Showing posts with label Eastern. Show all posts


 முழுநேர இலவச உயர் தேசிய டிப்ளோமா தகவல் தொழில்நுட்ப கற்கை நெறியை (HNDIT) நிறுத்தியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திருகோணமலை உயர் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு (ATI) முன்பாக மாணவர்கள் இன்று (03) எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 


(வி.சுகிர்தகுமார்) 0777113659  


 ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் மேதின கூட்டம் அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்றில் உள்ள ஆலையடிவேம்பு கால்நடை பாற்பண்ணையாளர் விவசாய கூட்டுறவுச்சங்க அலுவலக மண்டபத்தில் இன்று (01) நடைபெற்றது
உரிமைக்காய் உரக்கச் சொல்வோம் எனும் தொனிப்பொருளில் ஆலையடிவேம்பு கால்நடை பாற்பண்ணையாளர் விவசாய கூட்டுறவுச்சங்கம் மற்றும் ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் தொழிற்சங்கம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் தலைவர் ராஜ ராஜேந்திரா முன்னாள் அதிபர்; இரத்தினவேல் ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் மாவட்ட செயலாளர்; கனகரெத்தினம் கால்நடை பாற்பண்ணையாளர் விவசாய கூட்டுறவுச்சங்க செயலாளர் வி.கோகுலன் உள்ளிட்;ட சங்கத்தின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் முக்கியஸ்தர்கள் எதிர்கால திட்டம் தொடர்பில் உரையாற்றியதுடன் உலக உழைப்பாளர் நாள் 2024 இன் பிரகடனமும் வெளியிடப்பட்டது.

இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியானது ஒட்டுமொத்த தொழிலாளர் வர்க்கத்தின் வாழ்வில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளதுடன் பொருளாதார வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் அயராது உழைக்கும் தொழிலாளர் வர்க்கம் விழிபிதுங்கி வாழ்வதா? சாவதா? எனும் விரக்தியின் விழிம்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அப்பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மலையக தோட்டத்தொழிலாளர் நலன் பாதுகாப்பு விவசாயிகளின் தேவைகள் பூர்த்தி செய்யப்படல் கால்நடை பாற்பண்ணையாளர்களின் அம்பாரை மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களில் உள்ள மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு தீர்வு காணல் கடல் வளம் வேறு நாட்டவர்களால் சூறையாடப்படாமல் பாதகாத்தல் போன்ற தீர்மானங்களும் இப்பிரகடனத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது.

 (


வி.ரி.சகாதேவராஜா)

 சம்மாந்துறை வலயத்தின் கல்வி அபிவிருத்திக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளராக ஆறு வருடங்கள் கடமையாற்றிய
ஏ.எல் .அப்துல் மஜீத் அக்கரைப்பற்று வலயத்திற்கு இடமாற்றம் பெற்று செல்வதையிட்டு பிரியாவிடை வைபவம் நடைபெற்றது.

 சம்மாந்துறை வலய நிர்வாகத்திற்கு பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் பி.எம்.யசீர் அரபாத் மொகைடீன் தலைமையில் நேற்று (30) செவ்வாய்க்கிழமை பிரியாவிடை நிகழ்வு பணிமனையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

 அச்சமயம் பிரதி கல்விப் பணிப்பாளர்களான திருமதி ஏசி.நுஸ்ரத் நிலோபரா, எச்.
நைரூஸ்கான், பி.பரமதயாளன் ஆகியோரும் பிரசன்னமாக இருந்தார்கள்.

சம்மாந்துறை வலய கல்வி சார் உத்தியோகத்தர்களின் நலன்புரி ஒன்றிய தலைவரும், உதவிக் கல்விப் பணிப்பாளருமான வி.ரி. சகாதேவராஜா நெறிப்படுத்தி தொகுத்தளித்தார்.

பிரதிக் கல்விப் பணிப்பாளர் 
மஜீத் சம்மாந்துறை வலய கல்வி வளர்ச்சியில் ஆற்றிய அருஞ் சேவைகளை பாராட்டி அங்கு பலராலும் பேசப்பட்டது.

