ஆலையடிவேம்பு பிரதேச செயலக சுதந்திர தின கொண்டாட்டங்கள்

 


வி.சுகிர்தகுமார் 0777113659 


 இலங்கையின் 73ஆவது தேசிய சுதந்திரதின கொண்டாட்டங்கள் நாட்டின் பல பாகங்களிலும் உணர்வு பூர்வமாக சிறப்பாக இன்று(04)கொண்டாடப்பட்டது.

இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் சுகாதார நடைமுறைகளுடன் சுதந்திரதின கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.

 பிரதேச செயலாளர் வி.பபாகரன்; தலைமையில் நடைபெற்ற நிகழ்வுகளில் சர்வமத குருமார்கள் மற்றும் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் உள்ளிட்ட அலுவலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

காலை 8மணிக்கு பிரதேச செயலாளரால்  தேசிய கொடி ஏற்றிவைக்கப்பட்டதன் பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்;டது.

பின்னர் சர்வமத குருமார்களினால் சமய அனுஸ்டானம் வழங்கப்பட்டதுடன் பிரதேச செயலாளரினால் சுதந்திர தினம் தொடர்பான விசேட உரை நிகழ்ந்தப்பட்டது.

இதேநேரம் பிரதேச செயலக வளாகத்தில் மரக்கன்றுகளும் பிரதேச செயலாளர் உள்ளி;ட்டவர்களினால் நடப்பட்டதுடன் சிரமதானப்பணிகளும் முன்னெடுக்கப்பட்டன.


Advertisement