ஆரோக்கியமான பயிற்சியில் ஈடுபடும் மனிதர்களுக்கு நோய்கள் வருவது மிககுறைவு


 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


உலகத்தை ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள போதிலும் ஆரோக்கியமில்லாத மனிதர்கள் மரணித்து கொண்டு இருக்கின்றார்கள் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிரில் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரிவு 11 இல்  நவீன மயப்படுத்தப்பட்ட புதிய உடல் பயிற்சி நிலையத்தை     ஞாயிற்றுக்கிழமை(20) இரவு  திறந்து வைத்து உரையாற்றும் போது மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில்


உலகத்தை ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள போதிலும் ஆரோக்கியமில்லாத மனிதர்கள் மரணித்து கொண்டு இருக்கின்றார்கள்.ஆரோக்கியமான பயிற்சியில் ஈடுபடும் மனிதர்களுக்கு நோய்கள் வருவது மிககுறைவு.தற்போது அமையப்பெற்றுள்ள உடல் பயிற்சி நிலையம்(ஜிம்) முற்றிலும் நவீனமயமானது.காலத்தின் தேவை கருதி உடல் பயிற்சி நிலையம் அமையப்பெற்றுள்ளமை சிறப்பாகும் என காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிரில் தெரிவித்தார்.

அத்துடன் இவ் உடல் பயிற்சி நிலையமானது கொரோனா சுகாதார நடைமுறைக்கமைய இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.