இலங்கையின் முன்னாள் பிரதமர் தி.மு ஜயரத்ன காலமானார்


(படத்தில் தி்மு உடன் கட்டுரையாளர் இஸ்மாயில் உவைசுர்ரஹ்மான்)
பிரபலமாக தி.மு.ஜயரத்ன என அறியப்பட்ட திசாநாயக்க முதியன்சலாகே ஜயரத்ன (Disanayaka Mudiyanselage Jayaratne, பிறப்பு: ஏப்ரல் 6 1936.இலங்கையின் 20வது பிரதமரும் மூத்த அரசியல்வாதியுமாவார். இலங்கை சுதந்திரக் கட்சியின் துவக்க உறுப்பினரான ஜயரத்ன 1970 ஆம் ஆண்டு முதன் முதலாக இலங்கை நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார். 

2010 ஏப்ரல் 21 ஆம் நாள் இலங்கையின் 20வது பிரதமராக பதவியேற்றார்[3].சுதந்திர இலங்கையின் 7வது நாடாளுமன்றம் (1970), சுதந்திர இலங்கையின் 9வது நாடாளுமன்றம் (1989), சுதந்திர இலங்கையின் 10வது நாடாளுமன்றம் (1994), சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.