ஆலடியடிவேம்பில், விபத்தினால் சிறுவன் உயிரிழப்புக்கு காரணமானவருக்கு சிறைத் தண்டனை


(எஸ்.ரி.ஜமால்டீன்)
அக்கரைப்பற்று ஆலயடிவேம்பு நாவற்காடு என்ற பிரதேசத்தில் சிறுவன் ஒருவருக்கு விபத்தினால் மரணத்தை ஏற்படுத்திய நடேசன் கிருஸ்ணலதன் என்பவரை, வழக்கு விசாரணையில் முடிவில் விபத்தினால் மரணத்தை ஏற்படுத்தியதற்கு குற்றவாளியாக அக்கரைப்பற்று நீதவான்  நீதிமனறினால்  இன்ங்காணப்பட்டு குறித்த குற்றவாளிக்கு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

குறித்த 7 குற்றச் சாட்டுக்களில்,முதலாவது குற்றத்திற்காக ஒரு வருட கட்டாய சிறைத் தண்டணையும் 7 வது குற்றச்சாட்டுக்கு 5 மாதங்கள் சாதாரண சிறைத் தண்டதையும் வழங்கியதுடன், தண்டப் பணம் செலுத்தாமையினால் 24 மாத காலங்கள் சிறைத் தண்டனையினையும் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி பெருமாள் சிவக்குமார். இன்றைய தினம் வழங்கித் தீர்ப்பளித்தார்.

பாதிக்கப்பட்ட சிறுவனின் சார்பில் சடடத்தரணி தமிழினியன் அவர்களும் குற்றவாளியின் சார்பில், சட்டத்தரணிகள் ஆர்கிலா,சமீம் ஆகியோர் ஆஜராகினர்.