#ஜுனாகத் பகுதியை வரைபடத்தில் சேர்ப்பதால் பாகிஸ்தானுக்கு கிடைக்கும் லாபம் ?


பாகிஸ்தான் அரசாங்கத்தின் புதிய அரசியல் வரைபடத்தை அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் வெளியிட்டார்

அந்த அரசியல் வரைபடத்தில் இந்திய நிர்வாகத்தின் காஷ்மீர், பாகிஸ்தானின் பிரதேசமாகக் காட்டப்பட்டுள்ளது.

மேலும் "ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் பரிந்துரைகளின்படி, இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வரைபடத்தில், கில்கிட் பால்டிஸ்தானும், அது பாகிஸ்தானின் ஒரு பகுதி என தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. பல பத்தாண்டுகளாக பிரிவினை தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ள மற்றொரு பகுதி சர் க்ரீக் ஆகும். இது பாகிஸ்தானின் சிந்து மாகாணத்துக்கும் இந்தியாவில் குஜராத் மாநிலத்துக்கும் இடையில் பாயும் வளைகுடா ஆகும். இது அரேபிய கடலில் கலக்கிறது.

பிரிவினைக்கு பிறகு, எல்லைகளில் இந்த வளைகுடா எந்த நாட்டுக்கானது என்பது குறித்த சிக்கல்கள் தொடர்ந்து நிலவுகின்றன.

சர் க்ரீக் வளைகுடா என்பது பாகிஸ்தானின் பகுதிக்குள் இருப்பதாக அந்த நாடு கூறுகிறது. இருப்பினும் இந்த கோரிக்கையை இந்தியா ஏற்க தயாராக இல்லை. இந்த சிக்கல்தான் இருநாடுகளும் மற்ற நாட்டின் மீனவர்களை கைது செய்ய காரணமாக உள்ளது.

பாகிஸ்தானின் புதிய அரசியல் வரைபடத்தில், இந்த சர்ச்சைக்குரிய பகுதி, அதாவது "சர் க்ரீக்", பாகிஸ்தானின் ஒரு பகுதியாக காட்டப்பட்டுள்ளது.

இந்த புதிய வரைபடத்தில் முன்னாள் சமஸ்தானங்களான ஜுனாகத் மற்றும் மனாவதர் மீது தனக்கு பங்கு உள்ளதாக பாகிஸ்தான் காட்டியுள்ளது. இந்த பகுதிகள் இப்போது இந்திய மாநிலமான குஜராத்தின் ஒரு பகுதியாக உள்ளன, அவற்றின் எல்லைகள் பாகிஸ்தானுடன் இல்லை.

ஜுனாகத் பாகிஸ்தானின் புதிய பகுதியா?

1948 ஆம் ஆண்டு முதல், இந்தப் பகுதி இந்தியாவுக்கு அருகே உள்ளது. மேலும் இந்து மதத்தின் புனித இடமான 'சோம்நாத்' கோயிலும் இங்கு அமைந்துள்ளது.

ஜூனாகத் பாகிஸ்தானின் புதிய பகுதியா?

இந்திய பிரிவினையின் போது ஜுனாகத் மன்னர், பாகிஸ்தானுடன் இணைந்ததால், ஜுனாகத் மற்றும் மனாவதர் எப்போதுமே அந்நாட்டின் ஒரு பகுதியாக இருந்தன என்று பாகிஸ்தான் கூறுகிறது.

ஆனால் அதிகார பலத்தின் அடிப்படையில், இந்த சமஸ்தான அரசுகளின் கட்டுப்பாட்டை இந்தியா கைப்பற்றியது என்று அது குற்றம் சாட்டியுள்ளது.

பிபிசியிடம் பேசிய பாகிஸ்தான் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் முயித் யூசுப், "ஜுனாகத் எப்போதும் பாகிஸ்தானின் ஒரு பகுதியாகவே இருந்தது, புதிய வரைபடத்தில் பாகிஸ்தான் தனது பங்கைக் காட்டியுள்ளது, இது அதன் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துகிறது" என்று கூறினார்.

