சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் விழிப்புணர்வு

 முஹம்மட் நசீம்.

தற்போது இலங்கை கிழக்கு மாகாணத்திலும் வேகமாக பரவி வரும் கொரோனா நோய்த் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைள் சகல ஊர்களிலும் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சம்மாந்துறையிலும் பல்வேறுபட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

சம்மாந்துறை பிரதேச சபை, பிரதேச செயலகம், சமூக சேவை அமைப்புக்கள், சம்மாந்துறை சுகாதாரப் பிரிவு மற்றும் சம்மாந்துறை பொலிஸ் பிரிவு என பலரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த வகையில் இன்று “சரியான நேரத்தில் மாஸ்க் ஒன்றை சரியாக அணிந்திட மீற்றராய் இருங்கள்” எனும் வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் நுளையும் முக்சக்கர வண்டிகளில் சம்மாந்துறைப் பொலிஸாரினால் ஒட்டப்பட்டு விழிப்புணர் ஏற்படுத்தப்பட்டது.


Advertisement