#டான்ஜெராங் சிறைச்சாலையில், ஏற்பட்ட தீயினால் குறைந்தபட்சம் 41 பேர் உயிரிழந்தள்ளனர்ந்தோனேஷியாவில் சிறைச்சாலையொன்றில் ஏற்பட்ட தீயினால் குறைந்தபட்சம் 41 பேர் உயிரிழந்தள்ளனர்.

துலைநகர் ஜகார்த்தாவுக்கு அருகிலுள்ள டான்ஜெராங் சிறைச்சாலையில் இன்று புதன்கிழமை அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் 41 பேர் பலியானதுடன் மேலும் 39 பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்படி சிறைச்சாலையில் சுமார் 2000 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

தீப்பற்றிய கட்டடத்தில் 122 கைதிகள் இருந்தனர். தீ பரவிய வேளையில் பெரும்பாலான கைதிகள் உறங்கிக்கொண்டிருந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.