"புதிய வரைபடத்தில் பாகிஸ்தான் தனது பிராந்தியத்தில் எந்தவொரு புதிய பிரதேசத்தையும் சேர்க்கவில்லை. இந்தியா இந்த பகுதியை சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருந்தது, அதில் எந்தவிதமான சர்ச்சையும் இருக்கக்கூடாது, ஏனென்றால் அது எப்போதும் பாகிஸ்தானின் ஒரு பகுதியாகவே இருந்தது" என்றும் அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் தனது வரைபடத்தில் முன்பு அந்த பகுதியை குறிப்பிட்டு வந்தது ஆனால் சில காரணங்களால் அது நீக்கப்பட்ட போதிலும், பாகிஸ்தான் முன்பு ஜுனாகத்தை வரைபடத்தில் குறிப்பிட்டு வந்ததாகவும் அவர் தெரிவித்தார். மேலும் மீண்டும் இப்போது அந்த பகுதியை வரைபடத்தில் காட்டியுள்ளதன் மூலம் தன்னுடைய பகுதி குறித்து பாகிஸ்தான் அதன் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துயுள்ளது" என்றார் முயித் யூசுப்.

சர்வதேச அளவிலான உரிமைகோரலுக்கு இந்த வரைபடம் போதுமானதாக இருக்குமா?

இந்த அரசியல் வரைபடம், பல மக்களிடம் பலவிதமான கேள்விகளை எழுப்பியுள்ளது.

குஜராத் ஜூனாகத்தை தமது வரைபடத்தில் சேர்ப்பதன் மூலம் பாகிஸ்தானுக்கு என்ன லாபம் கிடைக்கும்?

ஒரு வரைபடத்தில் தனது பகுதியாக இதை காண்பிப்பதன் மூலம், சர்வதேச அளவில் ஜுனாகத் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக கருதப்படுமா? பாகிஸ்தானின் அரசமைப்பு ஷரத்துகள்தான் அந்நாட்டின் உள் பகுதிகளை தீர்மானிக்கிறது.

இது ஒரு அரசியலமைப்பு பிரச்சினை என்றால், வரைபடத்தில் உள்ள பகுதிகளின் எல்லைகளை நாடாளுமன்றம் மாற்றியமைத்தால், அது பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ ஒன்றாக கருதப்படுமா?

சர்வதேச சட்ட நிபுணர் அஹ்மர் பிலால் சூஃபி, "இது தேவையற்ற ஒன்று" என்று தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் சட்டப்பிரிவு பாகிஸ்தானின் உள்ளூர் சட்டங்களின் ஒரு பகுதியாகும், ஆனால் ஒரு நாடு தனது பிராந்தியத்தின் மீது அதிகாரத்தை உறுதிப்படுத்தும்போது அல்லது அந்நாடு சர்வதேச சட்டத்தின் படி உரிமை கோரும் போது, "நாடாளுமன்றத்தில் ஒரு சட்டத்தை உருவாக்குவதன் மூலமோ அல்லது சட்டத்தை திருத்துவதன் மூலமோ அந்த உரிமைகோரலை முன்வைக்கலாம், நீதிமன்ற தீர்ப்பின் மூலமாகவும், நிர்வாக நடவடிக்கை மூலமாகவும் இதனை செய்யலாம்."

பிராந்தியத்தின் மீதான தங்கள் அதிகாரத்தை நிரூபித்ததற்கான எடுத்துக்காட்டாக, காஷ்மீரின் பாதியளவு தன்னாட்சி ஒழிக்கப்பட்ட விவகாரத்தை குறிப்பிடுகிறார்.

ஆக்கிரமிப்பு இல்லாமல் வரைபடத்தின் முக்கியத்துவம் என்ன?

வரைபடத்தின் வெளியீடு, நிர்வாக நடவடிக்கை அல்லது நிர்வாக நடவடிக்கைகளின் கீழ் உள்ளது என்றும் அதற்கு சட்ட முக்கியத்துவம் உள்ளது என்றும் அஹ்மர் பிலால் கூறுகிறார்.

நிர்வாக நடவடிக்கை மூலம் ஒரு நாடு அந்நாட்டின் ஒரு பகுதி மீது தனது அதிகாரத்தை உறுதிப்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது என்று அவர் கூறினார்.

