முடக்கப்பட்டது - தண்டுகலா தோட்டம்


 (க.கிஷாந்தன்)

அட்டன், நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தண்டுகலா தோட்டத்தின் மேல்பிரிவில் மேலும் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

இதனையடுத்து தண்டுகலா பகுதி முடக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் இருந்து எவரும் வெளியேறமுடியாது என்பதுடன் வெளியிடங்களில் இருந்து அங்கு வருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

 

அத்துடன், வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆக்ரோயா பகுதியிலும் கொரோனா தொற்றாளர்கள் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 

தண்டுகலா தோட்டத்தில் ஏற்கனவே ஐந்து கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதனையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் நேற்று இன்று (05.12.2020) வெளியாகின. இதில் 16 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

இவர்களை கொரோனா தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டு செல்வதற்கு சுகாதார அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

கொழும்பில் தொழில் செய்த நிலையில் ஊர் திரும்பியவர்கள் மூலமே இவர்களுக்கு வைரஸ் தொற்றியுள்ளது என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
Advertisement