 பணிப்பாளர்களுடன் கணித பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் எம் எம் எம்.  ஜௌபர்,  வளவாளர் எஸ் எல்.அப்துல் முனாப் ஆகியோரும் உரையாற்றினார்கள்.
இறுதியில் பணிப்பாளர் மஜீத் நெகிழ்ச்சியான மனநிலையில் ஏற்புரையாற்றினார்.

 


(எஸ்.அஷ்ரப்கான், றியாஸ் ஆதம்)

சிலோன் ஜேர்னலிஸ்ட் போரம்  ஏற்பாடு செய்துள்ள மே தினக் கொண்டாட்டம் அட்டாளச்சேனை சந்தை சதுக்கத்தில் இடம்பெற்றது. 

போரத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடவியலாளருமான எம்.எஸ்.எம்.ஜஃபர் (ஜே.பி) தலைமையில்  இடம்பெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில், விசேட அதிதியாக அக்கரைப்பற்று ஹல்வானி பேக்கரியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் தொழிலதிபருமான எஸ்.ஏ.எம்.சித்தீக்  ஆகியோர் கலந்துகொண்டனர்.

அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட இந்நிகழ்வில் விசேட துஆ பிரார்த்தனை மற்றும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன்  பயன்தரும் மரங்கள், கற்றாளைக்கன்றுகளும் 
சகலருக்கும்   வழங்கி வைக்கப்பட்டது.

 






சர்வதேச தொழிலாளர் தினத்தைச் சிறப்புக்கும் வகையில், அக்கரைப் பற்றிலும் அனுஷ்டிக்கப்பட்டது. மருந்தகங்கள், ஒரு சில உணவகங்கள் தவிர, ஏனைய நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததை அவதானிக்க முடிகின்றது.

 


( வி.ரி.சகாதேவராஜா)


காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் வெட்டு வாய்க்கால் பகுதியில்  தொழுநோய் கள ஆய்வு
இன்று (30) செவ்வாய்க்கிழமை நடாத்தப்பட்டது.


காரைதீவு சுகாதார உணவு அதிகாரி டாக்டர் தஸ்லிமா பஷீர் தலைமையிலான சுகாதார குழுவினர் இன்று அப்பகுதியில் வீடு வீடாக விஜயம் செய்து ஆய்வு செய்தனர்.

 இதில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், தொழுநோய் கட்டுப்பாட்டு கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

 இதன் போது ஏலவே இனங்காணப்பட்ட நான்கு தொழுநோயாளர்களுக்கு உரிய சிகிச்சை வழங்குவதற்கான  நடவடிக்கையும் ஆலோசனையும் மேற்கொள்ளப்பட்டது.
அவர்கள் உரிய சிகிச்சை பெறாமல் இருந்து வந்தமை அவதானிக்கப்பட்டது.

 


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் குணமடையக் காத்திருக்கிறார்கள்! ⛑️


@SLRedCross அம்பாறை கிளையானது, அப்பகுதி மக்களுக்கு ஆதரவளித்து, பேரிடர் நிலையைக் கடக்க அயராது உழைத்து வருகிறது. இது சமீபத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமின் ஒரு பார்வை...


 ( வி.ரி.சகாதேவராஜா)

மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஒருங்கிணைந்த விழிப்பூட்டல் நிகழ்வு பாலையடிவட்டை விவசாய போதனாசிரியர் பிரிவிலுள்ள வம்மியடியூற்று கிராமத்தில் நேற்று  (28) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

