அமைச்சரது வாகனம் மோதியது.

வனஜீவராசிகள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன பயணித்த ​சொகுசு வாகனத்துடன் மோட்டார் சைக்கிளொன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்து இருவர் காயமடைந்துள்ளனர்.
​நேற்று  (16) இரவு 7.35 மணியளவில் புத்தளம்- திரு​கோணமலை வீதியின் ரன்பத்வல பிரதேசத்தில் இடம்பெற்ற இவ்விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆணொருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மனைவியும் குழந்தையும் படுகாயமடைந்து அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


Advertisement