குற்றவாளிகளின் மரபணு மாதிரிகள் தம்மிடம்-ஜின்டெக் நிறுவனம்





ஆயிரத்திற்கும் மேற்பட்ட குற்றவாளிகளின் மரபணு மாதிரிகள் தம்மிடமுள்ளதாக ஜின்டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

குற்றச்செயல்கள் தொடர்பில் 2002 ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 3900 மரபணு பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி பேராசிரியர் ருவன் இலேப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவின் பேரில் விசாரணைகளுக்காக மரபணு பரிசோதனைகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ஜின்டெக் நிறுவனம் முன்னெடுத்து வருகின்றது.

சம்பவ இடங்களில் கண்டெடுக்கப்படும் பல்வேறு உயிரியல் தடயங்கள் ஊடாக அவற்றுக்கு சொந்தமான மரபணுக்களை உருவாக்கி குற்றம் தொடர்பில் கைது செய்யப்படும் சந்தேநபர்களின் மரபணுக்களுடன் ஒப்பிட்டு இறுதி தீர்மானத்தை மேற்கொள்ளுதல் இந்த நிறுவனத்தின் கடமையாகும்.

அத்துடன் அது தொடர்பிலான அறிக்கையினை நீதிமன்றில் சமர்ப்பிக்கும் பொறுப்பும் ஜின்டெக் நிறுவனத்திற்கு உரித்தானது என்பது குறிப்பிடத்தக்கது.