"வற்றாத நதி,தேவானந்தா'


வி.சுகிர்தகுமார் 
  

  ஈழமக்கள் ஜனநாயககட்சி என்பது புதிய கட்சி அல்ல .இலங்கை அரசியலில் ஒன்றாக கலந்த கட்சி. அதன் தலைவர் தோழர் டக்ளஸ் தேவானந்தா எந்த தேர்தலிலும் தோற்றுவிடாத மாபெரும் தலைவன், வற்றாத நதி என முன்னாள் கிழக்கு மாகாணசபை அமைச்சரும் ஈழமக்கள் ஜனநாயககட்சியின் வீணைச்சின்னத்தில் அம்பாரை மாவட்டத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளருமான துரையப்பா நவரெட்ணராஜா தெரிவித்தார்.

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் அம்பாரை மாவட்டத்தில் ஈழமக்கள் ஜனநாயககட்சியின் ( EPDP) சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு நேற்று மாலை(21) pppp நடைபெற்றது.

இதன் பிரகாரம் 01ஆம் இலக்கத்தில் கந்தசாமி சச்சிதானந்தசிவம், 02ஆம் இலக்கத்தில் கணபதிப்பிள்ளை பாலசுந்தரம், 03ஆம் இலக்கத்தில் தங்கராசா புஸ்பராசா, 04ஆம் இலக்கத்தில் தங்கராசா வரதராஜன், 05ஆம் இலக்கத்தில் திலகசூரிய ரூப பிரசாந்த், 06ஆம் இலக்கத்தில் துரையப்பா நவரெட்ணராஜா, 07ஆம் இலக்கத்தில் முருகேசு தவயோகினி, 08ஆம் இலக்கத்தில் வெள்ளசாமி ரஜனி, 09ஆம் இலக்கத்தில் சிவநேசன் யுகிதனேசன், 10ஆம் இலக்கத்தில் செல்லப்பா மகேந்திரராஜா ஆகியோரும் போட்டியிடுவதாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்  தோழர் டக்ளஸ் தேவானந்தா போராட்ட காலம் முதல் தமிழர்களுக்காக போராடிய தலைவர். ஏனைய தமிழ் தலைமைத்துவங்களோடு தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர்.  அம்பாரை மாவட்டம் மட்டுமல்லாது வடகிழக்கு உள்ளிட்ட பல பிரதேசங்களில் அபிவிருத்தியை செய்த தலைவன். தமிழர்களுக்காக கபினட் அமைச்சு பதவியை பெறும் ஒரே தலைவராகவும் இருக்கின்றார். இதன் காரணமாகவே அவருடன் இணைந்து நாங்கள் பயணிக்க முடிவெடுத்தோம்.

மேலும் அம்பாரை மாவட்டம் பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுத்த மாவட்டம். ஆனாலும் இதுவரையில் இங்குள்ள அரசியல் பிரச்சினைகள் மற்றும் மக்களது தேவைகள் நிறைவு ,செ, அதற்கான தீர்வும் இதுவரையில் கிடைக்கப்பெறவ்pல்லை என்பது வருத்தத்துக்குரிய விடயமாக அமைந்துள்ளது. இந்நிலையில் இங்கு காலத்திற்கு காலம் போட்டியிடும் கட்சிகள் மக்களது வாக்குகளை மாத்திரம் அபகரித்துச் செல்வது வரலாறாக மாறி விட்டது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் மக்களின் வாக்கினை அபகரித்து தங்களது வாழ்க்கையினை வலுவாக மாற்றிக்கொண்டு செல்கின்றார்களே தவிர மக்களது எந்த தேவையும் நிறைவு செய்ய முன்வரவில்லை.

குறிப்பாக கடந்த 5 வருட நல்லாட்சியில் பங்கெடுத்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் எதிர்கட்சி தலைவராக செயற்பட்டார்கள். அரசுக்கு அறிவுரை கூறும் தலைவராக இருந்தார்கள். புத்தி சொல்லும் புத்திமான்களாக இருந்தார்கள். இவ்வாறானவர்களால் ஒரு மணித்தியாலத்தில் தரமுயர்த்த கூடிய கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை கூட தரமுயர்த்த முடியாமல் போனது வேடிக்கையே என்றார்.

இதேநேரம் வெற்றி தோல்வி என்பது எங்களுக்கு ஒரு பொருட்டல்ல. இந்த தேர்தலில் நாங்கள் வெல்லலாம், தோற்கலாம் அது இறைவனது பொறுப்பும் மக்களது கைகளிலும்; உள்ளது. மக்கள் ஆணை தந்து இத்தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றால் பல வேலைத்திட்டங்களை ஆரம்பிப்போம். எங்களது தலைவர் மத்தியிலே எப்போதும் தோற்காத அமைச்சராக இருந்துகொண்டே இருப்பார். அவர் மூலமாக நாங்கள் வேலைத்திட்டங்களை செய்தே தீருவோம்.

இதன் மூலம் அம்பாரை மாவட்டம் பல அபிவிருத்திகளை காணும். அதற்கான தலைமைத்துவம் இன்று நாட்டில் உள்ளது. மகிந்த ராஜபக்ஷ எனும் மாபெரும் தலைவன் நாட்டின் நிரந்தர தலைவராக இருக்கின்றார். அதேபோல் கோட்டபய எனும் சிறந்த செயல் வீரரை ஜனாதிபதியை நாங்கள் தெரிவு செய்துள்ளோம்.

நாட்டில் உருவான கொரோனா வைரசை மிகத்துணிச்சல்கரமாக எதிர்கொண்டு வெற்றிகண்டு  நாட்டு மக்களை பாதுகாத்த பெருமகனாக ஒரு தலைவனாக நாங்கள் அவரை பார்க்கின்றோம் என்றார்.

இது இவ்வாறிருக்க அம்பாரை மாவட்டத்திற்கு தலைமைத்துவம் கொடுப்போம் என்று பலர் வந்து கூறுகின்றனர். நாங்கள்தான் தமிழர்களுக்கு தலைவர்கள் என்கின்றனர். இவ்வாறு காலம் காலமாக எம்மிடம் தலைமைத்துவம் கூறி சென்றவர்கள் பலபேர். அம்பாரை மாவட்டத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினரையும் இங்குள்ள செயற்படும் தலைமைத்துவங்களையும் அவர்கள் குறை கூறுவதையே காண முடிகின்றது.

குறிப்பாக கோடீஸ்வரன் எனும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரை கருணா அம்மானும்  கோடீஸ்வரனுடைய ஆதரவாளர்கள் கருணா அம்மானையும் குறை கூறுவதும் இவ்வாறு இங்குள்ள ஏனைய தலைவர்களை குறை கூறிக்கொள்வதுமே வழமை.  இதனால் அபிவிருத்தியை செய்ய முடியாது என்பது எங்களது கருத்து.  நாம் எவர் மீதும் காழ்ப்புணர்வு கொண்டு அரசியல் நடத்த முடியாது . ஆகவே கோடீஸ்வரனாக இருந்தாலும் கருணா அம்மானாக இருந்தாலும் தூய்மையான அரசியலை நடத்த முன்வருமாறு நான் கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.