கல்முனையில், ஜனாஸா எரிப்புக்கு எதிராக பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


ஜனாஸா எரிப்புக்கு எதிரான வெள்ளை துணி கவனயீர்ப்பு போராட்டம் ஐக்கிய மக்கள் சக்தியின் கல்முனை தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ் அப்துல் ரஸாக்கின்  ஏற்பாட்டில் கல்முனை பிரதான வீதியில் கொரோனா சுகாதார நடைமுறைக்கமைய  வெள்ளிக்கிழமை(25) மதியம்  இடம்பெற்றது.

இப் போராட்டமானது பல்வேறு சுலோகங்களை தாங்கி மேற்கொள்ளப்பட்டதுடன்  பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் நேர காலத்துடன் முடிவுறுத்தப்பட்டது.

இதில்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனை மாநகர சபை  உறுப்பினர் எம்.எச்.எம்.ஏ.மனாப்  உள்ளிட்ட அரசியல், சமூக, பொதுநல,  செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

இப்போராட்டத்தில்   ஜனாஸா எரிப்புக்கு எதிரான வாசகங்கள் மும்மொழிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டன. இனவாத தீ இன்றோடு அணையட்டும், விஞ்ஞானம் புதைப்பு இனவாதம் எரிப்பு, அரசே 20 நாள் குழந்தை எரிப்பில் இருந்து உன் அழிவு ஆரம்பம் ,WHOஇன் வழிகாட்டலை பின்பற்று , உலகமே புதைக்கிறது நாம் மட்டும் எரிக்க வேண்டுமா? அரசே உனது  கொடூர செயலை நிறுத்து ,  போன்ற வாசகங்கள்  குறிப்பிடப்பட்டிருந்தன.