ஏறாவூர் நகர சபையின்தவிசாளர் நழீம் ஹாஜி

 ஏறாவூர் நகர சபையின் புதிய முதல்வராக தெரிவாகிய கௌரவ தவிசாளர் நழீம் ஹாஜியாருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் நேரில்  வாழ்த்து.....ஏறாவூர் நகர சபையின் வரவு செலவுத்திட்டம்  தோற்கடிக்கப்பட்டதை அடுத்து புதிய தவிசாளரை தேர்வு செய்வதற்கான இன்றைய தேர்வில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் மத்தியில் ஏகமனதாக தெரிவாகிய கௌரவ தவிசாளர் நழீம் ஹாஜியாருக்கு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் , மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் நேரடியாக விஜயம் செய்து வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டதோடு பொன்னாடை போற்றி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது...

.


இதன்போது மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் என்ற ரீதியில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினரிடம் கௌரவ தவிசாளரினால்   நகர சபையின் செயற்பாடுகள் , சவால்கள் குறித்து முன்வைத்ததோடு  இனமத வேறுபாடின்றி எமது சபையினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு தங்களாலான பங்களிப்புக்களை வழங்க  வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்க வைக்கப்பட்டது


அத்தோடு கௌரவ  தவிசாளர் தலைமையில்  , உப தவிசாளர் , உறுப்பினர்கள்,சபையின் செயலாளர் சகிதம் பல்வேறு சவால்களுடன் நீண்டகாலமாக சபையிலே தற்காலிகமாக பணியாற்றும் ஊழியர்களது நிரந்தர நியமனம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டு மகஜரும் கையளிக்கப்பட்டது.Advertisement