கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி ஐ.எல்.எம். றமீஸ்

 


கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய  தலைவராக மருதமுனை பிரதேசத்தைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணி ஐ.எல்.எம். றமீஸ் தெரிவுசெய்யப்பட்டார்.


கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் 2021/2022 ஆண்டுக்கான புதிய நிர்வாக சபையை தெரிவு செய்வதற்கான பொதுக்கூட்டம்   கல்முனை நீதவான் நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் கடந்த வியாழக்கிழமை (11) நடைபெற்றது.

இதன்போது, கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய  தலைவராக மருதமுனை பிரதேசத்தைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணி ஐ.எல்.எம். றமீஸ் தெரிவுசெய்யப்பட்டார்.

அத்துடன்  செயலாளராக ஆரிக்கா காரியப்பரும் பொருளாளராக எம்.ஜே. ஜவாட் நிஷாத் உட்பட 23 நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.

கல்முனை பிரதேசத்தை மையப்படுத்தி எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டன.


Advertisement