துப்புரவுக்கான மனித உரிமை: 'மலையக மக்களுக்கும் கிடைக்க வேண்டும்

'
பாதுகாப்பான குடிநீருக்கான உரிமையுடன் துப்புரவுக்கான உரிமையையும் தனியான ஒரு மனித உரிமையாக அங்கீகரித்து ஐநா நிறைவேற்றியுள்ள முக்கிய தீர்மானத்தை ஐநாவின் துறைசார் நிபுணர்கள் வரவேற்றுள்ளனர்.

உலகெங்கிலும் 250 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு நல்ல துப்பரவு வசதிகள் கிடைப்பதில்லை என்று ஐநா கூறுகின்றது.

இந்த ஆண்டில் எட்டப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த ஐநாவின் புத்தாயிரம் ஆண்டு அபிவிருத்தி இலக்குகளில், உலகெங்கிலும் அடிப்படை சுத்தம்-சுகாதாரப் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளும் முக்கிய இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், பெருமளவில் எட்டப்படாதுபோயுள்ள இலக்குகளில் இதுவும் ஒன்று.

உலகெங்கிலும் கிட்டத்தட்ட 100 கோடிப்பேர் திறந்தவெளி பகுதிகளில் மலம் கழிப்பதாகவும் அவர்களில் 10 பேரில் 9 பேர் கிராமப்புற மக்கள் என்றும் ஐநா கூறுகின்றது.

'இந்தியா- 59 கோடிப் பேர்'
குறிப்பாக, இந்தியாவில் சுமார் 59 கோடிப்பேர் திறந்தவெளி பகுதிகளில் தங்களின் இயற்கைக் கடன்களை கழிப்பதாக புள்ளிவிபரம் ஒன்று கூறுகின்றது.
போதிய தரமான வாழ்க்கையை வாழ்வதற்கான உரிமையில் துப்புரவான சுற்றுச்சூழலுக்கான உரிமை இன்றியமையாத அங்கம் என்று ஐநாவின் பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகளுக்கான குழுவின் தலைவர் வலீத் சாடி கூறியுள்ளார்.

புதிய தீர்மானத்தின் மூலம், 2030-ம் ஆண்டுக்குள் எட்டப்பட வேண்டிய நிலையான அபிவிருத்திகளுக்கான நிகழ்ச்சிநிரலில் உலக நாடுகள் இந்த

பாதுகாப்பான குடிநீருக்கான உரிமையுடன் துப்புரவுக்கான உரிமையையும் தனியான ஒரு மனித உரிமையாக அங்கீகரித்து ஐநா நிறைவேற்றியுள்ள முக்கிய தீர்மானத்தை ஐநாவின் துறைசார் நிபுணர்கள் வரவேற்றுள்ளனர்.
உலகெங்கிலும் 250 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு நல்ல துப்பரவு வசதிகள் கிடைப்பதில்லை என்று ஐநா கூறுகின்றது.

இந்த ஆண்டில் எட்டப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த ஐநாவின் புத்தாயிரம் ஆண்டு அபிவிருத்தி இலக்குகளில், உலகெங்கிலும் அடிப்படை சுத்தம்-சுகாதாரப் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளும் முக்கிய இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், பெருமளவில் எட்டப்படாதுபோயுள்ள இலக்குகளில் இதுவும் ஒன்று.

உலகெங்கிலும் கிட்டத்தட்ட 100 கோடிப்பேர் திறந்தவெளி பகுதிகளில் மலம் கழிப்பதாகவும் அவர்களில் 10 பேரில் 9 பேர் கிராமப்புற மக்கள் என்றும் ஐநா கூறுகின்றது.
'இந்தியா- 59 கோடிப் பேர்'
குறிப்பாக, இந்தியாவில் சுமார் 59 கோடிப்பேர் திறந்தவெளி பகுதிகளில் தங்களின் இயற்கைக் கடன்களை கழிப்பதாக புள்ளிவிபரம் ஒன்று கூறுகின்றது.
போதிய தரமான வாழ்க்கையை வாழ்வதற்கான உரிமையில் துப்புரவான சுற்றுச்சூழலுக்கான உரிமை இன்றியமையாத அங்கம் என்று ஐநாவின் பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகளுக்கான குழுவின் தலைவர் வலீத் சாடி கூறியுள்ளார்.

விடயத்தில் கவனம் செலுத்த வழியேற்படுத்திக் கொடுத்துள்ளதாக குடிநீர் மற்றும் துப்புரவுக்கான மனித உரிமைகள் தொடர்பான ஐநாவின் சிறப்பு பிரதிநிதி லெயோ ஹெல்லர் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு மனிதரும், எந்தவிதமான பாரபட்சமும் இன்றி, பாதுகாப்பான, சுகாதாரமான, சமூகக் கலாசார ரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடிய, தனிப்பட்ட கௌரவத்தையும் மரியாதையையும் உறுதிசெய்யக்கூடிய விதத்தில் துப்புரவான சுற்றுச்சூழலுக்கான வசதிகளை பெறக்கூடிய உரிமை இருக்கின்றது என்று நியூயோர்க்கில் உள்ள ஐநாவின் பொதுச்சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
'மலையகத்தில் நிலைமை மோசம்'
கழிப்பறைகள் மற்றும் சுத்தமான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் ஆசியாவில் முன்னேறிய நாடுகளில் ஒன்றாகவே இலங்கை பார்க்கப்படுகின்றது.
ஆனால், அங்கு பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வாழ்கின்ற மலையகப் பகுதிகளில் இந்த வசதிகள் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்துவருவதாகவும், இந்தப் பிரச்சனையில் அரசாங்கமும் ஐநாவும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் சமூக செயற்பாட்டாளர்கள் கோரிவருகின்றனர்.
மலையக மக்களின் குடிநீர், கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவது தொடர்பில் கடந்த அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட 10-ஆண்டுத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கண்டியிலிருந்து இயங்கும் சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் இயக்குநர் பெ. முத்துலிங்கம் தெரிவித்தார்.
அரசசார்பற்ற நிறுவனங்கள், அதே திட்டத்தை மீண்டும் புதிய அரசாங்கத்திடமும் முன்வைத்துள்ளதாகவும் முத்துலிங்கம் தெரிவித்தார்.