ஹெரோயின் வைத்திருந்த சந்தேக நபர்களை தொடர்ந்தும் விசாரிக்க"தடுப்புக் கட்டளை"


#Rep/Jamaldeen
மருதமுனையைச் சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தருடன் இரு பெண்கள் ஹெரோயின் வைத்திருந்த சந்தேகத்தில் நேற்யை தினம் கைது செய்யப்பட்னர். இவர்கள் இன்றைய தினம் அக்கரைப்பற்றின் பதில் நீதிபதி கே. சமீம் முன்னிலையில் பொலிசாரால் ஆஜர் படுத்தப்பட்டனர். 


இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயின் தொகை 25 கிராம் என்பதனாலும் இவர்களிடமிருந்து மேலதிக விசாரணை செய்ய 3 நாட்களுக்கு அனுமதிக்குமாறும் அக்கரைப்பற்று பொலிசார் இன்றைய தினம் வேண்டியிருந்தனர்.குறித்த சந்தேக நபரகள் மூவரையும் 3 நாட்கள் வரை(D.O) பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணை செய்ய பதில் நீதிபதி உத்தரவிட்டார்.குறித்த சந்தேக நபர்கள் சார்பில் சட்டத்தரணிகளான ஜெனிர்,மற்றும் றிஸ்வான் ஆகியோர் ஆஜராகினர்.


Advertisement