அக்கரைப்பற்றில், Dr.லதாகரன் , Dr.சுகுணன் உட்பட நான்கு பேருக்கு எதிராக வழக்கு தாக்குதல்பாலமுனை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அருகில் வசிக்கும் பொதுமக்களுக்கு நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்படுவதாகவும் , ஒழுங்காக தொற்று நீக்கும் நடவடிக்கை இடம்பெறவில்லை , இதனால் இப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அசௌகரியம் ஏற்படுவதாக கூறி கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.லதாகரன் , கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி.சுகுனன் , பாலமுனை MOH  அகிலன், பாலமுனை DMO நௌபர் ஆகியோருக்கு எதிராக அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் கடந்த 17ந் திகதி வழக்கு தாக்குதல் செய்யப்பட்டிருந்தது.


இது தொடர்பாக சட்டத்தரணிகள் ஆஜராகி, இன்றைய தினம் இந்த வழக்கினை ஆதரித்து தமது வாதத்தினை முன் வைத்தனர். அக்கரைப்பற்று நீதவான் முன்னிலையில் நிலத்தடி நீர் மாசுபடுகிறது என்பதனை உறுதிப்படுத்தும் அறிக்கைகள் மன்றிற்கு சமர்ப்பித்தார்கள்  இதனையடுத்து  அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.ஹம்சா அவர்கள்  இவர்களுக்கு அழைப்பாணை அனுப்புவதற்கு கட்டளை வழங்கியதுடன் வழக்கினை  ஜனவரி  நான்காம் திகதி  ஒத்திவைத்துள்ளார் . 

மேலும் பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை அனுப்பபட்டுள்ளது .