சூரிய கிரகணம்: உலக நாடுகளில் எப்படி தெரிந்தது?

மேற்கு ஆப்பிரிக்க நாடுகள், அரேபிய நாடுகள், தெற்காசிய நாடுகள், சீனாவின் தென்பகுதி மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சூரிய கிரகணத்தின் அரிய காட்சி தென்பட்டது.

இந்த வளைவு சூரிய கிரகணத்தின் புகைப்படத்தை, இந்த நாடுகளில் உள்ள புகைப்படக்கலைஞர்கள் படமாக பதிவு செய்துள்ளனர்.

பூமிக்கும் சூரியனுக்கும் இடையே நிலவு கடந்து செல்லும்போது, சரியாக சூரியனின் மையத்தை கடந்து சென்றதால் சூரியனின் வெளிப்புற பகுதி மட்டும் தெரிந்தது. அது நெருப்பு வளையம் போல காட்சியளித்தது.

பூமியின் வட அரைக்கோளத்தில், மிகவும் நீண்ட பகல் பொழுதை கொண்ட நாளில் இந்த சூரிய கிரகணம் நிகழ்ந்துள்ளது.

ஓராண்டுக்கு அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் இந்த வளைவு சூரிய கிரகணம் பூமியின் மேற்பரப்பின் மையக் கோட்டை ஒட்டி அமைந்துள்ள நாடுகளில் மட்டுமே காண முடியும்.

ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த சூரிய கிரகணத்தின்போது நிலவு சரியாக சூரியனின் மையத்தை நோக்கி கடக்கும் நிகழ்வு அதிகபட்சமாக 90 நொடிகள் மட்டுமே நிகழ்ந்தது. அதாவது சூரியனின் வெளிப்புறம் பகுதி மட்டும் தெரியும் நெருப்பு வளையம் 90 நொடிகள் மட்டுமே காணக் கூடியதாக அமைந்தது.

பூமியின் மைய கோட்டுக்கு அப்பால் பல நூறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மக்களால் இந்த சூரிய கிரகணத்தை பார்க்க முடியவில்லை என்றாலும், அவர்களால் பகல் வெளிச்சம் வழக்கத்தை விட குறைவாக இருந்ததை உணர முடிந்தது.

சூரிய கிரகணத்தை பார்ப்பது 500 வாட் வெளிச்சம் தரும் மின்விளக்கை பார்த்துவிட்டு, உடனே 30 வாட் வெளிச்சம் மின்விளக்கை பார்ப்பதைப் போன்றது என்று வானியலாளர்கள் கூறுகிறார்கள்.

ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சூரிய கிரகணத்தின் சிறந்த புகைப்படங்கள் சிலவற்றை இங்கே தொகுத்துள்ளோம்.

சீனா

சூரிய கிரகணம்படத்தின் காப்புரிமைEPA

பிலிப்பைன்ஸ்

சூரிய கிரகணம்படத்தின் காப்புரிமைAFP

தைவான்

சூரிய கிரகணம்படத்தின் காப்புரிமைEPA

மும்பை

சூரிய கிரகணம்படத்தின் காப்புரிமைEPA

பாகிஸ்தான்

சூரிய கிரகணம்படத்தின் காப்புரிமைREUTERSAdvertisement