கொழும்பில் மனோ அடங்கலாக சிறுபான்மையினர் மூவர் தெரிவு!


 

கொழும்பு மாவட்டத்தில் தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர் மனோ கணேசன் வெற்றிபெற்று மீண்டும் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் பிளவால் கடும் போட்டி  நிலவிய கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட மனோ கணேசன் 62,091 வாக்குகளைப் பெற்று  பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார். 

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பாக கொழும்பிலிருந்து  6 பேர் தெரிவாகியுள்ளனர். இதில் தலைமை வேட்பாளர் சஜித் பிரேமதாஸ  305, 744 வாக்குகளைப் பெற்று கட்சியில் முதலிடத்தினைப் பெற்றுள்ள அதேவேளை எஸ்.எம். மரிக்கார் 97 ,116 வாக்குகளைப் பெற்று 2ம் இடத்தையும்  முஜிபுர் ரஹ்மான் 87, 589 வாக்குகளைப் பெற்று 3ம் இடத்தையும்  ஹர்ஸ டி சில்வா 82, 945 வாக்குகளைப் பெற்று 4ம் இடத்தையும் பாடலி சம்பிக்க ரணவக்க  65, 574 வாக்குகளைப் பெற்று  5ம் இடத்தையும் பிடித்த நிலையில் இவர்களுக்கு அடுத்த ஸ்தானத்தில் மனோ கணேசன் தெரிவாகியுள்ளார்.

கொழும்பில் போட்டியிட்ட சுஜீவ சேனசிங்க, ஹிருணிகா பிரேமசந்திர,A.H.M. பௌஸி , ஜனகன் விநாயக மூர்த்தி ஆகியோர் தெரிவுசெய்யப்படவில்லை.

ஜனகனுக்கு 36 191 வாக்குகள் கிடைத்திருந்தது ஹிருணிக்கா  44 989 வாக்குகளையும் பௌஸி  48701 வாக்குகளையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.