டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தாண்டு சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங் பங்கேற்றார்.
டெல்லி கடமைப் பாதையில் நடைபெற்ற குடியரசு தின விழாவுக்கு திரௌபதி முர்முவும் இமானுவேல் மக்ரோங்கும் சிறப்பு அலங்கார குதிரை வண்டியில் சென்றனர். அவர்களுக்குப் பின்னால் குடியரசுத் தலைவரின் பாதுகாப்புப் பிரிவினர் அணிவகுத்துச் சென்றனர். அவர்கள் இருவரையும் பிரதமர் நரேந்திர மோதி வரவேற்றார்.
இதையடுத்து, தேசிய கீதம் ஒலிக்க, 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க தேசிய கொடியை ஏற்றினார் குடியரசுத் தலைவர் முர்மு.
பின்னர், பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது. மேலும், பாதுகாப்புப் படைகளில் பயன்படுத்தப்படும் பீரங்கி வாகனங்களின் அணிவகுப்பும் நடைபெற்றது.


Post a Comment
Post a Comment