Showing posts with label India. Show all posts

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி, இன்று வியாழக்கிழமை மாலை 5.05 மணிக்கு டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 93.

வாஜ்பேயி

சிறுநீரக கோளாறு உள்ளிட்ட காரணங்களுக்காக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் ஜூன் 11 அன்று அனுமதிக்கப்பட்ட அவர் தொடர் சிகிச்சையில் இருந்தார்.
கடந்த 36 மணிநேரமாக அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து, உயிர் காப்பு சாதனங்களின் துணையுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு ஞாபக மறதி, நீரிழிவு உள்ளிட்ட உடல் உபாதைகள் இருந்ததாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வாஜ்பேயின் மறைவுக்கு டுவிட்டர் பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமரும், உண்மையான இந்திய அரசியல்வாதியுமான வாஜ்பேயின் மறைவு, அவரது தலைமையத்துவம், தொலைநோக்குப் பார்வை, முதிர்ச்சி மற்றும் நாவன்மையை இழந்துவிட்ட உணர்வை அனைவருக்கும் வழங்கும் என்று ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

Atal Bihari Vajpayeeபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

மூன்று முறை இந்தியாவின் பிரதமராக இருந்த வாஜ்பேயி, 2009 முதல் பொது வாழ்வில் இருந்து விலகி இருந்தார். அதே ஆண்டு ஏற்பட்ட வாத நோயால் அவரது நடக்கும் திறனும், பேசும் திறனும் பறிபோனது.
காங்கிரஸ் கட்சியை சேராத இந்தியப் பிரதமர்களில் முதல் முறை தனது முழு பதவிக் காலத்தையும் நிறைவு செய்தவர் வாஜ்பேயி.
1924 டிசம்பர் 25 அன்று மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் பிறந்த வாஜ்பேயி, 1957இல் பாரதிய ஜன சங்கம் சார்பில் முதல் முறையாக நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார்.
அவசர நிலைக்குப் பிறகு ஜன சங்கம் ஜனதா கட்சியுடன் இணைக்கப்பட்டபின், 1977 முதல் 1979 வரை மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதா கட்சி ஆட்சியில் வாஜ்பேயி வெளியுறவு அமைச்சராக இருந்தார்.

Atal Bihari Vajpayeeபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

1980-களில் ஜனதா கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியைத் தொடங்கிய முன்னணித் தலைவர்களில் ஒருவராக வாஜ்பேயி இருந்தார்.
1998ஆம் ஆண்டு பொக்ரானில் நடந்த அணுகுண்டு சோதனை, 1999இல் கார்கில் போரில் பாகிஸ்தானை இந்தியா வென்றது, பிரதமரின் தங்க நாற்கர சாலை திட்டம் மூலம் நாடு முழுவதையும் இணைக்கும் நெடுஞ்சாலைகள் அமைத்தது ஆகியன வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது நடந்தவற்றில் குறிப்பிடத்தகுந்தவை.
1996ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததால், அப்போதைய குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா அழைப்பு விடுத்ததன் பேரில் அடல் பிஹாரி வாஜ்பேயி தலைமையிலான அரசு பதவியேற்றது. எனினும், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் 13 நாட்களில் வாஜ்பேயி பதவி விலகினார்.
1998இல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் பிரதமானார் வாஜ்பேயி. எனினும் 13 மாதங்களில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆதரவை விலக்கிக்கொண்டதால், வாஜ்பேயி தலைமையிலான அரசு கவிழ்ந்தது.

