கல்முனை அரச அலுவலகம் ஒன்றில் அட்டகாசமாக புகுந்த பாம்பு


பாறுக் ஷிஹான்

அரச அலுவலகம் ஒன்றில் அட்டகாசமாக புகுந்த பாம்பு ஒன்று கொல்லப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம்  கல்முனை பகுதியில் அமைந்துள்ள அரச அலுவலகத்தின் பின்புறமாக மலைப்பாம்பு போன்ற தோற்றம் கொண்ட பாம்பு திடிரென உட்புகுந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை(7) மதியம் குறித்த அலுவலகத்திற்குள் உட்புகுந்த சுமார் 7 அடி கொண்ட பாம்பினால் அவ்வலுவலகத்தில் பணியாற்றிய உத்தியோகத்தர்கள் அல்லோலகல்லோலப்பட்டனர்.

பின்னர் பாதுகாப்பு காரணம் கருதி குறித்த பாம்பு அடித்து கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.Advertisement