பாலையடிவட்டை விவசாய போதனாசிரியர் ரீ.கோபி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் எம்.பரமேஸ்வரன் கலந்து கொள்ள பாடவிதான உத்தியோகத்தர்களான லக்ஸ்மன் மற்றும் மாறன் கிராம சேவை உத்தியோகத்தர் தெற்கு வலய விவசாய போதனாசிரியர்கள் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய அமைப்புகள் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது மாமரங்கள் மற்றும் பழமரங்களின் கத்தரித்தல் பழக்கப்படுத்தல் பசளைப்பிரயோகம் விவசாய இரசாயனங்களின் முறையான பயன்பாடு கொடித்தோடை நடுகை மற்றும் பராமரிப்பு என்பன பற்றிய செய்துகாட்டல்கள் விவசாய போதனாசிரியர்களால் தெளிவூட்டப்பட்டதுடன் விவசாய திணைக்களத்தினால் வழங்கப்பட்ட கௌபி அறுவடையும் இடம்பெற்றது.
 விவசாயிகளுடனான கலந்துரையாடலில் விவசாயிகளின் பிரச்சினைகள் கேட்டறியப்பட்டு அதற்கான தீர்வுகளை வழங்குவதாக பிரதி விவசாய பணிப்பாளர் உறுதியளித்தார்.

 


கிழக்கு மாகாண கிரிக்கெட் வீரர்களின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட பி.வசிஹரன், தற்போது மட்டக்களப்பில் தனது சொந்த பணத்தில் ஒரு முழுமையான கிரிக்கெட் மைதானத்தை நிர்மாணித்துள்ளார்.

உயர்தர கிரிக்கெட் அனுபவத்தைப் பெற விரும்பும் அனைத்து இளைஞர்களுக்கும் இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

மட்டக்களப்பு கோட்டைமுனை பகுதியில் இந்த பிரமாண்ட மைதானம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

 


#Rep/Faslin

காத்தான்குடி ஆதார வைத்தியாசலையில் மகப் பேற்று மற்றும் பெண் நோயியல் வைத்திய நிபுனராக கடமையாற்றிய Mrs. இப்லா இல்யாஸ் உயர் கற்கை நெறியை பூர்த்தி செய்வதற்காக அவுஸ்திரேலியா நாட்டிற்கு செல்கின்றார்.

அவர்களுக்கான பிரியாவிடை இன்று 26.04.2024 வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.




 அக்கரைப்பற்று பொத்துவில் வீதி, மீன் சந்தைக்கு முன்பாக, புதிதாக உதயமாகி இருக்கின்றது, தாசிம் ஹோட்டேல்.
யூதர்களுடைய பால்மாக்களோ, பொருட்களோ இங்கு விற்பனை செய்யப்படுவதில்லை.


வி.சுகிர்தகுமார் 0777113659
 

 ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பின் ஏற்பாட்டில் பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் இன்று (26) சிரமானப்பணி முன்னெடுக்கப்பட்டது.
வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்தியர் யு.எல்.எம்.சகீல் வேண்டுகோளுக்கமைய இச்சிரமதானப்பணி மேற்கொள்ளப்பட்டது.
அமைப்பின் தலைவர் க.சுந்தரலிங்கம் தலைமையில் இடம்பெற்ற சிரமதானப்பணியில்; அமைப்பின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டதுடன் வைத்தியர் குணாளினி சிவராஜ் மேற்பார்வை செய்தார்.
வைத்தியசாலையின் வெளிச்சுழலில் காணப்பட்ட ; புற்கள் குப்பைகள் அகற்றப்பட்டது.
அகற்றப்பட்ட குப்பைகள் ஓரிடத்தில் சேகரிக்கப்பட்டதுடன் அவற்றை நிரந்தரமாக அகற்றுவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
அம்பாரை மாவட்டத்தில் உள்ள பல பிரதேசங்களுக்கு சென்று அங்குள்ள பொது இடங்கள் ஆலயங்கள் என துப்பரவு செய்யும் பணியில் ஈடுபடும் தன்னார்வ அமைப்பினராகிய ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினருக்கு வைத்தியசாலை நிருவாகத்தினர் நன்றி தெரிவித்தனர்.

