்னர்

கனடா செல்வதற்காக பெண்களை திருமணம் செய்யும் ஆண்கள்பட மூலாதாரம்,BBC/PUNEET BARNALA

படக்குறிப்பு,

அதிகம் நடக்கும் ஐஇஎல்டிஎஸ் திருமணங்கள் பஞ்சாபின் பொதுப் பிரிவில் தான் நடைபெறுகின்றன


நிபுணர்கள் கூறுவது என்ன?

பாட்டியாலாவின் பஞ்சாபி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியான கியான் சிங், பஞ்சாப் முழுவதுமே ஐஇஎல்டிஎஸ் திருமணத்தின் போக்கு காணப்படுகிறது என்கிறார்.


“அதற்கு காரணம் பஞ்சாபில் நிலவும் வேலைவாய்ப்பின்மையும், கனடா செல்லும் ஆசையும் தான். குறிப்பிட்ட பெண் கனடாவை அடைந்ததும், ஆண் மற்றும் பெண்ணின் பார்வையில் உள்ள வித்தியாசங்களால் விஷயங்கள் சிக்கலாகி விடுவதாக " கூறுகிறார் அவர்.


"இங்கு அதிகம் நடக்கும் ஐஇஎல்டிஎஸ் திருமணங்கள் பஞ்சாபின் பொதுப் பிரிவில் தான் நடைபெறுகின்றன."


ஆண்களின் கல்வி போதாமையாலும் , ஐஇஎல்டிஎஸ்தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்க முடியாததாலும், பெண்களை திருமணம் செய்து கொண்டு கனடா செல்ல நினைக்கிறார்கள் இந்த ஆண்கள்.


ஆனால், பெண்கள் கனடா சென்ற பிறகு அவர்கள் இருவரின் சிந்தனைகளிலும் உள்ள வித்தியாசம் நிலைமையை சிக்கலாக்கி, பிரச்னையை உண்டு செய்வதாக தெரிவிக்கிறார் அவர்.


திருப்பத்தூர் மாவட்டத்தில்  பள்ளிகளில் இருந்து இடைநின்ற சுமார் 600 மாணவர்களை கண்டறிந்து, அவர்கள் மீண்டும் கல்வி தொடர வழிவகை செய்துள்ளார் அம்மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன். யூடியூபராகும் ஆசை, இளைஞர்களின் சீண்டல்கள் போன்ற பல காரணங்களால் மாணவ, மாணவியர் பலரும் பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்டுள்ளனர். அவர்களை ஒவ்வொருவராக கண்டறிந்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மீண்டும் பள்ளியில் சேர்த்தது எப்படி?


திருப்பத்தூர் மாவட்டத்தில் 993 அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அதில், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.


அவர்களுள் 1,898 மாணவ, மாணவிகள் பள்ளிகளில் இருந்து இடைநின்றது கண்டறியப்பட்டு, அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் பொருட்டு பள்ளி கல்வித்துறை அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை நடத்தினார். முதல்கட்டமாக, நவம்பர் மாதம் ஏழாம் தேதி 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை இடை நின்ற 402 மாணவ, மாணவிகளை பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


இதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த தாசரியப்பனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 12 மாணவர்கள், 19 மாணவிகள் என மொத்தம் 31 மாணவ, மாணவிகளின் வீட்டிற்கே சென்று கல்வியை தொடராமல் இடைநின்றவர்களுக்கு அறிவுரைகளை கூறி, தன்னுடைய காரில் ஏற்றிக்கொண்டு பள்ளிக்குக் கொண்டு வந்துவிட்டு பாட புத்தகங்களை வழங்கியுள்ளார் ஆட்சியர்.


மாணவ, மாணவிகள் பலரும் பள்ளிகளில் இருந்து இடைநின்ற பல மாணவர்கள் பிபிசி தமிழிடம் பேசினர்.


