அம்பாரை ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த தீர்த்தோற்சவம்


 


வி.சுகிர்தகுமார் 0777113659


  கிழக்கு மாகாணம்; அம்பாரை மாவட்டத்தில் அம்பாரையின் மத்திய பகுதியில் அமைந்துள்ள அம்பாரை ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த தீர்த்தோற்சவம்; இன்று (10) சுகாதார நடைமுறைகளுடன் மக்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது.

 இந்து பௌத்த மக்களின் ஒற்றுமைக்கும் இரு சமயத்தவராலும்  போற்றி வழிபடப்படும் இவ்வாலயத்தின் தீர்த்தோற்சவம்;  ஆலய தலைவர் வ.கருணைநாதன்;; தலைமையில் இடம்பெற்றதுடன் ஒரு சில இந்து பௌத்த அடியவர்கள் கலந்து கொண்டனர்.
ஆலயத்தில் நடைபெற்ற பூஜையை தொடர்ந்து அடியார்களினால் விக்னேஸ்வரப்பெருமான் உள்வீதி வலமாக தூக்கிச் செல்லப்பட்டார்.

பின்னர் ஆலயத்தின் புனித தீர்த்தக் குளத்தை சென்றடைந்தது. குளத்தருகே அமர்த்தப்பட்ட விக்னேஸ்வரப்பெருமானுக்கு அபிசேகப்பூஜை நடைபெற்றது.
அரோகரா எனும் வேண்டுதலுடன் குளத்தில் இடம்பெற்ற தீர்த்தோற்சவத்தில் எம்பெருமானும்;; சில பக்தர்களும் கலந்து கொண்டு தீர்த்தம் ஆடினர்.
வழிபாட்டுக் கிரியைகளை ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ க.கு.நகுலேஸ்வரக்குருக்கள் தலைமையிலான குருமார்கள் நடாத்தி வைத்தனர்.