அக்கரைப்பற்றில்,ஒரு தனி மரம் விருட்சமாகிறது, ஹாபிழ் அமீர் அம்ஜத் பலாஹி

(எம் வை இர்பான் )
ஒரு தனி மரம் விருட்சமாகிறது 
ஹாபிழ் அமீர் அம்ஜத்  பலாஹி அக்கரைப்பற்றில் மூத்த ஹபீஸ்களில் ஒருவரான ஹாபிஸ் அமீர் அம்ஜத்  பலாஹி கடந்த இருபத்து மூன்று வருடங்களாக அல் முகர்ரமா குர் ஆன் மனமிடும் மத்ரஸாவை நடத்தி வருகிறார் 

இதுவரை 53 ஹாபிள்கள்  இந்த அல் முகர்ரமா குர் ஆன் மனமிடும் மத்ரஸாவிலிருந்து பட்டம் பெற்று  வெளியேறியிருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும் 

ஹாபிஸ் அமீர் அம்ஜத்  பலாஹி முழு நேரமாக இந்த மத்ரஸாவின் வளர்ச்சிக்காக  செயல் ஆற்றி வருகின்றார் 

ஒரு தனி மனிதராக உழைத்து பல 
ஹாபிள்களை உருவாக்கி இறை வேதத்தை மணம்  பரப்ப செய்திருப்பது எல்லோராலும் இலகுவில் செய்து விட  முடியாத காரியம் 

இந்த அரும் பணியை செய்திருக்கின்றார் அம்ஜத் ஹபிஸ் அவரை பாராட்டியாக வேண்டும் 

ஒரு ஹாபிஸாக பட்டம் பெற்று வெளியேறியவர் இன்று பல ஹாபிள்களை உருவாக்கி இறை மறையை  விருட்சமாக்கியிருக்கிறார்  
அம்ஜத் ஹபிஸ் 


Advertisement