'யூடியூபர்' ஆவதற்காக படிப்பை விட்ட மாணவர்

பள்ளி இடைநிற்றல்

தாசியப்பனூர் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர் ஒருவர், தனக்கு யூடியூபராக வர வேண்டும் ஆசை இருப்பதாகவும் `ரீல்ஸ்` எடுப்பதற்கு நேரத்தை செலவிட வேண்டியுள்ளது என்பதற்காக படிப்பை பாதியில் நிறுத்தி உள்ளதாக தெரிவித்தார்.


கொரோனா பொது முடக்கம், அதைத்தொடர்ந்து செல்போன், சமூக ஊடகங்கள் உள்ளிட்டவை பள்ளி மாணவர்களின் வாழ்வில் செலுத்திய தாக்கங்களை உணர்த்துவதாக இருந்தது அம்மாணவரின் பேச்சு.


மேலும், அதே பகுதியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர், பள்ளி முடிந்து மாலை நேரத்தில் வீடு திரும்பும்போது அங்குள்ள இளைஞர்கள் ஒரு சிலர் மாணவிகளை பின்தொடர்ந்து வந்து தொல்லை கொடுப்பதாகவும் செல்ஃபி எடுத்துக் கொள்வதாகவும் தங்களை தகாத முறைகளில் துன்புறுத்துவதாகவும் இதனால் தன்னால் படிப்பை தொடர முடியாமல் தான் நின்று விட்டதாக தெரிவித்தார்.


மேலும் அதே பள்ளியில் பயிலும் மற்றொரு மாணவி பிபிசியிடம் கூறுகையில், "எனக்கு தலைவலி பிரச்னை இருக்கிறது. இதனால் என்னால் படிப்பில் சரிவர கவனத்தை செலுத்த முடியவில்லை" என கூறினார்.


தன் குடும்பம் பொருளாதார ரீதியாக பின்தங்கியது என்றும் அவர் தெரிவித்தார்.


மேற்கூறிய மாணவ, மாணவிகள் பள்ளிகளில் மீண்டும் சேர்ந்துள்ளனர். தலைவலி பிரச்னை கொண்ட மாணவியை சிஎம்சி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்துள்ள மாவட்ட ஆட்சியர், மாணவியின் மருத்துவ செலவுகளை அரசே பார்த்துக் கொள்ளும் என தெரிவித்தார்.


தெலங்கானா தேர்தலில் தோற்றாலும் கொண்டாடப்படும் ‘பரேலக்கா’ - யார் இவர்?

10 டிசம்பர் 2023

உலகிலேயே சிங்கப்பூர் மாணவர்கள் கணிதத்தில் சிறந்து விளங்குவது எப்படி? சிங்கப்பூர் கணிதத்தில் என்ன சிறப்பு?

9 டிசம்பர் 2023

பள்ளி இடைநிற்றல்

வறுமையால் படிப்பை கைவிட்ட மாணவர்கள்

திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வரும் பசிலிகுட்டை பகுதியை சேர்ந்த மாணவர் கூறுகையில், "நான் சரியாக பள்ளிக்கு வராமல் போனதற்கு என்னுடைய வறுமை மற்றும் குடும்ப சூழல் தான் காரணம்" என்றார்.


அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருசில மாணவர்கள், `படித்தால் முன்னேற முடியாது, `எங்களுடன் ஜாலியாக இரு` என அவரிடம் கூறி `தவறாக வழிநடத்தியதும் மாணவரிடம் பேசியதிலிருந்து தெரியவந்தது.


"அவர்கள் சொல்வதையும் மீறி நான் பள்ளிக்கு சென்று வந்தேன். ஆனால், எனக்கு சலிப்பு வந்துவிட்டது. இதனால் பள்ளியிலிருந்து நின்றுவிட்டேன் " என்கிறார் அவர்.


அதன்பின், பள்ளியில் இடை நின்ற மாணவர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வர வேண்டும் என்று தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். வருகை பதிவுகளை வைத்து இடைநின்ற மாணவர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று பேசுங்கள் என அதில் ஆட்சியர் தெரிவித்திருந்தார்.


இதன்பின், அந்த மாணவரின் வீட்டுக்கு இரு ஆசிரியர்கள் சென்று பேசியுள்ளனர்.