Atal Bihari Vajpayeeபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

செப்டம்பர் 1999இல் நடந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்று, வாஜ்பேயி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைத்தது. 2004 செப்டம்பர் மாதம் வரை நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் இருந்த நிலையில், தொடர்ச்சியாக சில மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக வென்றதால், நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு, நான்கு மாதங்கள் முன்னதாகவே தேர்தல் நடத்தப்பட்டது. எனினும் அதில் பாஜக தோல்வி அடைந்தது.
அவர் கடைசியாக போட்டியிட்ட 2004 தேர்தலில், லக்னோ மக்களவைத் தேர்தலில் வாஜ்பேயி வெற்றி பெற்றிருந்தாலும், கூட்டணியின் தோல்விக்கு பொறுப்பேற்று அவர் மக்களவை எதிர்கட்சித் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்தி கவிஞராகவும் பரவலாக அறியப்பட்ட வாஜ்பேயி இறுதி வரை திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்தார். அவருக்கு நமிதா எனும் வளர்ப்பு மகள் உள்ளார்.
2015ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது அவருக்கு வழங்கப்பட்டது.

கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் வெள்ளச் சூழ்நிலை மோசமடைந்து வருகிறது. புதன்கிழமை ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து மாநிலத்தில் வெள்ளத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் உள்ள 35 அணைகள் திறக்கப்பட்டு வெள்ள நீர் வெளியேற்றப்படுகிறது. 12 மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முல்லைப்பெரியார் அணை அதன் முழு கொள்ளளவான 142 அடியை எட்டியுள்ளது என கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.
இது கொச்சி விமான நிலையமா? பெருக்கெடுக்கும் ஆறா? பதறவைக்கும் காட்சி
எடப்பாடிக்கு பினராயி கடிதம்
இதனிடையே முல்லை பெரியாறு நீர்ப்பிடிப்புப் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்துவரும் நிலையில், அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும் என்றும், அணையின் நீர் மட்டத்தை 139 அடியில் பராமரிக்கவேண்டும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வேண்டுகோள் விடுத்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
ஆகஸ்டு 18ஆம் தேதி வரை கொச்சி விமான நிலையம் மூடப்படும் என்றும் கேரள முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது.
கேரளா
முல்லைப்பெரியார் அணையின் வெள்ளநீர் கீழே உள்ள இடுக்கி அணைக்கு வந்து, அங்கிருந்து பெரியார் நதி பாயும் செருதோனிக்கு வந்துசேரும் என்பதால் நதிக்கு அருகில் இருப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு வார காலமாக கனமழை பெய்யும் கேரளாவில் இதுவரை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு 42 பேர் பலியாகியுள்ளனர் என்றும், சுமார் ஒரு லட்சம் மக்கள் வீடுகளை இழந்து வெள்ள நிவராண முகாம்களில் தங்கியுள்ளனர் என்றும் அரசாங்க தரவுகள் கூறுகின்றன.
கேராளாவில் 44 நதிகள் உள்ளன. இதில் பெரியார் நதி 244கிலோமீட்டர் பாய்ந்து செல்லும் நீண்ட நதி. மழைக்காலங்களில் இந்த நதியின் வெள்ள நீர் இறுதியாக வந்துசேரும் இடம் இடுக்கி மாவட்டம் ஆகும். தற்போது அங்குள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முல்லைப்பெரியார் அணையின் நீர் மட்டம் உயர்வு,மக்கள் வெளியேற்றம்படத்தின் காப்புரிமைFACEBOOK
முல்லைப் பெரியார் அணையின் நீர் மட்டம் உயந்ததால், புதன் கிழமை அதிகாலை வெறும் நான்கு மணிநேரத்தில் ஐந்து கிராமங்களில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டதாக கேரள மாநில நீர் மேலாண்மை குழுவின் சிறப்பு அதிகாரி ஜேம்ஸ் வில்சன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