குஜராத் ஜூனாகத்தை தமது வரைபடத்தில் சேர்ப்பதன் மூலம் பாகிஸ்தானுக்கு என்ன லாபம் கிடைக்கும்?

அஹ்மர் பிலால் சூஃபியின் கருத்துப்படி, "இந்த வரைபடம் பாகிஸ்தானின் சர்வேயர் ஜெனரலின் சரிபார்ப்பு மற்றும் முத்திரையுடன் வழங்கப்பட்டுள்ளது, எனவே அதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் உள்ளது" என்கிறார்.

ஜுனாகத் மீதான உரிமைகோரலுக்கான சட்டபூர்வ அடிப்படை என்ன?

அஹ்மார் பிலால் சூஃபியின் கருத்துப்படி, பாகிஸ்தானுடன் இணைந்ததற்கான ஆதாரம் என்பது, பாகிஸ்தானை உருவாக்கிய முகமது அலி ஜின்னாவுடன், ஜுனாகத் நவாப் கையெழுத்திட்ட சட்ட ஆவணம் தான்.

"இந்தியாவால் ஜுனாகத் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட பின்னர், ஜுனாகத்தின் நவாப் தனது குடும்பத்தினருடன் கராச்சிக்கு சென்று விட்டார்" என்று அவர் கூறினார்.

அஹ்மார் பிலால் சூஃபியின் கருத்துப்படி, நவாப் அவர்கள் இன்னமும் ஜூனாகத்தின் நவாப் பதவியை வகிக்கிறார், அதே நேரத்தில் அவர் பிரதம மந்திரி அல்லது ஜுனாகத்தின் மூத்த அமைச்சராகவும் ஆகியுள்ளார்.

"நவாபின் குடும்பத்துக்கு பாகிஸ்தான் அரசாங்கத்திடமிருந்து உதவித்தொகை இன்னும் கிடைக்கிறது, அவருடைய அந்தஸ்து பாகிஸ்தானில் உள்ள ஜுனாகத் மாவட்ட ஆட்சியாளரைப் போன்றது"

அஹ்மர் பிலால் சூஃபியின் கருத்துப்படி, பாகிஸ்தானின் ஜுனாகத் பகுதியை வரைபடத்தில் காண்பிக்கும் நோக்கம் என்பது, அந்த பகுதி குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என்பதுதான்.

ஜுனாகத், சர்வதேச அளவில் இன்னும் சர்ச்சைக்குரியதா?

"ஜுனாகத் இன்னும் சர்ச்சைக்குரிய பகுதி" என்று அஹ்மர் பிலால் சூஃபி கூறுகிறார். சில காலத்துக்கு முன்பு ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்த பிரச்சினை எழுப்பப்பட்டது, ஆனால் விவாதத்துக்குப் பிறகும் அதை தீர்க்க முடியவில்லை.

"வேறுவிதமாக சொல்வதாக இருந்தால், ஜுனாகத்தை இந்தியா ஆக்கிரமித்தது, சர்வதேச சட்டத்துக்கு எதிரானது. அதுவரை பாகிஸ்தானுக்குள் நுழைவதற்கான ஆவணம் ஜூனாகத் நவாப் மூலம் திருத்தப்படக்கூடாது.

அஹ்மர் பிலால் சூஃபியின் கருத்துப்படி, இணைப்பு ஆவணம் ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும், இதனை இந்தியா நிராகரிக்கிறது. இந்தியா தனது யூனியன் பிரதேசங்களில் ஜுனாகத் ஆக்கிரமிப்பை உள்ளடக்கிய சட்டம் என்பது அதன் உள்நாட்டு அல்லது உள்ளூர் சட்டமாகும்.

இந்தியாவின் நிலை என்ன?

பாகிஸ்தானில் இருந்து ஒரு புதிய அரசியல் வரைபடம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், இந்திய வெளியுறவு அமைச்சகத்திலிருந்து ஒரு செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது.

