செழுமைமிக்க 100 நகரங்களை அழகுபடுத்தும் செயற்திட்டம் கல்முனையில் ஆரம்பம்


 


(சர்ஜுன் லாபீர்)

நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு எனும் அரசாங்கத்தின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ்  100 பெருநகரங்களை அபிவிருத்தி செய்யும் செயற்திட்டத்தின் அடிப்படையில் நாட்டில் உள்ள 100 நகரங்களினை தெரிவு செய்து அபிவிருத்தி செய்து வருகின்றது.


அந்த அடிப்படையில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரிஸ் அவர்களின் முயற்சியினால் கடலோர பாதுகாப்பு கழிவுப் பொருட்கள் அகற்றுகை, மற்றும் சமுதாய தூய்மை இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நகர அபிவிருத்தி அதிகார சபையின் நெறிப்படுத்தலில் சுமார் 18.7 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில்  கல்முனை நகரம் அழகுபடுத்தப்பட இருக்கின்றது.

இத் திட்டத்தின் பெயர் பலகையினை திரை நீக்கம் செய்யும் ஆரம்ப நிகழ்வு இன்று(10) கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம் ரக்கீப் தலைமையில் கல்முனை பஸ் தரிப்பிடத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில்
நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் எஸ்.பி.எஸ் ஜெயதிஸ்ஸ,கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எம் ரோஸன் அக்தார்,எம்.எஸ்.எம் நிஸார்,ஏ.சி.ஏ சத்தார்,சந்திரசேகரம் ராஜன்,சிவலிங்கம், எம்
எம்.எம் நவாஸ்,செலஸ்தனா,நந்தினி புவனேஸ்வரிநகர அபிவிருத்தி அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள்,பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அவர்களின் பிரத்தியேக செயலாளர் நெளபர் ஏ பாவா,இணைப்பு செயலாளர் சப்ராஸ் நிலாம்,உட்பட பொது  அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.