''முல்லைப் பெரியார் அணையில் இருந்து இடுக்கி அணைக்கு வெள்ள நீர் செல்லும் வழியில் சுமார் 75,000 மக்கள் குடியிருக்கின்றனர். வெறும் நான்கு மணி நேரத்தில் அவர்களை வெளியேற்றி, பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய காட்டாயம் நேர்ந்தது. தற்போது கேரளா சந்தித்து வரும் வெள்ளம் 1961ல் நடந்ததை விடவும் கோரமானது. 1924ல் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை ஒத்தது.'' என்று ஜேம்ஸ் வில்சன் தெரிவித்தார்.
கேரளா
இன்று மதியம் ஒரு மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 142 அடியாக இருந்ததாகவும், நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் ஆகியன நொடிக்கு முறையே 30,056 கன அடி மற்றும் 2,178 கன அடியாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இச்சூழலில், கொச்சி விமான நிலையமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
35 அணைகளில் நீர் திறப்பு
"கேரளத்தில் உள்ள 35 அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுகின்றன. மாநிலத்தில் பல மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. எர்ணாகுளம், இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கன்னூர், காசர்கோடு, திருச்சூர், கோட்டயம், ஆலப்புழா, பத்தனம்திட்டா மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது" என்று கேரள முதல்வர் அலுவலகம் டிவிட்டரில் பதிவிட்டுள்ளது.
எர்ணாகுளம் மெட்ரோ சேவை பாதிப்பு
கேரள வெள்ளச் சூழ்நிலையில் இதுவரை பாதுகாப்பான பகுதியாக கருதப்பட்ட எர்ணாகுளம் பகுதியிலும் வெள்ளம் சூழத் தொடங்கியுள்ளது. மெட்ரோ ரயில் பாதை மேல் மட்டத்திலேயே இருந்தாலும், மெட்ரோ ரயில் நிலையங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் இந்த சேவையை மக்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார் பிபிசி தமிழ் செய்தியாளர் பிரமிளா கிருஷ்ணன்.
ஒரே நாளில் 25 பேர் பலி
கேரளாவில் கனமழை மற்றும் நிலச்சரிவுக்கு இன்று புதன்கிழமை மட்டும் 25 பேர் பலியாகியுள்ளனர்.மலப்புரம் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களில் இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் 14 பேர்.
இறந்தவர்களில் மற்றவர்கள் கோழிக்கோடு, பத்தனம் திட்டா, இடுக்கி, ஆலப்புழா, கொச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள். கனமழை காரணமாக கொச்சி விமான நிலையம் 3 நாள்களுக்கு மூடப்பட்டுள்ளது.
மீட்பு விமானம், ராணுவம் வேண்டும்: மத்திய அரசுக்கு கோரிக்கை
கூடுதல் ராணுவப் படையினர் மற்றும் பேரிடர் மீட்புப் படையினரை கேரளாவுக்கு அனுப்பவேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உபகரணங்களை அனுப்ப சி-17 ரக விமானங்கள் தேவை என்றும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கருணாநிதியின் தனிச்சிறப்புகள், அணுகுமுறை, அரசியலில் அவர் ஆற்றிய பங்கு உள்ளிட்டவை குறித்து மூத்த ஊடகவியலாளரான 'தி இந்து' குழுமத்தின் சேர்மன் என்.ராம் பிபிசி தமிழிடம் உரையாடியது முதல் பாகத்தில் இருக்கிறது. இது அவரது பேட்டியின் இரண்டாம் பாகம்.
கேள்விஇலங்கை தமிழர்கள் - விடுதலை புலிகள் மீதான கருணாநிதியின் நிலைப்பாடு குறித்த உங்களின் பார்வை என்ன?
என். ராம்: ''விடுதலை புலிகள் எப்போதுமே கருணாநிதியைவிட எம்.ஜி.ஆர் ஆட்சியை விரும்பியது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. டெலோ தலைவர் சிறீ சபாரத்தினம் கொலை செய்யப்பட்டதிலிருந்து அவருக்கு விடுதலை புலிகள் மீதிருந்த மரியாதை தகர்ந்தது .
ராஜிவ் காந்தியை விடுதலை புலிகள் கொன்றது மன்னிக்க முடியாதது என ஒரு பேட்டியில் கூட கூறியிருந்தார் கருணாநிதி. அவர் முதல்வராக இருந்தபோது ஆக்கப்பூர்வமாகவே செயல்பட்டார்.
இலங்கை இறுதிக்கட்ட போரின்போது கூட அவரால் முடிந்த அளவு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்தார். அப்போது கூட அவர் விடுதலை புலிகளை நேரடியாக ஆதரிக்கவில்லை. இறுதிக்கட்ட போருக்கு பிறகு கருணாநிதி மீதே வசவுகள் விழுந்தன''.
