போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது


(க.கிஷாந்தன்)

நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா நல்லதண்ணி பிரதான வீதியில் மோகினி நீர் விழ்ச்சிக்கு அருகாமையில் இன்று (05) பாரிய கற்களுடன் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் தடைப்பட்ட போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளன.

புரெவி புயலினை தொடர்ந்து மத்திய மலைநாட்டில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இப்பிரதேசத்திற்கு பெய்த கடும் மழை காரணமாக இன்று காலை குறித்த கற்பாறைகள் சரிந்து வீழ்ந்துள்ளன.

இதனால் அப்பாதையூடான போக்குவரத்து சுமார் ஒரு மணித்தியாலயத்திற்கும் மேல் துண்டிக்கப்பட்டன.

அதனை தொடர்;ந்து ரிகாடன் இராணுவ முகாமின் இராணுவ வீர்ர்கள், நல்லதண்ணி பொலிஸார் மற்றும் வீதி அதிகார சபையினர் இணைந்து வீதியில் சரிந்த கற்களையும் மண்ணையும் அகற்றியதனை தொடர்ந்து பொது போக்குவரத்து வழமைக்கு திரும்பின.

குறித்த பிரதேசத்திற்கு தொடர்ந்து அடிக்கடி மழை வீழ்ச்சி காணப்படுவதனாலும், மேலும் சில கற்பாறைகள் சரிந்து விழும் நிலையில் காணப்படுவதனால் இப்பாதையினை பயன்படுத்தும் வாகன சாரதிக் மிகவும் அவதானமாக தமது வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார். கேட்டுக்கொண்டுள்ளனர்.Advertisement