சச்சின் டெண்டுல்கரின் பயிற்றுவிப்பாளர் அச்ரேக்கர் மறைவு


2013, நவம்பர் 16, மும்பை வாங்கடே மைதானம் மிகவும் நெகிழ்ச்சியுடன் காணப்பட்டது. 24 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட் விளையாடி வந்த #சச்சின் டெண்டுல்கர் ஓய்வுபெற்ற நாள் அது.
மைதானத்தில் ஏராளமான ரசிகர்கள், முன்னணி வீரர்கள், முன்னாள் வீரர்கள் என்று பலர் குழுமியிருக்க, சச்சின் டெண்டுல்கர் தனது கிரிக்கெட் வாழ்க்கையை செதுக்கிய பலர் குறித்து நினைவுகூர்ந்தார்.
தனது பயிற்சியாளர் #அச்ரேக்கர் குறித்து குறிப்பிடுகையில்,''நான் எவ்வளவு ரன்கள் அடித்தாலும் இன்னும் கொஞ்சம் ரன்கள் அடித்திருக்கலாம், இப்படி இந்த ஷாட் அடித்திருக்கக்கூடாது என்று எப்போதும் எனக்கு ஆலோசனை கூறுவார். நான் திருப்தியடைந்து விடக்கூடாது என்பதற்காக அவர் இவ்வாறு கூறலாம். ஆனால், அச்ரேக்கர் சார்! இன்றாவது நீங்கள் ஒருவார்த்தை என் பேட்டிங்கை பாராட்டி ஒரு வார்த்தை பேசலாம், ஏனென்றால் இன்றோடு நான் ஒய்வு பெறுகிறேன்'' என்று அப்போது சச்சின் கூறினார்.
மாஸ்டர் பேட்ஸ்மேன் என்றழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் உள்பட இந்திய மற்றும் உலக அளவில் பல முன்னணி பேட்ஸ்மேன்களுக்கு பயிற்சியளித்து உருவாக்கிய பயிற்சியாளரான ரமாகாந்த் அச்ரேக்கர் புதனன்று மும்பையில் காலமானார்.
சிறந்த பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் துரோணாச்சரியர் விருது பெற்ற அவருக்கு வயது 87.
Image copyrightSACHIN TENDULKAR