''இலங்கை விஷயத்தை பொருத்தவரையில், அவருடன் நான் பலமுறை பேசியிருக்கிறேன். அதனால்தான் சொல்கிறேன் அவர் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையை கொண்டவர். அவர் வெளியில் ஈழத்துக்கு தீவிர ஆதரவு தருவதுபோல சொல்லி வந்தாலும் அவருடைய நிலை என்னவெனில், இலங்கைக்குள் தமிழர்கள் தங்களது அரசியல் உரிமைகளைப் பெற வேண்டும். தங்களின் வாழ்க்கையை அவர்களே தீர்மானித்துக் கொள்ளும் நிலை உருவாக வேண்டும். வேறு வழியில்லையென்றால், ஈழம் மலர வேண்டும் என்பதே அவரது எண்ணமாக இருந்தது. சிலர் பிடிவாதவே தமிழ் ஈழம் மட்டுமே வேண்டும் எனச் சொல்வது போன்றதோர் நிலை எடுப்பவராக அவர் இருந்ததில்லை.''
"இலங்கையில் தமிழர்களுக்கு ஒரு சுயாட்சி மேற்கொள்ளும் வாய்ப்பு அமைய வேண்டும் என்பதே அவரது உண்மையான கோரிக்கையாக இருந்தது. ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை என தெரியும்போது தமிழீழம் தான் ஒரே தீர்வு என்ற வெளிப்படையான நிலையை எடுக்கும்போது அவர் பிடிவாதமாகவோ திடமாகவோ அம்முடிவை எடுக்கவில்லை என்பதை நான் நன்றாகவே அறிவேன். அவர் விடுதலை புலிகளின் அட்டூழியங்களை ஆதரிக்கவில்லை".
''ஒருமுறை நான் அவரிடம் பேசும்போது, 'ஒரு முட்டாள்தனமான தவறு, குற்றத்தை விட மோசமானது' என ஒருவரின் மேற்கோளை காட்டி ராஜிவ் காந்தி கொலை குறித்து சொல்லிக்கொண்டிருந்தேன். விடுதலை புலிகளின் முட்டாள்தனமான தவறுகள் குறித்து நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். ஒன்று, இந்திய அமைதி காப்புப் படையுடன் விடுதலை புலிகள் வெறித்தனமாக போர் நடத்தியது. இரண்டு, ராஜீவ் காந்தி படுகொலையை கட்டாயமாக பிரபாகரனே திட்டமிட்டது. அது ஒரு மிகப்பெரிய குற்றம். மேலும் முட்டாள்தனமான தவறு" என்றேன்.
''மூன்றாவதாக, ராஜபக்சவைத் தேர்ந்தெடுத்தது என்றேன்''. எப்படி? என கேட்டார்.
மகிந்த ராஜபக்சபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionமகிந்த ராஜபக்ச
''ரணில் விக்ரமசிங்க Vs ராஜபக்சே மோதிய அந்த அதிபர் தேர்தல் கடும் போட்டி நிறைந்ததாக இருந்திருக்கும். ஆனால் தேர்தலை புறக்கணிக்கச் சொல்லி தமிழர்களிடம் கூறியது விடுதலை புலிகள். இதனால் கணிசமாக ரணிலுக்கு கிடைக்க வேண்டிய ஆதரவு வீணாய்ப்போனது என்றேன்.''
''அவர்கள் இன்னொரு தவறு செய்தார்கள் அது என்ன தெரியுமா?'' என்று கருணாநிதி என்னிடம் கேட்டார்.
''சிறீ சபாரத்தினம் என்னுடைய சகோதரர் மாதிரியானவர். அவரை கைது செய்து கொல்லப்போகிறார்கள் எனக் கேள்விப்பட்டேன். அதைச் செய்யக்கூடாது என நான் சொல்வதாய் பிரபாகரனிடம் சொல்லுங்கள் என பேபி சுப்ரமணியத்திடம் பேசினேன். ஆனால் சபாரத்தினத்தை சித்திரவதை செய்து படுகொலை செய்தனர். இதனால் விடுதலைபுலிகள் மீது பெரும் ஏமாற்றம் உண்டானது.'' என்று சொல்லி கருணாநிதி என்னிடம் கவலைப்பட்டார்.
''ஆகவே கருணாநிதிக்கு கண்மூடித்தனமான விடுதலை புலிகள் ஆதரவு நிலை இருந்ததில்லை. அதே நேரத்தில் விடுதலை புலிகள் மற்றும் ஈழத் தமிழர்கள் குறித்து அவர் குழப்பிக்கொள்ளவில்லை.''
என்.ராம்
Image captionஎன். ராம்
''ஈழத்தமிழர் நலன், உரிமைகள் மற்றும் அவர்களது அரசியல் உரிமைகள், மனித உரிமைகள் ஆகியவற்றை காப்பதுதான் கருணாநிதியின் நோக்கம்''.
''ஈழத்தமிழர்கள் குறித்து நாங்கள்தான் ஒரே பிரதிநிதிகள் என விடுதலை புலிகள் எடுத்த நிலையை அவர் ஒப்புக்கொண்டதாக எனக்குத் தெரியவில்லை.''
''இலங்கையில் இறுதிக் கட்ட போரில் யாரும் விடுதலை புலிகளையும் பிரபாகரனையும் காப்பாற்ற முடியாது என்பது எனக்குத் தெரியும். ஏனெனில், பிரபாகரன் அசட்டையாக ஓர் நிலையை எடுத்துவிட்டார்.''
''அந்த நேரத்தில் பிரபாகரனையும் புலிகளையும் உலகில் யாருமே காப்பாற்றியிருக்க முடியாது என்பதே உண்மை. அந்நேரத்தில் இந்தியா தலையிடும் என பிரபாகரனுக்கு யாரோ நம்பிக்கை அளித்ததாக கேள்விப்பட்டோம். ஆனால் ஆதாரமில்லை. இந்த நிலையில், திமுகவால் மட்டும் காப்பாற்றியிருக்க முடியுமா என்ற கேள்வியே தேவையற்றது.''

