திருமலை மாவட்டத்திலிருந்து, மருத்துவத் துறைக்கு


மூதுாரின் மிகவும் வசதி குறைந்த குடும்பத்திலிருந்து மருத்துவத் துறைககுத் தெரிவாகியுள்ளார் இந்த மாணவி முசாத்திகா பாத்திமா என்ற இந்தப் பெண்மணி.
திருமலை மாவட்டத்திலிருந்து மருத்துவை துறைக்குத் தெரிவு செ்ய்யப்பட்ட இவரது மாவட்ட தரம் 1 என்பது குறிப்பிடத்தக்கது

திருகோணமலை ஸாஹிறா கல்லூரியில் விஞ்ஞான துறையில் கற்ற மூதூர் ஷாபி நகரைச் சேர்ந்த மீராசா பாத்திமா முஸாதிகா விஞ்ஞான பிரிவில் திருகோணமலை மாவட்டத்தில் 01 ஆம் நிலையினை பெற்று மருத்துவ துறைக்கு தெரிவாகி தான் பிறந்த மூதூருக்கும், தனது பெற்றோருக்கும் பெருமை தேடிக் கொடுத்துள்ளார்.

மருத்துவ துறைக்கு தெரிவான முஸாதிகாவின் வீட்டுக்குச் சென்று அவர்களது குடும்பத்தாரோடு பேசும் சந்தர்ப்பம் இன்று காலை கிடைத்தது.அதன்போது அவர்களது குடும்ப பின்னணியையும் முஸாதிக்கா கல்வி கற்ற கடின நிலையினையும் அறிய முடிந்தது.இருப்பினும் சில விடயங்களை கருத்தில் கொண்டு விவரிக்கமுடியவில்லை. அதனையும் தாண்டி மகிழ்ச்சியில் எமக்கு வழங்கிய உபசரிப்பு மெய்சிலிர்க்க வைத்தது.

சுருங்க கூறினால் வறுமை கல்விக்கு தடையல்ல என்பதற்கு எடுத்து காட்டு முஸாதிக்கா.

(முஸாதிக்காவின் எதிர்கால கனவு VOG ஆக வந்து இனமத பேதங்களுக்கு அப்பால் சேவையாற்ற வேண்டும் என்பதாகும் அது நிறைவேற இறைவன் அருள்புரிவானாக!)