"இந்திய மாநிலங்களான குஜராத் மற்றும் அதன் யூனியன் பிரதேசங்களான ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் மீது பாகிஸ்தான் உரிமை கோருவது அரசியல் ரீதியாக ஒரு பயனற்ற முயற்சி" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

குஜராத் ஜூனாகத்தை தமது வரைபடத்தில் சேர்ப்பதன் மூலம் பாகிஸ்தானுக்கு என்ன லாபம் கிடைக்கும்?

"இதுபோன்ற அபத்தமான உரிமை கோரல்களுக்கு சட்டபூர்வ அந்தஸ்தோ அல்லது சர்வதேச நம்பகத்தன்மையோ இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது

புதிய வரைபடம் சர்வதேச ஆதாயத்தை தருமா?

சர்வதேச சட்ட நிபுணர் அஹ்மர் பிலால் சூஃபியின் கருத்துப்படி, இந்த வரைபடம் நாட்டின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடாக பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில், வரைபடம் அதன் உரிமைகோரலின் உண்மைத்தன்மையை உறுதி செய்கிறது.

பாகிஸ்தான் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மியூத் யூசுப் கருத்துப்படி, "புதிய அரசியல் வரைபடம் என்பது பாகிஸ்தானின் ஆதரவை தெளிவுபடுத்துவதற்கான முதல் நடவடிக்கையாகும். சர்வதேச அளவில் இதற்கான ஆதரவைப் பெறுவது என்பது எங்களின் இரண்டாவது நடவடிக்கையாகும்"

இருப்பினும், என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை இப்போது சொல்ல முடியாது என்று கூறினார். அஹ்மார் பிலால் சூஃபி கூறுகையில் பாகிஸ்தானின் சர்வேயர் ஜெனரலால் சர்வதேச அளவில் வெளியிடப்பட்ட ஒரு வரைபடத்திற்கு சட்டப்பூர்வ முக்கியத்துவம் உள்ளது என்றார்.

"யார் ஒப்புக்கொண்டாலும் இல்லாவிட்டாலும், உங்கள் கூற்றை நீங்கள் தெளிவுபடுத்துகிறீர்கள். உங்கள் நிலையை நீங்கள் தெளிவுபடுத்தாவிட்டால், இந்த விஷயம் எவ்வாறு மேற்கொண்டு செல்லப்படும்?" நாடுகளுக்கிடையிலான பிராந்திய மோதல்கள் குறித்த விவாதங்களின் போது, வரைபடங்கள் முக்கியம் என்று அவர் கூறினார்.

இந்தியாவிடம் வலு இருந்தது. மேலும் இப்போதும் அது இருக்கிறது

எழுத்தாளரும் வரலாற்றாசிரியருமான டாக்டர் முபாரக் அலி கூறுகையில், ஒரு ஆவணக் கண்ணோட்டத்தில் பார்த்தால், ஜுனாகத்தை இந்தியா உறுதியாக ஆக்கிரமித்திருந்தது என்பது சட்டவிரோதமானது. ஜுனாகத் போன்ற சமஸ்தானங்களின் பிரச்சனையை தீர்ப்பது காலனித்துவ ஆட்சியாளர்களின் கடமை என்று அவர் கூறினார்.

"நவாப் எங்கு சென்றாலும், சமஸ்தான அரசு அங்கு செல்லும் என்பதே கொள்கை. ஆனால், ஜுனாகத், காஷ்மீர் மற்றும் ஹைதராபாத் மாநிலங்களை கையகப்படுத்தியதன் மூலம் இந்தியா அதை மீறியுள்ளது."

எப்படி இருந்தாலும் நடைமுறைகளின்படி, "பிரச்சனை என்னவென்றால், இந்தியாவுக்கு அதிகாரம் இருந்தது, இன்னும் அதிகாரம் உள்ளது, அதிகாரம் உள்ளவர் வெற்றியாளராக இருக்கிறார், அது சரியானதாக கருதப்படுகிறது".

அவர்களை பொருத்தவரை, தற்போதைய சூழலில், ஜுனாகத்தை வரைபடத்தில் சேர்ப்பது என்பது பாகிஸ்தானின் "இதயத்தை மகிழ்விப்பது போன்றது".