ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் வெசாக் தின நிகழ்வுகள்


 


வி.சுகிர்தகுமார் 0777113659 


  கொரோனா பரவலுக்கு மத்தியிலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மக்கள் பங்களிப்பின்றி நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் பௌத்த விகாரைகள், இல்லங்கள் உள்ளிட்ட அரச திணைக்களங்களிலும் வெசாக் தின நிகழ்வுகள் மிகவும் அமைதியான முறையில் கொண்டாடப்பட்டது.

இதற்கமைவாக அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் வெசாக் தின நிகழ்வுகள் இடம்பெற்றன.

அலுவலக வளாகத்தில் வெசாக் கூடுகள் அமைக்கப்பட்டு மட்டுப்படுத்தப்பட்ட உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் சுகாதார நடைமுறைகளோடு வெசாக் நிகழ்வுகள் நடைபெற்றது.

அத்தோடு வெசாக் தினத்தை முன்னிட்டு பிரதேச செயலக சமுர்த்தி பிரிவினரால் பிரதேச செயலகத்தின் நிதிப்பங்களிப்புடன் கணக்காளரின் ஒத்துழைப்போடு பாரம்பரிய முறையில் இயற்கை பொருட்களை கொண்டு நிர்மானிக்கப்பட்ட பொதுமக்கள் பயன்பாட்டு கொட்டகையும் மாலை 6.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.

தலைமையக சமுர்த்தி முகாமையாளர் என்.கிருபாகரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதேச செயலாளர் வி.பபாகரன் கலந்து கொண்டு பொதுமக்கள் பாவனை கொட்டகையினை திறந்து வைத்தார்.

நிகழ்வில் பிரதேச செயலக கணக்காளர் க.பிரகஸ்பதி, நிருவாக உத்தியோகத்தர் க.சோபிதா சிரேஸ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.பி.ரவிச்சந்திரன் உள்ளிட்ட சில அதிகாரிகள் கலந்து கொண்டனர்.