நெனசலவின் விழா

பாறுக் ஷிஹான்

கல்முனை கே.டி.எம்.சி நெனசலவின் 10ம் ஆண்டு நிறைவு விழாவும் சான்றிதழ் வழங்கும் விழாவும் ஞாயிற்றுக்கிழமை (14) வரவேற்பு மண்டபம் ஒன்றில்  நிறுவனத்தின் பணிப்பாளர் எஸ்.எம். ஹாஜாவின்  தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்முனை அபிவிருத்திக்கும் முகாமைத்துவத்திற்குமான சபையின்  தலைவர் வைத்திய கலாநிதி டொக்டர் ஏ.எல்.எம் நஸீர்  கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் ஒன்பது பாடநெறிகளை பூர்த்தி செய்த 220 மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் கல்முனை பகுதியில் பிரசித்திபெற்ற பாடசாலைகளில் புதிதாக நியமிக்கப்பட்ட அதிபர்களுக்கு நினைவுச்சின்னங்களும் வழங்கிவைக்கப்பட்டது. 

 அத்துடன்  வருடா வருடம் ஊடகவியளாளர்களை கௌரவிக்கும் நிகழ்வின் இவ்வருடம் சிரேஸ்ட ஊடகவியளாளர் யூ. முகம்மட் இஸ்ஹாக் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.


Advertisement