மோட்டார் சைக்கிள் திருடிய சந்தேக நபர்களுக்கு விளக்க மறியல்


#SM.IRSAATH.

அக்கரைப்பற்றில், மோட்டார் சைக்கிள திருடிய சந்தேகத்தில் வாழைச்சேனையில் கைதான சந்தேக நபர்கள் இருவரையும், இம்மாதம் 17ந் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிமன்ற கௌரவ நீதிபதி  ஹம்சா இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

(முந்தைய செய்தி)

அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில்  கடந்த 28.08.2020 அன்று களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று ஓட்டமாவடியில் கைப்பற்றப்பட்டுள்ளது.


குறித்த தினத்தன்று, அக்கரைப்பற்றில் வைத்துக் களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் அம்பாரை குற்றத் தடுப்புப் பிரிவினரால்,ஓட்டமாவடியில் வைத்துக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இக் குறித்த மோட்டார் சைக்களினைத் திருடியவர் தப்பி ஓடியுள்ளதாகத் தெரியவருகின்றது.


Advertisement