சைகை மொழி அதிசய கொரில்லா - 46 வயதில் உயிரிழந்த சோகம்




கலிபோர்னியா:

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள உட்சைட் நகரின் காட்டுப்பகுதியில் பாதுகாக்கப்பட்டு வரும் மிகவும் பிரபலமான கொரில்லா கோகோ. 46 வயதான கொரில்லா  சைகை மொழி மூலம் மனிதர்களுடன்  நெருங்கி பழகும் திறமை உடையது. சான் பிரான்சிஸ்கோ மிருகக்காட்சி சாலையில் பிறந்த இந்த கொரில்லாவை மையமாக வைத்து பல ஆவணப்படங்கள் மற்றும் புத்தகங்கள் வெளியிடப்பட்டன. 


கோகோவின் பயிற்சியாளரான பட்டர்சன் சிறு வயது முதல் ஆங்கில வார்த்தைகளை கோகாவிற்கு பயிற்சி அளித்தார். இதன் மூலம் கோகோ 2 ஆயிரம் வார்த்தைகளை சைகை மூலம் பேசும் பழக்கம் கொண்டது. கோகோவை காண பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் இந்த இடத்தில் குவிகின்றனர்.

இந்நிலையில், உலகளவில் பிரபலமடைந்த கோகோ கடந்த செவ்வாய்கிழமை காலை மரணமடைந்தாக அதிகாரிகள் தெரிவித்தனர். தூங்கிக் கொண்டிருக்கும் போது கோகோவின் உயிர் பிரிந்ததாக கூறினர். கோகோவின் மரணம் அனைவரிடமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #koko