தொழில்சார் வைத்தியர், ஒளி ஓவியர் ஆகில் அஹ்மத்தின் ஒளிப்படக் கண்காட்சி

#இஸ்மாயில் உவைசுர்ரஹ்மான்.
அக்கரைப்பற்றில் ஒளிப்படக் கண்காட்சி ஆரம்பம்!!!
சிரேஷ்ட வைத்தியர், புகைப்படக் கலைஞர் எஸ்.ஆகில் அஹ்மத்தின் ஒளிப்படக் கண்காட்சி இன்று (10) ஞாயிற்றுக்கிழமை, நாளை (11) திங்கட்கிழமை, மற்றும் நாளை மறுதினம் (12) செவ்வாய்க்கிழமை காலை 9 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை அக்கரைப்பற்று பாறூக் சரிபுதீன் கலையரங்கத்தில் இடம்பெறவுள்ளது.

வைத்தியர் ஆகில் அஹ்மத் கிழக்கு மாகாணத்தின் வனவிலங்கு புகைப்படபடவியலாளர்களில் மிகவும் பிரசித்தி பெற்றவராவார்.

இலங்கையில் மாத்திரமல்லாது வெளிநாடுகளிலும் அவர் பல அரிதான வனவிலங்கு புகைப்படங்களை எடுத்துள்ள அவர் அன்மையில் கென்யா நாட்டின் 'மசாய் மாறா' தேசிய வனத்துக்கு சென்று தரம் வாய்ந்த பல படங்களை எடுத்து தனது ஆளுமையை நம் பிரதேசத்திற்கும், நமது திருநாட்டிற்கும் வெளிக்காட்டினார் என்றால் அது மிகையாகாது.


Advertisement