திருமண நிகழ்வுகளை நடத்த தடை
இன்று நள்ளிரவு முதல் வீடுகளில் அல்லது ஹோட்டல்களில் நிகழ்வுகளையும் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக COVID தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார். 

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (17 ஆம் திகதி) நள்ளிரவு முதல் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை அனைத்து திருமண நிகழ்வுகளும் இரத்து செய்யப்படுவதாகவும் இராணுவத் தளபதி அறிவித்துள்ளார். 

அத்தோடு, உணவகங்களில் 50 சதவீதமானோர் மட்டும் அமர்ந்து உணவுண்ண முடியும் என்றும் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.