புழுத் தொற்று பார்வைக் கோளாறு: '2020-இல் தடுப்புமருந்து தயாராகும்'





ரிவர் ப்லைண்ட்னஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஒருவகை ஒட்டுண்ணிப் புழுத் தொற்றினால் ஏற்படக்கூடிய குருட்டு நோய்க்கு எதிரான தடுப்புமருந்தை உருவாக்கக்கூடிய மூன்று முக்கிய மூலக்கூறுகளை கண்டுபிடித்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பெரும்பாலும் ஆற்றை அண்டி காணப்படும் இந்த ஒட்டுண்ணிப் புழுக்களால் தொற்றக்கூடிய இந்த நோய் ஆண்டுக்கு சுமார் ஒரு கோடியே 70 லட்சம் பேரை பாதிக்கின்றது.
இவர்களில் 90 வீதத்துக்கும் அதிகமானவர்கள் மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள்.
2020-ம் ஆண்டளவில் பாதுகாப்பு சோதனைகளுக்காக இந்த தடுப்பு மருந்துகளில் ஒன்று தயாராகிவிடும் என்று நம்பப்படுகின்றது.
2025-ம் ஆண்டளவில் அதன் பயன்பாடு பற்றிய சோதனைகளுக்காக இந்த மருந்து தயாராகவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது