அக்கரைப்பற்று கிழக்கு கமநல சேவைப்பிரிவில் சேதனப்பசளை உற்பத்தியை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம்





 வி.சுகிர்தகுமார் 0777113659  


ஜனாதிபதியின் சுபீட்சத்தை நோக்கிய நாடு எனும் திட்டத்தின் கீழ் சேதனப்பசளை உற்பத்தியை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம் நாடளாவீய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைவாக அக்கரைப்பற்று கிழக்கு கமநல சேவைப்பிரிவில் கமநல சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் யு.எல்.சம்சுடீன் தலைமையில் அக்கரைப்பற்று கிழக்கு விவசாய விரிவாக்கல் நிலைய பொறுப்பதிகாரி விவசாயப்போதனாசிரியர் எம்.எஸ்.எம்.நிப்றாஸ் வழிகாட்டலில் இடம்பெற்ற சேதனப்பசளை உரம் தயாரித்தல் தொடர்பான செயன்முறை தொழில்நுட்ப விழிப்பூட்டல் நிகழ்வில் உள்ளிட்ட விவசாய உத்தியோகத்தர்கள் மற்றும் கமநலசேவை உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் விவசாய சங்க தலைவர்கள் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது சேதனப்பசளை உற்பத்தி தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கை மற்றும் இதன் மூலம் எதிர்காலத்தில் நஞ்சற்ற உணவை உற்பத்தி செய்யும் நோக்கம் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இதற்காக அரசாங்கம் விவசாயிகளுக்கு வழங்கவுள்ள சலுகைகள் தொடர்பிலும் குறிப்பிடப்பட்டது.

மேலும் சேதனப்பசளை தயாரிப்பது தொடர்பான தகவல்கள் தேவைப்படும் இடத்து விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுக்கவும் விவசாய விரிவாக்கல் பிரிவு தயாராகவுள்ளதாகவும் எவ்வேளையிலும் தமமை அனுகி பெற்றுக்கொள்ள முடியும் எனவும் கூறப்பட்டது.

அத்தோடு சேதனப்பசளை தயாரிப்பதன் படிமுறைகள் தொடர்பிலும் செயன்முறையாக செய்து காட்டப்பட்டது.