'கோவிட்-19 எமது ஆய்வுகூடத்தில் இருந்து பரவவில்லை"

இணையத் தளத்தின் அதிகாரப்பூர்வ சமீபத்திய தகவல் படி உலகம் முழுதும் 213 நாடுகளில் பரவியிருக்கும் கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முக்கிய புள்ளி விபரம் கீழே :

உலகளாவிய ரீதியில்,

மொத்த தொற்றுக்கள் : 5 529 657
மொத்த இறப்புக்கள் : 347 166
குணமடைந்தவர்கள் : 2 318 625
ஆக்டிவ் தொற்றுக்கள் : 2 863 866
மோசமான நிலையில் உள்ளவர்கள் : 53 218

நாடளாவிய புள்ளி விபரம் :

அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 1 688 709 : மொத்த இறப்புக்கள் : 99 348
பிரேசில் : 365 213 : 22 746
ரஷ்யா : 353 427 : 3633
ஸ்பெயின் : 282 852 : 28 752
பிரிட்டன் : 259 559 : 36 793
இத்தாலி : 229 858 : 32 785
பிரான்ஸ் : 182 584 : 28 367
ஜேர்மனி : 180 331 : 8371
துருக்கி : 156 827 : 4340
இந்தியா : 140 172 : 4041
ஈரான் : 137 724 : 7451
பெரு : 119 959 : 3456
கனடா : 84 699 : 6424
சீனா : 82 985 : 4634
பாகிஸ்தான் : 56 349 : 1167
சுவிட்சர்லாந்து : 30 746 : 1907
ஜப்பான் : 16 550 : 820
தென்கொரியா : 11 206 : 267
இலங்கை : 1162 : 10

இன்றைய புள்ளி விபரப்படி உலகளவில் மொத்த தொற்றுக்கள் 55 இலட்சத்தைக் கடந்தும், மொத்த இறப்புக்கள் 3 இலட்சத்து 47 ஆயிரத்தைக் கடந்தும் உள்ளது. மிக அதிகபட்சமாக அமெரிக்காவில் 16 இலட்சத்து 88 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்களும், உயிரிழப்புக்கள் 1 இலட்சத்தை மிகவும் அண்மித்தும் உள்ளன.

மொத்தத் தொற்றுக்கள் அடிப்படையில் ஈரானை இந்தியா பின்னுக்குத் தள்ளியுள்ளது. சீனாவை கனடா பின்னுக்குத் தள்ளியுள்ளது. இந்தியாவில் மொத்த தொற்றுக்கள் 1 இலட்சத்து 40 ஆயிரத்தைக் கடந்தும், கனடாவில் மொத்த தொற்றுக்கள் 84 ஆயிரத்தைக் கடந்தும் உள்ளது. உலகளவில் தொற்றுக்கள் பாதிப்பு அடிப்படையில் டிசம்பரில் முதலிடத்தில் இருந்து தற்போது 14 ஆவது இடத்தில் உள்ள சீனா தனது நாட்டில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்றுக்கள் ஏற்படவில்லை என ஞாயிற்றுக்கிழமை அறிவித்திருந்தது.

இதேவேளை கொரோனா தொற்று எமது வைராலாஜி ஆய்வு கூடத்தில் இருந்து உருவாகவில்லை என்றும் எமது ஆய்வுகூடத்தில் இருந்து இது கசிந்தது என்பது கட்டுக் கதை என்றும் சீனாவின் வுஹான் நகரில் உள்ள மருத்துவ ஆய்வு கூடம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இத்தகவலை அந்த மருத்துவ ஆய்வு கூடத்தின் இயக்குனர் வாங் யான்க்யி உறுதிப் படுத்தியுள்ளார்.

மறுபுறம் கொரோனா பரவுதல் வேகம் மிகவும் தணிந்திருப்பதால் தனது நாட்டில் ஊரடங்கு உத்தரவை மீளப் பெறுவதாக ஜப்பான் பிரதமர் சின்சோ அபே அறிவித்துள்ளார். ஜப்பானில் எப்பிரல் 16 ஆம் திகதி முதல் 47 மாகாணங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந்தது. நிலமை சீரடையாது இருந்ததால் மே 7 ஆம் திகதி இந்த ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப் பட்டது. ஜப்பானில் இந்த வருடம் ஜூலை 24 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 9 ஆம் திகதி வரை நடைபெறவிருந்த சர்வதேச ஒலிம்பிக் போட்டிகள், கொரோனா அச்சுறுத்தலால் அடுத்த வருடம் ஒத்திப் போடப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஜப்பானின் அனைத்துப் பகுதிகளிலும் ஊரடங்கு தளர்த்தப் பட்டுள்ள போதும் அங்கு சமூக விலகலும், முகக் கவசம் அணிவதும் கட்டாயமாக்கப் படும் எனத் தெரிய வருகின்றது.Advertisement