21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் திமுகவின் தலைவர் கருணாநிதியின் உடல் மெரினா கடற்கரையில் அண்ணா சமாதிக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டது.

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி சென்னையில் செவ்வாய்க்கிழமை, மாலை 6.10 மணியளவில் காலமானார். பொதுமக்கள் மற்றும் தலைவர்களின் அஞ்சலிக்கு அவரது உடல் புதன்கிழமை அதிகாலையில் ராஜாஜி அரங்கத்துக்கு கொண்டு வரப்பட்டது.

பிற்பகல் 3.50: திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் ராஜாஜி அரங்கிலிருந்து தொடங்கியது.

(க.கிஷாந்தன்)
மறைந்த தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் தி.மு.கவின் தலைவர் கருணாநிதியின் உடலுக்கு இலங்கை அரசின் சார்பாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர் இராதாகிருஷ்ணன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.திலகராஜ், வடிவேல் சுரேஷ், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் 08.08.2018 அன்று நேரில் அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடலுக்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர், திரைத்துறையினர் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்தவகையில் இலங்கையிலிருந்து சென்ற அமைச்சர்களான மனோ கணேசன், இராதாகிருஷ்ணன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எம்.திலகராஜ், வடிவேல் சுரேஷ் ஆகியோர் நேரில் சென்று கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதோடு, இலங்கை பிரதமர் ரணில் விக்கரமசிங்க அனுப்பிய இரங்கல் செய்தியையும் கருணாநிதியின் மகளான கனிமொழியிடம் வழங்கி அனுதாபங்களை தெரிவித்தனர்.



திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி சென்னையில் செவ்வாய்க்கிழமை, மாலை 6.10 மணியளவில் காலமானார். பொதுமக்கள் மற்றும் தலைவர்களின் அஞ்சலிக்கு அவரது உடல் புதன்கிழமை அதிகாலையில் ராjஜாஜி அரங்கத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.