Showing posts with label Northern. Show all posts


இலங்கை தமிழரசு கட்சி தலைவர் தெரிவில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் @ImShritharan வெற்றி பெற்றுள்ளார் அவருக்கு எமது வாழ்த்துக்கள்..

S சிறிதரன் - 184
MA  சுமந்திரன் 137 வாக்குகளையும் பெற்றுள்ளனர்


 இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் தெரிவில் வெற்று பெற்று புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனுடன் தான் ஒன்றாக சேர்ந்து பயணிக்கவுள்ளதாக சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார்.


திருகோணமலையில் இன்றைய தினம் (21) இடம்பெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் தெரிவின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 


சிறீதரனுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதுடன் தொடர்ந்தும் ஒற்றுமையாகப் பயணிப்போம் இன்றைய தினம் எமது தமிழரசுக் கட்சி உட்கட்சி ஜனநாயகத்தை நாட்டிற்கும் சர்வதேசத்திற்கும் முன்மாதிரியாக நிகழ்த்திக் காட்டி இருக்கின்றது.


இதில் வெற்றி பெற்ற சக வேட்பாளர் மற்றும் எனது நண்பன் சிறீதரனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என தெரிவித்தார்.



 தொடர்கதையாகும் ஆக்கிரமிப்புக்கள் ❤️💛 புதன் கால மாணவர் அரங்கு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் வரும் 17.01.2024 (புதன்கிழமை), நண்பகல் 01.00 மணிக்கு, புதன் கால மாணவர் அரங்கு - கலைப்பீட பரீட்சை மண்டபத்தில் நடைபெறவுள்ளது


 இலங்கை பாராளுமன்ற உறுப்பினரும்,தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் சட்டத்தரணி திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் @GGPonnambalam அவர்களுக்கு #50ஆவது பிறந்தநாள்

 


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் உள்ள RIO ஐஸ்கிரீம் விற்பனை நிலையத்திற்கு விஜயம் செய்தார்


 


வடமாகாண வர்த்தகர்களின் பிரச்சினைகளுக்கு அடுத்த இரண்டு மாதங்களில் தீர்வு!
வடமாகாண வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எதிர்வரும் இரண்டு மாதங்களில் தீர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் அதிகாரிகள் எதிர்வரும் 02 வாரங்களில் வடக்கிற்கு விஜயம் செய்து இவ்விடயம் தொடர்பில் ஆராயவுள்ளதாகவும், வடமாகாண வர்த்தக சமூகத்தினரின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு செயலூக்கமான நிறுவனமொன்றை ஸ்தாபிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
யாழ்.மாவட்ட தொழில்துறையினர், மீனவர்கள் மற்றும் விவசாயிகளுடன் யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று (06) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வடமாகாணத்தைச் சேர்ந்த தொழில்துறையினர், மீனவ சமூகம் மற்றும் விவசாயிகள் உள்ளடங்கிய சுமார் 300 பேர் கொண்ட குழு இந்நிகழ்வில் கலந்துகொண்டதுடன், தமது தொழில்துறை தொடர்பான பிரச்சினைகள் மற்றும் புதிய முன்மொழிவுகளை ஜனாதிபதியிடம் முன்வைத்தனர்.
அந்த அனைத்து விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சில பிரச்சினைகளுக்கு அதே நேரத்தில் தீர்வுகளை வழங்கவும் நடவடிக்கை எடுத்தார்.
வடமாகாணத்திற்கு கைத்தொழில் வலயமொன்றை வழங்குமாறு கைத்தொழில்துறையினர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதுடன், அதற்குத் தேவையான காணியை இனங்காணுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
அத்துடன், மாகாண வர்த்தக ஊக்குவிப்பு நிலையமொன்றை வடமாகாணத்திற்கு விரைவாக வழங்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
வடமாகாணம், தேசிய பொருளாதாரத்திற்கு வினைத்திறனாக பங்களிப்பதற்கு தொழில்துறைகளை அபிவிருத்தி செய்வது இன்றியமையாதது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்க்குமாறு அதிகாரிகளுக்கு மேலும் அறிவுறுத்தினார்.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் யாழ்.பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்றும் இன்று (06) யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ். ஸ்ரீ சற்குணராஜா உட்பட பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் உள்ளிட்ட கல்விசார் ஊழியர்கள் இதில் கலந்துகொண்டதுடன், யாழ்.பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திக்கான திட்டமும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
நவீன தொழில்நுட்பத்துடன் பல்கலைக்கழக துறையை அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பல்கலைக்கழக மாணவர்களின் ஆங்கில மொழி அறிவை மேம்படுத்துவதற்கு விசேட கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
அதற்காக தற்போதுள்ள மனித வளப் பற்றாக்குறையைத் தீர்க்க தொலைக் கல்வி முறைகளைப் பயன்படுத்துவதற்கான இயலுமையையும், அதற்காக பல்கலைக்கழக பேராசிரியர்களாக பணியாற்றி ஓய்வுபெற்ற புலம்பெயர் உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதற்கான திறனையும் ஜனாதிபதி விளக்கினார். அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க ஏற்பாடு செய்ய முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
மேலும், இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களுடன் விரிவுரையாளர் பரிமாற்ற நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் சுட்டிக்காட்டினார்.
வெளிநாட்டு மாணவர்களையும் கவரக்கூடிய வகையில் இலங்கையின் பல்கலைக்கழகக் கல்வியின் தரத்தை உயர்த்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் புதிய பல்கலைக்கழகங்கள் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் எதிர்காலத்தில் இலங்கைப் பல்கலைக்கழகக் கட்டமைப்பில் பாரிய மாற்றம் ஏற்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க, யாழ்.மாவட்ட செயலாளர் எஸ். சிவபாலசுந்தரன் ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய, ஜனாதிபதியின் சமூக அலுவல்கள் பணிப்பாளர் நாயகம் ரஜித் கீர்த்தி தென்னகோன் மற்றும் வவுனியா பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் த.மங்களேஷ்வரன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 


டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த யாழ். பல்கலைக்கழக மாணவியின் மரணம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பணிப்புரை விடுத்துள்ளார்.


டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த யாழ்.பல்கலைக்கழக மாணவியின் இறுதிக் கிரியைகள் மாவிட்டபுரம் சாயோடையிலுள்ள அன்னாரது இல்லத்தில் நேற்று(25) நடைபெற்றன.


யாழ்.பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்கும் 25 வயதான மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


மாணவியின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.


காய்ச்சலினால் கடந்த 19 ஆம் திகதி யாழ்.தெல்லிப்பழை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மாணவி, கடந்த 22 ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


அதனையடுத்து, கடந்த 23 ஆம் திகதி இரவு 11 மணிக்கு மாணவி உயிரிழந்ததாக யாழ்.போதனா வைத்தியசாலையின் ​பேச்சாளரொருவர் நியூஸ்பெஸ்ட்டுக்கு கூறினார்.


இதனிடையே, வாந்தியைக் கட்டுப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட மருந்தினால் ஏற்பட்ட ஒவ்வாமையே உயிரிழப்பிற்கான காரணமாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக இது தொடர்பில் வினவிய போது அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


இந்த நிலையில் பல்கலைக்கழக மாணவியின் மரணம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன யாழ்.போதனா வைத்தியசாலைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்

 


முல்லைத்தீவில் இடைவிடாது தொடரும் மழை, 1126 குடும்பங்களை சேர்ந்த 3463 பேர் பாதிப்பு, 68 குடும்பங்களை சேர்ந்த 222 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பு


 ( வி.ரி. சகாதேவராஜா)


வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்று (18) திங்கட்கிழமை இரண்டாம் கட்ட கண்புரை சத்திர சிகிச்சை ஆரம்பமாகிறது.

கடந்த  11ஆம் திகதி அன்று ஆரம்பமான 1200 சத்திரசிகிச்சை பேருக்கான கண் முகாமில் 600 பேருக்கு சத்திர சிகிச்சை நடைபெற்று நிறைவடைந்துள்ளது. 

இவ்வாரத்தில் 650 பேருக்கு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
 3 அறுவை சிகிச்சை நிபுணர்கள் வியாழக்கிழமைக்குள் 650 அறுவை சிகிச்சைகளை முடித்துள்ளனர்.

 நோயாளிகள் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.

இன்று  டிசம்பர் 18 திங்கள் முதல் தொடர, சென்னையில் இருந்து 3 அறுவை சிகிச்சை நிபுணர்கள் வருகிறார்கள். 

இந்த முகாம் மலேசியாவைச் சேர்ந்த அலகா மற்றும் ஆனந்தா அறக்கட்டளைகளால் அசிஸ்ட் ஆர்ஆர் மூலம் முழுமையாக நிதியளிக்கப்பட்டு, அசிஸ்ட் ஆர்ஆர் (யுகே & எஸ்எல்) மூலம் ஒருங்கிணைக்கப்படுகிறது.

நோயாளிகளுக்கு உணவு மற்றும் போக்குவரத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன.

அசிஸ்ட் ஆர்ஆர் (யுகே & எஸ்எல்) இலங்கை இணைப்பாளர் எந்திரி ஹென்றி அமல்ராஜ் கூறுகையில்..

 இரண்டு கண்களும் பார்வையற்ற சில நோயாளிகளுக்கு நாங்கள் உதவி செய்துள்ளோம், அவர்கள் மீண்டும் உலகைப் பார்க்க முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். தாராளமாக நன்கொடை வழங்கிய அலகா மற்றும் ஆனந்தா அறக்கட்டளைகளுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள். 3 சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கும் (சிலாபம் DGH-ஐச் சேர்ந்த வைத்தியர் கசுன் குணவர்தன, வவுனியா DGH-ஐச் சேர்ந்த Dr. P. கிரிதரன் மற்றும் முல்லைத்தீவு DGH-ஐச் சேர்ந்த Dr. Nizma Razick) மற்றும் அவர்களின் குழுவினருக்கும் அவர்களின் தன்னலமற்ற சேவைகளுக்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அடுத்த வாரம் இம்முகாமின் நிறைவில் வவுனியாவில் காத்திருப்போர் பட்டியலை நீக்குவோம் என நம்புகிறோம்.என்றார்.

