வெசாக் தோரணங்கள், அம்பாரை மாவட்டத்தில்


 


(සිහාන්)


வெசாக் தினத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தின்  கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று ,அம்பாறை  பொலிஸ் நிலையம் உட்பட ஏனைய பிரதேச பொலிஸ் நிலையங்கள், காரைதீவு, பெரியநீலாவணை, பாதுகாப்பு படை காவலரண்கள், அம்பாறை மாவட்ட   அரச காரியாலயங்கள், அரச வர்த்தக நிலையங்கள், தனியார் வர்த்தக நிலையங்கள் ,விகாரைகள் போன்றவற்றில்  பல வர்ண அலங்கார வெசாக் கூடுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இது தவிர கொரோனா அனர்த்தத்திற்கும் மத்தியிலும்  பொலிஸார், இராணுவத்தினர், கடற்படையினர் என பலரும் இணைந்து இந்த வெசாக் கூடுகளை தத்தமது பாதுகாப்பு அரண்களில் காட்சிப்படுத்தியுள்ளனர்.

நாட்டில் பரவலாக அதிகரித்து வரும் கொரோனா அலையின் காரணமாக இந்த வெசாக் பண்டிகையை கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன்  இதனால் வழமையாக நடைபெறும் வெசாக் தன்சல் போன்ற எவ்வித விசேட நிகழ்வுகளுமில்லாது கொரோனா கட்டுப்பாட்டுடன் கூடிய ஆராதணைகளுடன் மட்டுமே இந்த வெசாக் பண்டிகை சிங்கள மக்களினால் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 இன்றைய விசேட தினத்திலும் பாதுகாப்பு படையினர்,  பொலிஸார், சுகாதாரத்துறை ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றமையை காணக்கூடியதாக உள்ளது.