 


வி.சுகிர்தகுமார் 0777113659  


அக்கரைப்பற்று விபுலானந்தா சிறுவர் இல்லத்தில் 7.439.000 ரூபா ஒதுக்கீட்டில் நிர்மானிக்கப்படவுள்ள மாணவர்கள் தங்குமிட கட்டடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (24) இடம்பெற்றது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் உணவுப்பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார துரித முயற்சி திட்டத்தின் கீழ் சிறுவர் நன்நடத்தை திணைக்களத்தின் ஊடாக வழங்கப்பட்ட நிதியின் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ள முதலாம் கட்ட வேலைக்கான அடிக்கல்லே இவ்வாறு நடைபெற்றது.
விபுலானந்தா சிறுவர் இல்லத்தின் ஸ்தாபகர் இறைபணிச்செம்மல் த.கயிலாயபிள்ளை தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் தகஜேந்திரன் மற்றும் அம்பாரை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசனின் இணைப்பு செயலாளர் க.கண்ணதாசன் மாவட்ட சிறுவர் நன்நடத்தை அதிகாரி எஸ்.சிவகுமார் அக்கரைப்பற்று பிரதேச சிறுவர் நன்நடத்தை அதிகாரி ஜெயதாஸ் உள்ளிட்ட இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அடிக்கல் நடும் பூஜை வழிபாடுகளை சிவஸ்ரீ சண்முகம் வசந்த குருக்கள் நடாத்தி வைத்ததுடன் அடிக்கல் நடும் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து அதிதிகள் அனைவரும் அடிக்கல்லினை நாட்டி வைத்தனர்.
முதலாம் கட்டமாக இக்கட்டடத்தின் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் தொடராக இவ்வேலைத்திட்டம் முன்கொண்டு செல்லப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


(நூருல் ஹுதா உமர் )


குறைந்த வருமானம் பெறும் குடும்பபங்களுக்கு ஆதரவு வழங்கி அந்த மக்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் முழு நாட்டையும் உள்ளடக்கும் விதமாக குறைந்த வருமானம் பெறும் சுமார் 2.74 மில்லியன் குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு 10 கிலோ கிராம் நாட்டு அரிசியை இரண்டு (02) மாத காலத்திற்கு வழங்குவதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

இவ் வேலைத்திட்டம் தேசிய ரீதியாக (21) அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 
இதன் தொடரச்சியாக காரைதீவில் நடைபெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக காரைதீவு பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.எம். முசாரப் அவர்கள் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

இந்த நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன், உதவி பிரதேச செயலாளர் செ.பாத்தீபன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் இராஐகுலேந்திரன், சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர் எம் .எம் அச்சுமுகமட் உட்பட பலரும் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு அரிசி வழங்கி வைத்தனர். 


 இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பது, நீதியைக் கோருவது மற்றும் கருத்துச் சுதந்திரத்தை நிலைநிறுத்துவது ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்த கலந்துரையாடலுக்காக சிவில் சமூக உறுப்பினர்களைச் சந்தித்து எனது மட்டக்களப்புப் பயணத்தை முடித்தேன்.

 (ஏ.எம்.ஹஸ்னி)



பொத்துவில் பிரதேச மக்களுக்களுக்காக ஒரு துண்டுக் காணியையேனும்
பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப்  பெற்றுக்கொடுக்கவில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், பொத்துவில் பிரதேச சபையின்  முன்னாள் பிரதி தவிசாளருமான ஏ.எம்.தாஜுடீன் தெரிவித்தார்.

பொத்துவில் பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொத்துவிலைப் பொறுத்தவரை செங்காமம், துக்வெல்ல, உடம்பன்குளம், தகராம்பெல, ஆமவெட்டுவான், கிராண்கோவை, சோனிகம உள்ளிட்ட மேலும் பல பகுதிகளில் காணிப்பிரச்சினை உள்ளது. இந்தப் பிரச்சினைகள் எல்லாம் தீர்க்கப்பட்டுள்ளதா? அல்லது ஒரு துண்டு நிலத்தைக்கூட முஷாரப் எம்.பியினால் விடுதலை செய்ய முடிந்ததா? எனப் பகிரங்கமாகக் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.

