ஸ்ரீ ராம்ஜி சுவாமிகளின் மஹா சமாதியும் ஆத்மலிங்கப் பிரதிஷ்டத்தையும்
 


(சுகிர்தகுமார்) 0777113659 


 ஸ்ரீ ராம்ஜி சுவாமிகளின் மஹா சமாதியும் ஆத்மலிங்கப் பிரதிஷ்டத்தையும் அக்கரைப்பற்று வாச்சிக்குடா பஞ்சமுக ஆஞ்சநேயர் தேவஸ்தானத்தில் (17)  இடம்பெற்றது.

 ஆலயத்தில் சற்குருவாக இருந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கும் காயத்திரி சித்தர் டாக்டர் ஆர்.கே.முருகேசு சுவாமிகளின் பரிபூரண ஆசிர்வாதத்துடன் காலை 9.38 மணிமுதல் 10.28 மணிவரையுள்ள அபரபட்ச திதியும் உத்தராட நட்சத்திரமும் சித்த யோகமும் கூடிய சுபநேரத்தில்; இப்பூஜைகள் நடைபெற்றதுடன் நண்பகல் விசேட பூஜைகளும் லிங்கத்திற்கு மலர்தூவி வழிபடும் நிகழ்வும் இடம்பெற்றது.
.
இதன்போது ராம்ஜி; சுவாமிகளின் மகாசமாதியும் ஆத்மலிங்க பிரதிட்சையும் ஸ்தூபி அபிசேகமும் நடைபெற்று குருவாசியும் அருளாசியும் வழங்கப்பட்டதுடன் அடியவர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்க ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

நேற்று மாலை  வாஸ்து சாந்தி மற்றும் கிரியைகளுடன் ஆரம்பமாகி யாக மண்டப பூஜையும் இடம்பெறறது. இன்று  காலை 6 மணிமுதல் பூஜைகள் ஆரம்பமாகி ஸ்ரீ ராம்ஜி சுவாமிகளின் மஹா சமாதி பிரதிஸ்டையும்; ஆத்மலிங்கப் பிரதிஷ்டத்தையும் தூபி அபிசேகம் நடைபெற்று அடியவர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது.

கிரியைகள் யாவற்றியும் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரின் அருளாசியும் குருவாசியும் பெற்றுச் சென்றனர்.

ஆலய பரிபாலகர் நல்லதம்பி கந்தசாமி  அவர்களின் தலைமையில் இடம்பெற்ற கிரியைகள் யாவற்றையும் கிரியாகலாநிதி வித்தியாசாதகர் வாமதேவ சிவாச்சாரியார் சிவஸ்ரீ புண்ணிய கிருஸ்ணகுமாரக்குருக்கள் தலைமயில் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ த.குகனேஸ்வர சர்மா உள்ளிட்டோர் நடாத்தி வைத்தனர்.