அக்கரைப்பற்றிலும் நத்தார் பண்டிகை வி.சுகிர்தகுமார் 0777113659  

  அம்பாரை மாவட்டத்தில் வாழும் கிறிஸ்தவ மக்களும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நத்தார் பண்டிகையை அமைதியான முறையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கொண்டாடியதுடன் சில கிறிஸ்தவ தேவலாயங்களிலும் மக்கள் பங்களிப்பின்றி விசேட பூஜைகள் நேற்று நள்ளிரவும் இன்று காலையும் நடைபெற்றன.
அக்கரைப்பற்று அசம்பிளி ஒப்கோட் தேவசபையிலும்; இன்று(25) காலை நத்தார் தின விஷேட பூஜை வழிபாடுகள் மக்கள் பங்களிப்பின்றி ஒரு சில தேவ அடியவர்கள்; மத்தியில் நடைபெற்றன.
இப்பூஜை வழிபாடுகளில் விசேடமாக நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா நோயிலிருந்து மக்கள் விடுபட வேண்;டும் எனவும் நாட்டை விட்டு இக்கொடிய நோய் அகல வேண்டும் எனவும் ஆராதனை நடைபெற்றது.
விசேடமாக நடைபெற்ற பூஜை வழிபாடுகளை  பாஸ்டர் க.ரவீந்திரன்  நடாத்தி வைத்தார்.
 இதன்போது கிறிஸ்துவின் பிறப்பின் நோக்கம் கிறிஸ்மஸ் கொண்டாடங்கள் பற்றிய விளக்கங்கள் மற்றும் ஒவ்வொரு கிறிஸ்தவரும் அவரது வருகை பற்றிய செய்திகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
 உலகிலே பிறந்த ஒவ்வொரு மனிதரும் மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனப்பக்குவத்தோடு வளரவேண்டும் எனவும் சொன்னார்.
 இறுதியாக திருப்பலி பூஜை ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன், திருவிருந்து வழிபாடு மற்றும் இறை ஆசியோடு வழிபாடுகள் நிறைவுற்றது.