கொழும்பு, கம்பஹா தவிர்ந்த மாவட்டங்களில் நாளை முதல் பஸ் போக்குவரத்து




கொழும்பு, கம்பஹா தவிர்ந்த மாவட்டங்களில் நாளை முதல் பஸ் போக்குவரத்து
சுகாதாரப் பிரிவினர் அரசாங்கத்திற்கு வழங்கியுள்ள ஆலோசனைகளுக்கு அமைய கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய பகுதிகளுக்கான மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்தை நாளை (26) முதல் ஆரம்பிப்பதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. பஸ் போக்குவரத்து அதிகாலை 4.30 மணி முதல் பிற்பகல் 6 மணி வரை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பஸ்கள் நிறுத்தப்படும் இடம் வரை மாத்திரமே பயணக் கட்டணத்தை அறவிட முடியும் என அமைச்சு அறிவித்துள்ளது. பஸ்களில், பஸ்ஸின் இறுதி நிறுத்தம் தௌிவாக முன் கண்ணாடியில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என்பதுடன் சுகாதார பிரிவினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கு இணங்க அனைத்து பயணிகளும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை முதல் பஸ் போக்குவரத்து இடம்பெறும் முறை தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் திலான் மிருண்டோ தௌிவுபடுத்துகின்றார்