"என்னுடைய சூழலை அவர்களிடம் தெரிவித்த போது, `பள்ளிக்கு வா, உனக்கு எல்லா உதவிகளையும் நாங்கள் செய்கிறோம்` என்று அறிவுரைகளை வழங்கினர்" என தெரிவிக்கிறார் அம்மாணவர்.


எதிர்காலத்தில் தான் ஒரு நல்ல ராணுவ வீரராக விரும்புவதாகவும் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்தால் இதற்கான வாய்ப்பு அளிப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருப்பதாக அம்மாணவர் கூறினார்.


வி.பி.சிங் தமிழ்நாட்டுக்கு என்ன செய்தார்?

27 நவம்பர் 2023

கேரளா கூட்ட நெரிசலில் 4 பேர் மூச்சுத்திணறி பலி - பல்கலைக் கழக விழாவில் என்ன நடந்தது?

26 நவம்பர் 2023

பள்ளி இடைநிற்றல்

எதிர்காலத்தில் சாதிக்க விரும்பும் மாணவர்கள்

திருப்பத்தூர் உஸ்மானியா பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் கூறுகையில், "என் குடும்பம் பொருளாதார ரீதியாக பின்தங்கியிருப்பதால், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று நான் பள்ளியிலிருந்து நின்று விட்டேன். என் அண்ணன் வேலைக்கு சென்றுகொண்டிருந்தார். ஆனால், அவருக்கு காச நோய் ஏற்பட்டு மூன்று மாத காலமாக வீட்டில் இருக்கிறார். இதனால், வீட்டு சூழ்நிலை மிகவும் மோசமாக இருப்பதால் என்னை வேலைக்கு அனுப்பினர்.


எனக்கு படிப்பதற்கு ஆசை இருந்தது. என்றாலும், என் குடும்ப சூழ்நிலையின் காரணமாக நான் படிப்பைவிட்டு வேலைக்கு சென்றேன். இப்போது கல்வித்துறையின் முன்னெடுப்பால் மீண்டும் பள்ளியில் சேர்ந்துள்ளேன். 12-ஆம் வகுப்பில் 300 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்க ஆசை உள்ளது நான் எதிர்காலத்தில் ஒரு நல்ல ஆசிரியராக விரும்புகிறேன்" என தெரிவித்தார்.


திரியாலம் ஜோலார்பேட்டை பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் கூறுகையில், "பத்தாம் வகுப்பில் 328 மதிப்பெண்கள் எடுத்துள்ளேன். குடும்ப சூழ்நிலை காரணமாக ஆறு மாத காலமாக வேலைக்கு சென்று இருந்தேன். மறுபடியும் நான் நவம்பர் மாதம் பள்ளி சேர வேண்டும் என்று வந்தேன், ஆனால் மீண்டும் சேர்க்க முடியாது என்று பள்ளியில் கூறி விட்டார்கள். எனக்கு ஓவியம் விளையாட்டுப் போட்டிகளில் அதிகம் விருப்பம் உள்ளது. நான் 12 ஆம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று போலீசாக விரும்புகிறேன் " என்று தெரிவித்தார்.


மற்றொரு மாணவர் கூறுகையில், "என்னுடைய அப்பா தேநீர் விற்பனை செய்கிறார். அம்மா பெட்டிக்கடை வைத்துள்ளார். எங்களுடையது கூட்டுக் குடும்பம். ஒரே வீட்டில் ஒன்பது பேர் வசித்து வருகிறோம். இதனால் நான் பள்ளிக்கு செல்லக்கூடிய சூழ்நிலை இல்லை. வறுமையின் காரணமாக பள்ளியில் இருந்து என்னை நிறுத்தி விட்டார்கள். மாவட்ட ஆட்சியரால் நான் மீண்டும் பள்ளிக்கு வர ஆரம்பித்துள்ளேன். எனக்கு படிக்க மிகவும் ஆர்வம் இருக்கின்றது. நான் படித்து டீச்சராக ஆசைப்படுகிறேன்" என்றார்.