மண்மலை விடுதலை செய்யப்பட்டிருப்பதாக பேசுகின்றனர் மண்மலை பிரதேசத்தில் ஏதாவது அபிவிருத்திகள் இடம்பெற்றிருக்கின்றதா? மக்களுடைய குடியிருப்புக் காணிகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றதா? அங்குள்ள மக்கள் அன்று அனுபவித்த அதே இன்னல்களை இன்றும் அனுபவித்துக்கொண்டே இருக்கின்றனர். இன்று அங்கு மலசலகூடம் கட்டிக்கொள்ள முடியாது. மக்கள் எல்லை வேலிகளை அமைத்துக் கொள்ள முடியாது. குடி நீருக்காக ஒரு கிணற்றைக்கூட நிர்மாணிக்க முடியாது. பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் இன்னும் அந்த இடத்தை சவாலுக்குட்படுத்துகின்றனர்.

இருக்கின்றனர். இங்கு தனிப்பட்ட ஒருத்தருக்காக வாக்குகள் இல்லை. மிகக் குறுகிய காலத்துக்குள்ளே இந்தக்கட்சி பொத்துவில் பிரதேசத்தில் அளப்பெரிய சேவைகளை ஆற்றியுள்ளது. இந்தக் கட்சியின் மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாகவே கடந்த பாராளுமன்றத் தேர்தலில் இங்குள்ள மக்கள் கணிசமான வாக்குகளை வழங்கினர்.

இந்த மக்களினால் அளிக்கப்பட்ட வாக்குகள் முஷாரபுக்கானது அல்ல இந்தக்கட்சி மிகக் குறுகிய காலத்திலேயே ஆற்றிய அளப்பெரிய சேவைக்கானது. அபிவிருத்தி செய்வது போன்று மாயை காட்டி மக்களை ஏமாற்றிய காலம் மலையேறிவிட்டது. கட்சிக்கும் பொத்துவில் மக்களுக்கும் துரோகம் இழைத்த பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிர்வரும் தேர்தலில் பொத்துவில் மக்கள் பாடம் புகட்டுவர் என்றார்.


சேவைகளை ஆற்றியுள்ளது. இந்தக் கட்சியின் மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாகவே கடந்த பாராளுமன்றத் தேர்தலில் இங்குள்ள மக்கள் கணிசமான வாக்குகளை வழங்கினர்.


இந்த மக்களினால் அளிக்கப்பட்ட வாக்குகள் முஷாரபுக்கானது அல்ல இந்தக்கட்சி மிகக் குறுகிய காலத்திலேயே ஆற்றிய அளப்பெரிய சேவைக்கானது. அபிவிருத்தி செய்வது போன்று மாயை காட்டி மக்களை ஏமாற்றிய காலம் மலையேறிவிட்டது. கட்சிக்கும் பொத்துவில் மக்களுக்கும் துரோகம் இழைத்த பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிர்வரும் தேர்தலில் பொத்துவில் மக்கள் பாடம் புகட்டுவர் என்றார்.


சமூக ஊடக ஆர்வலர்களுக்கான கப்சோவின் நான்காம் கட்ட பயிற்சிப் பட்டறை நிறைவு!*
அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலக பிரிவுகளையும் உள்ளடக்கியதாக கப்சோ நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சமூக ஊடக ஆர்வலர்களுக்கான "Youth Media Project" வேலைத்திட்டம் கப்சோ நிறுவனத்தின் திட்டப்பணிப்பாளர் ஏ.ஜே காமில் இம்டாட் தலைமையில் நடைபெற்று வருகின்றது.
இந் நிகழ்ச்சித்திட்டத்தின் நான்காம் கட்ட நிகழ்வு காரைதீவு லேடி லங்கா வரவேற்பு மண்டபத்தில் நடை பெற்றது. நிகழ்வுக்கு வளவாளராக வருகை தந்திருந்த ஆசிரியர் அஸ்வர் மொகமட் விரிவுரை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ் வேலைத்திட்டமானது அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலக பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட 30 சமூக ஊடக ஆர்வலர்களைக் கொண்டு நடாத்தப்பட உள்ள ஒரு வருட கால திட்டமாகும்.
GCERF ,HELVETAS நிதியுதவியுடன் GAFSO நிறுவனத்தின் ஏற்பாட்டில் செயற்படுத்தப்படும் Youth Media Project வேலைத்திட்டத்தின் கீழ் “HOPE of YOUTH ”எனும் தொனிப்பொருளில் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 (எம்.என்.எம்.அப்ராஸ்) 



குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச அரிசி விநியோகம் செய்யும் ஆரம்ப நிகழ்வு கல்முனை பிரதேச செயலாளர் லியாகத் அலி தலைமையில் கல்முனையில் நேற்று(21) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினரும்,கல்முனை பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் கலந்து கொண்டார்மேலும் இதன் போது கல்முனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜஃபர், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியகச் செயலாளர் பி.எம்.எம்.ஜஃபர்,நிருவாக கிராம உத்தியோகத்தர் உதார,கிராம உத்தியோகத்தர்கள்,
பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


 (றியாஸ் ஆதம், எஸ்.அஷ்ரப்கான்)


சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் நிறுவப்பட்டுள்ள அன்னையர் ஆதரவுக் குழுக்களை வலுப்படுத்தி ஆரோக்கியமான சமூகமொன்றினை கட்டியெழுப்பும் நோக்கில் சுகாதார அமைச்சின் சுகாதாரக் கல்விப் பணியகத்தினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த வேலைத்திட்டத்திற்கமைவாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் பிராந்திய சுகாதார கல்வி பிரிவினால் கல்முனை பிராந்தியத்தில் உள்ள 13 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளிலும் நிறுவப்பட்டுள்ள அன்னையர் ஆதரவுக் குழுக்களுக்கு பயிற்சி மற்றும் விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் நடாத்தப்பட்டு வருகின்றன.

பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள அன்னையர் ஆதரவுக் குழுக்களை வலுப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட பயிற்சிக் கருத்தரங்கு சனிக்கிழமை (20) பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது.

சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எப்.எம்.உவைஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய தாய் சேய் நலன் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.றிஸ்பின், மாவட்ட சுகாதார கல்வி அதிகாரி எம்.ஜே.எம்.பைறூஸ், பல் வைத்திய நிபுணர் ஏ.ஆர்.கத்தாபி, மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எஸ்.எம்.அப்துல் மலிக் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டு விரிவுரையாற்றினர்.

பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள அன்னையர் ஆதரவுக் குழுக்களைச் சேர்ந்த சுமார் 70 உறுப்பினர்கள் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டனர். குறித்த வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பதற்கு யுனிசெப் நிறுவனம் நிதியுதவி வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Rep/Faslin.

 ஆரையம்பதி கடற்கரையில் பட்டத்  திருவிழா.



சர்வமத சின்னங்களையிட்டு பட்டம் செய்து பறக்கவிட்ட மாணவன் முதலிடம்


மட்டக்களப்பு ஆரையம்பதி கடற்கரையில் பட்டத்  திருவிழா இன்று(19)  சனிக்கிழமை மாலை இடம் பெற்றது.


ஆரையம்பதி ஆரையூர் விளையாட்டுக் கழகத்தினால் முதல் தடவையாக இந்தப் பட்டத் திருவிழா  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது 


இந்த பட்டத் திருவிழாவில் 30க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கு பற்றினர்


இதில் ஆரையம்பதி மகா வித்யாலயத்தில் பத்தாம் ஆண்டில் கல்வி கற்கும் ஆரையம்பதியைச் சேர்ந்த . ரவீந்திரன் சோபிதன் முதல் இடத்தைப் பெற்றுக் கொண்டார்


இதில் முதல் மூன்று இடங்களையும் பெற்று போட்டியாளர்களுக்கு பெறுமதி வாய்ந்த பரிசில்கள் வழங்கப்பட்டன


ஆரையம்பதி ஆரையூர் விளையாட்டுக் கழகத்தின் தலைவர்  தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆரையம்பதி கந்த சுவாமி ஆலயத்தின் பிரதம குரு

உமாபத சர்மா கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட விளையாட்டு உத்தியோகத்தர்

வேலுப்பிள்ளை ஈஸ்வரன் உட்பட பிரமுகர்கள் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர் 


இந்த பட்டத் திருவிழாவில் பெருமளவிலான பொது மக்கள் சிறுவர்கள்  கலந்து கொண்டு பட்டத் திருவிழாவை கண்டு கழித்தனர்

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.