73 வது சுதந்திரதினக் காற்றை தேச மக்கள் அனைவரும் சுவாசிக்கட்டும்!


இலங்கை அந்திய ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு,சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் துவங்கிய நாள் இன்றாகும். 1948ம் ஆண்டு பெப்ருவரி மாதம் 4 ந் திகதி இலங்கை ஆங்கிலேயரிிடம் இருந்து சுதந்தரம் பெற்று 73 ஆண்டுகளை இன்று கடக்கின்றது. எமது இணையக் குழுமம்  www.ceylon24.com தமது வாழ்த்துக்களைக் காணிக்கையாக்குகின்றது.


இலங்கை (About this soundஒலிப்பு ) (Sri Lanka, சிங்களம்: ශ්‍රී ලංකා, சிறீலங்கா) இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள் வாழும் ஒரு தீவு நாடு ஆகும். இதன் தற்போதைய அதிகாரபூர்வ பெயர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு[5] ஆகும். 1972 க்கு முன் உலகம் முழுவதும் சிலோன் (Ceylon) என்ற பெயரால் அறியப்பட்டு வந்தது.

இலங்கையின் ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு மூவாயிரம் ஆண்டுகளைக் கொண்டது.[6] இதன் புவியியல் அமைவு மற்றும் ஆழமான திருகோணமலை துறைமுகம் என்பன புராதன பட்டுப் பாதை காலந்தொட்டு[7] இரண்டாம் உலக யுத்தம் வரை தந்திரோபாய முக்கியத்துவத்தை வழங்கியுள்ளது.[8] இலங்கை பல சமய, பல இன, பல மொழிகள் பேசுவோரின் தாயகமாகவுள்ளது.[9] இது சிங்களவர்இலங்கைத் தமிழர்இலங்கைச் சோனகர்இந்திய வம்சாவளித் தமிழர்பறங்கியர்இலங்கை மலாயர்இலங்கை ஆப்பிரிக்கர் மற்றும் பூர்வீகக் குடிகளான வேடுவர் ஆகியோரின் தாயகமாகும்.

#04.02.1948 ல் இலங்கை சுதந்திர ம் பெற்றது.

#இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன் ஆட்சி செய்தவர்கள்,

போர்த்துக்கேயர்:
ஒல்லாந்தர்:
ஆங்கிலேயர்:

ஆங்கிலேயரின் 133 வருடகால ஆட்சிக்குப் பின்னர், 1948இல் இலங்கை சுதந்திரம் பெற்றது. 

அன்னியர் ஆட்சியில் இருந்து இலங்கையின் சுதந்திரத்திற்காக போராடிய,குரல் கொடுத்த,சகல இனத்தையும் சேர்ந்தவர்கள் தேச பிதாக்கள்,சுதந்திர போராட்ட வீரர்கள், தேச பக்தர்கள் என அழைக்கின்றோம்.

📝இலங்கையின் சுதந்திர த்திற்காக முஸ்லிம்களும் போராடினார்கள்,குரல் கொடுத்தார்கள்,ஆதரவு வழங்கினார்கள்.என்பதற்கான ஆதாரங்கள் இலங்கையின் வரலாற்று ப் பதிவுகளில் உள்ளன.

.
 
ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிராகப் போராடி உயிர்நீத்த முஸ்லிம் தேச பக்தர்கள்,
**********************************
#சேகு டீ டீ(தோப்பூர்),

#முகம்மதுசலாம் பட்டி உடையார்(குச்சவெளி),

#அபூபக்கர் ஈஸா(முகாந்தி ரம் சம்மாந்துறை),

#மீரா குசைன் காரியப்பர்(சம்மாந்துறை),

#உசன் லெப்பை உதுமாலெப்பை(சம்மாந்துறை),

#அனீஸ் லெப்பை(மருதமுனை),

👉📚இலங்கை சட்டக்கோவை பாகம் 1,பக்கம் 77,78.(1786-1833),

👉இலங்கையின் சுதந்திரத்திற்கு குரல் கொடுத்த தேசிய வீரர்கள்.
**********************************

சட்ட வல்லுனர்:முகம்மது காசிம் சித்தி லெப்பை(M.C.Sithy Lebbai)

#சட்ட வல்லுனர்:I.L.M.Abdul Azeez,

👉1924 ல் நடை பெற்ற சட்ட சபை தேர்தலில் வெற்றியீட்டிய சட்டசபை உறுப்பினர்களான:

#சேர்:மாக்கான் மாக்கார்

#N.H.M.அப்துல்காதர்,

#கலாநிதி:துவான் புர்கானுதீன் ஜாயா(T.B.Jaya),

📝1939.03.05 ம்
திகதி முஸ்லிம் அரசியல் மாநாட்டில்
#கலாநிதி:பதியுத்தீன் மஹ்மூத் சுதந்திரத்திற்கு ஆதரவளித்து பேசினார்.

👉1945.11.09 ல் டொமினியன் அந்தஸ்து வழங்கும் சட்டமூலத்திற்கான வாக்களிப்பில்

#சேர்:ராசீக் பரீட்

#டொக்டர்:M.C.M.கலீல்

#T.B.Jaya
போன்றவர்கள் தனது ஆதரவை வழங்கி வாக்களித்தனர்.

😥 இப்போது, இவர்களில் பலர் மறக்கடிக்கப்பட்டு
#M.C.சித்தி லெப்பை, #T.B.Jaya ஆகிய இருவரின் பெயர்கள் மாத்திரம் நினைவு கூரப்பட்டு வருகின்றன.
Advertisement