நீட்: பள்ளியில் உயிரியல் படிக்காமலே மருத்துவ படிப்பில் சேரலாமா? புதிய விதிகளால் என்ன குழப்பம்?

25 நவம்பர் 2023

காஞ்சிபுரம்: பள்ளி குடிநீர் தொட்டியில் கிடந்தது மலமா? முட்டையா? ஆட்சியர் வந்ததும் காட்சிகள் மாறியது எப்படி?

25 நவம்பர் 2023

பள்ளி இடைநிற்றல்

"விழிப்புணர்வு இல்லை"

திரும்பத்தூர் மாவட்டத்தை சுற்றிலும் புங்கம்பட்டு நாடு, புதூர் நாடு, நெல்லிவாசல் நாடு, ஜவ்வாது மலை, ஏலகிரி மலை உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. அந்த மலைப்பகுதிகளில் பல்வேறு குக்கிராமங்களில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.


"அம்மக்களுள் பெரும்பாலானோர் அன்றாட வாழ்வுக்காக பிழைப்பை தேடி அண்டை மாவட்டங்கள், மாநிலங்களுக்கு சென்று விடுகின்றனர் இதனால் பிள்ளைகளை சரிவர பார்த்துக்கொள்ள முடியாமல் வீட்டில் இருக்கும் முதியவர்களிடம் ஒப்படைத்து செல்கின்றனர். இதனால் முதியவர்களை சிறுவர்கள் ஏமாற்றிவிட்டு பள்ளிக்கு செல்லாமல் நின்று விடுகின்றனர்.


மக்களுக்கு போதுமான விழிப்புணர்வும் படிப்பதற்கான சூழ்நிலைகளும் மற்றும் பொருளாதார ரீதியாக பின் தள்ளப்பட்டு இருப்பதாலும் மாணவர்கள் ஏராளமானோர் பள்ளியை விட்டு நின்று விடுகின்றனர். அவர்களைக் கண்டறிந்து மாவட்ட நிர்வாகம் பள்ளியில் மீண்டும் சேர்க்கும் பணியினை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக" பிபிசியிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


கோவை: ஏழாம் வகுப்பு முஸ்லிம் மாணவியிடம் ஆசிரியை வெறுப்புப் பேச்சா? உண்மை என்ன?

22 நவம்பர் 2023

திருப்பதியில் வைஷ்ணவ பிராமணர்கள்தான் லட்டு தயாரிக்க முடியும்: தேவஸ்தான அறிவிப்பால் சர்ச்சை

22 நவம்பர் 2023

பள்ளி இடைநிற்றல்

"நடவடிக்கை தொடரும்"

மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் கூறுகையில், "பள்ளிகளில் இருந்து இடைநின்ற மாணவிகளை கண்டறிந்து மீண்டும் பள்ளிக்கு வர செய்யும்போது குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்படுகின்றன. இளம் வயது தாய்மார்களின் மரணங்கள் தடுக்கப்படுகின்றன.


இனிவரும் காலகட்டங்களில் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் குறைந்தபட்சம் சுமார் ஆயிரம் மாணவர்களை மீண்டும் பள்ளிக்குக் கொண்டுவர பள்ளி கல்வித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது வரை சுமார் 600 மாணவ, மாணவிகள் மீண்டும் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்" என்றார்.


மாணவ, மாணவிகளின் சமூக - பொருளாதார காரணங்களையும், உடல் ரீதியான பிரச்னைகளையும் அலசி ஆராய்ந்து அதற்கான நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட நிர்வாகம் துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் காவல்துறைக்கும் பரிந்துரைத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.


மேலும், இடைநின்ற பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டாலும் அவர்களை அந்தந்த பள்ளி ஆசிரியர்களை கொண்டு தொடர்ந்து பள்ளிக்கு வருகிறார்களா என்று கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று அவர் கூறினார்.


மாணவ, மாணவிகளின் தனியுரிமையை காக்கும் பொருட்டு அவர்களின் பெயர்கள் இக்கட்டுரையில் தவிர்க்கப்பட்டுள்ளன.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.