சசிகலா ரவிராஜை ஆற்றுப் படுத்திய ஆதவாளர்கள்


யாழ் தேர்தல் செயலகத்திலிருந்து, சகிகலா ரவிராஜ் வெளியேறிய காட்சி இது. 

படுகொலை செய்யப்பட்ட முன்னாள நடாளுமன்ற உறுப்பினர், நடராஜா ரவிராஜின் மனைவி இவர். முதல் கட்ட விருப்பு வாக்குகளின் போது  அடுத்த கட்ட வாக்கெண்ணும் வேளையில், இவர்  பின்னவைச் சந் தித்தார்.

சுமந்திரனின் வெற்றி...!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய முகங்களில் ஒன்றாக கடந்த பத்து ஆண்டுகளில் மேலெழுந்து வந்த எம்.ஏ.சுமந்திரன், இந்தத் தேர்தலில் மெச்சத் தக்க வெற்றியைப் பெறவில்லை. கூட்டமைப்பின் பெரிய பின்னடைவோடு, தன்னுடைய ஆதரவுத் தளத்தினையும் குறிப்பிட்டளவு இழந்தே இந்தத் தேர்தலில் வென்றிருக்கிறார். அவரது வெற்றி தொடர்பில் எந்தவித சந்தேகத்தையும் நான் கொள்ளவில்லை. அவர் வென்றிருக்கிறார். ஆம், அவர், 27,834 என்கிற சொற்ப வாக்குகளோடு வென்றிருக்கிறார். அவர், எதிர்பார்த்த 80,000 வாக்குகளுக்கும் பெற்றிருக்கிற வாக்குகளுக்கும் இடையிலான இடைவெளி என்பது பெரிதானது. தோல்விகரமானது.
நிற்க,
சுமந்திரனின் வெற்றி தொடர்பில் நேற்று மாலை முதல் எதிர்விமர்சனங்களும் வதந்திகளும் திட்டமிட்ட வகையில் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டது. கற்று அறிந்தவர்கள் தொடக்கம் பாமர மக்கள் வரையில், அதனை நம்பிக்கொண்டு கம்பு சுற்றியதையும், கத்திக் கூச்சல் போட்டதையும் கண்டோம். வெறுப்புணர்வான கட்டத்தை சுமந்திரனுக்கு எதிராக தக்க வைக்க வேண்டும், அதன்மூலம் அசம்பாவீதம் ஏதாவது நிகழ வேண்டும் என்று திட்டமிட்டு யாழ். மத்திய கல்லூரியை சுற்றி வந்தவர்கள் ஏராளம். அவர்களை ஊடக மாபியாக்களும், சொந்தக் கட்சியின் தோல்விமுக வேட்பாளர்களும் இயக்கிக் கொண்டிருந்தார்கள். “பொலிசை அடியடா..” என்று ஊக்குவித்ததில் தொடங்கி தூசண பொழிவு வரையில் யார் யார் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதற்கு நூற்றுக்கணக்கான பேஸ்புக் LIVEகள் சாட்சி. வதந்திகளைக் காவிக் கொண்டு, விடயங்களை திசை திருப்பி அதில் ஆதாயம் தேடும் அழுகல் மூளைக் கூட்டமொன்று படமெடுத்து ஆடியதை அருவருப்போடு பார்க்க வேண்டி வந்திருக்கின்றது.
தமிழரசுக் கட்சி கடந்த காலத்தில் முன்னெடுத்திருந்த மோசமான நடவடிக்கைகளினால் படுதோல்வி அடைந்திருக்கின்றது. நேற்றைய குழப்பத்துக்குப் பின்னாலும் அந்தக் கட்சியின் தொண்டர்கள் எனும் போர்வையில் அலைந்த காவாலிகள் முக்கிய காரணம். சசிகலா ரவிராஜின் தோல்வியை, இன்னொருவருக்கு எதிராக திசை திருப்பி குளிர்காயலாம் என்பதெல்லாம் நரகல்தனமானது.
நேற்று இரவு, தோற்றுப் போவதாக நினைத்து சித்தார்த்தனும் அழுதார். அவருக்காக சிவாஜிலிங்கம் தொடங்கி கூட்டமைப்புக்கு வெளியில் இருக்கிற கட்சிக்காரர்கள் எல்லாமும் நீதிக் கோரிக்கையை எழுப்பினர். சில நிமிடங்களுக்குள்ளேயே அவர், சசிகலாவைவிட சில நூறு வாக்குகள் முன்னிலையில் வெற்றிபெற்றுவிட்டார் என்றதும், சசிகலாவுக்காக நீலிக்கண்ணீர் வடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
ஆண்களினால், குறிப்பாக அவர்களின் கசடுத்தனங்களினால் சூழப்பட்டிருக்கிற தேர்தல் களத்தில் அதுவும் தோற்றிருக்கின்ற கட்சியொன்றில், வெற்றியின் பக்கத்தில் வந்திருக்கின்ற சசிகலாவை பாராட்டப்பட வேண்டியவர். அவர் தனக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாக நம்பினால், நிச்சயமாக அதற்கான நியாயமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அதுதான் அடிப்படை.
தமிழரசுக் கட்சிக்குள் நுழைந்து ஆட்டிவிக்க எண்ணிய ஊடக மாபியாவொன்றின் நிகழ்ச்சி நிரல் இந்தத் தேர்தலில் பெரிய வெற்றியை பெற்றிருக்கவில்லை. அவர்களால் முன்னிறுத்தப்பட்ட அனைவரும் இந்தத் தேர்தலில் படுதோல்வி கண்டிருக்கிறார்கள். அந்த கோபத்தை, அந்த ஊடக மாபியா திட்டமிட்ட வகையில், சுமந்திரனுக்கு எதிரான வெறுப்பாக பேண நினைக்கின்றது. அதற்கு, அறம் மறந்த தமிழரசுக் கட்சியின் சில தரப்பினரும், ஏனைய கட்சிக்காரர்களும் துணை நிற்கிறார்கள். கற்றவர்களே வெறுப்புணர்வுக்குள் சிக்கி உண்மையை சகித்துக் கொள்ளத் தயாராக இல்லாத போது, சூழ்ச்சிக்காரர்களின் எவ்வாறானது என்பதைப் புரிந்து கொள்வது இலகுவானது.
சுமந்திரன் பெரும் பின்னடைவோடுதான் வென்றிருக்கிறார். அவர், தன்னை பல கட்டங்களில் மீளாய்வு செய்து, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்காக தயார்ப்படுத்த வேண்டும். இல்லையென்றால், அவர் முன்வைக்கும் அரசியலும் சூனிய வெளிகளுக்கானதாகவே இருக்கும்.