பொத்துவில் அல்ஹாஜ் கேபிஎம். ஷரிப் காலமானார்


 


பொத்துவிலின் பாரம்பரியம், பண்பாடு, கலை, மார்க்க விடயங்கள், அரசியல் வரலாறு மற்றும் அனுபவங்களை தன்னகத்தே சுமந்து கொண்ட மூத்த பழுத்த தேஜஸ் கொண்ட பொத்துவில் (சமாதான நீதவான்) இன்று பொத்துவிலில் மரணமடைந்துள்ளார்.
பொத்துவில் பிரதான வீதியில் நீண்ட காலமாக "மலீக் பிரதர்ஸ்" வர்த்தக நிலையத்தை நடாத்தி வந்ததோடு மாத்திரமன்றி சி.ல.மு.கா கட்சியின் ஆரம்ப காலத்து அங்கத்தவராகி பெருந்தலைவர் அஸ்ரப் அவர்களோடு ஆராக் காதல் கொண்டு செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொத்துவில் பிரதேசத்தில் உலமாக்கள் யாராவது வெளியாகி கன்னி குத்பா பிரசங்கம் செய்தால் தனது அன்பளிப்பாக சால்வை,சாரன், பொன்னாடை போர்த்தி கெளரவிப்பவர். மேலும் சமூகப்பணிகள் மற்றும் எந்தவொரு ஜனாசா வீடாக இருந்தாலும் தான் முன் வரிசையில் நின்று தொழுதல், மையத்தில் கலந்து கொள்ளல் இவரது நற்பண்புகளாகும்.
கம்பீரமான குரல், வெள்ளை முடி, பழுத்த தாடி, வெண்ணிற ஆடை, ஸ்கூட்டர் பைக் , கண்ணாடி இவருக்கான தனித்துவ அடையாளங்கள் என்றால் மிகையாகாது. சமாதான நீதவானாக இருந்து சமூகப் பணி புரிந்த இவரின் ஆண் வாரிசுகளாக எம் எஸ் அப்துல் மலிக் (SPHI) , தவிசாளர் எம் எஸ் வாசித், எம் எஸ் வாரித் (SDO), எம் எஸ் அஸ்ரப் ( ps) காணப்படுகின்றார்கள்.
இவரின் சமூகப்பணிகளை அல்லாஹ் ஏற்றுக் கொண்டு உயர்ந்த சுவர்க்கத்தை வழங்க பிரார்த்திப்போம்
எம்.ஏ.தாஜஹான்
பொத்துவில் டுடே