 


யாழ்ப்பாணம் அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கரையோரப் பிரதேசங்களை வனவளத்திணைக்களம் என்ற பெயரில் அபகரிப்பதற்கு எதிராக

மக்களோடு இணைந்த இன்று போராட்டம்.

 


வடபுல முஸ்லிம் அரசியலின் அடையாளமும் ஆணிவேரும்...

மர்ஹூம் நூர்தீன் மசூர்


-அஹமட் கபீர்-


வட மாகாண மக்களின் அரசியல் பிரதிநிதிகளில் தனக்கென உள்ள தனித்துவமான பண்புகளின் மூலமாகவும் சமூக உணர்வும் நல்லிணக்கமும் தூர நோக்கும் நிறைந்த செயற்பாடுகளின் மூலமாக பிரதான இடத்தைப் பிடித்து மறைந்தவர் மர்ஹூம் நூர்தீன் மசூர் என்றால் மிகையாகாது 


அன்னார்,மறைந்து இன்று 13 வருடங்கள் கடந்துவிட்டாலும் (2010,12,02) அவரது நற்பண்புகளும் குணாதிசயங்களும் வரலாற்றில் அவரை தடம் பதித்திருக்கிறது. பாகுபாடின்றி அனைவரோடும் புன்முறுவலுடனும், தயாள மனதுடனும் பழகிய இவர்,காலப்போக்கில் மக்கள் மனங்களை வென்ற தலைவனாகத் தெரிவாகும் அளவுக்கு இங்கிதங்களால் தன்னை உயர்த்தியவர். அரசியல் பிரவேசத்துக்கு முன்னரும் வன்னிப்பிரதேச மக்கள் இவரது மனோபாவங்களால் தனித்துவமான உயரிய பண்புகளால் கவரப்பட்டனர்.


இவரது தகப்பனாரான நூர்தீன்பிரதேசத்தின் பிரபலமிக்க சட்டத்தரணியாகவும், செல்வந்தராகவும் திகழ்ந்தவர. நிறைவான பொருளாதார பின்புலம் மற்றும் செல்வாக்குள்ள குடும்பத்தில் வாரிசாக பிறந்தாலும், சாதாரண மக்களதும், வறிய நிலையிலுள்ளவர்களதும் யுத்தத்தின் கோரபிடியினால் அகதிகளாக்கப்பட்டு  அல்லல் பட்ட மக்களது வாழ்வாதாரத்தைப் பற்றியே சிந்தித்த பெருந்தகை மர்ஹூம் நூர்தீன் மசூர்.


இவ்வாறான மனிதாபிமான தூர நோக்கானசிந்தனைகள்தான் அவரை அரசியலுக்குள் நுழைத்தது. ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரஃபுடன் பயணிப்பதுதான்,தான்சார்ந்த வன்னி மக்களுக்கும் பிரயோசனமளிக்கும் என உணர்ந்து 2000 மாம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டினார்.ஆனால், அஷ்ரஃபுடன் பயணிக்கும் சந்தர்ப்பத்தை வல்ல நாயன் அவருக்கு வழங்கவில்லை. அஷ்ரஃபின் இழப்பால் ஏற்பட்ட முஸ்லிம் சமூக அரசியல் இடைவௌியை நிரப்பும் நல்ல நோக்குடன், இருந்த மர்ஹும் நூர்தீன் மசூர்,தொடர்ந்தும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் பயணித்து மக்கள் பணியை முன்னெடுத்தவர்.


இனநல்லிணக்கப் பிரதியமைச்சராகப் பதவியேற்ற இவர்,வடக்கில் வேறுபட்டிருந்த தமிழ், முஸ்லிம் உறவுகளை ஒன்றிணைத்து நல்ல நாகரீகவாதியாகத் திகழ்ந்தார்.பின்னர் 2002 முதல் 2004 வரை வன்னிப்புனர்வாழ்வு அமைச்சராகப் பதவியேற்ற பின்னர்தான், வடபுல அகதிகளின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு விடிவுகள் கிட்டத் தொடங்கின.


அப்பாவிச் சமூகமொன்று ஆயுதமுனையில் அகதிகளாக்கப்பட்ட துயரம் ஆயுள்வரைக்கும் இவரை ஆட்கொண்டிருந்தது.இந்நிலையை ஒழிக்கவென ஆயுத அமைப்புடன் ஜனநாயக வடிவில் முயற்சிகள் மேற்கொண்டதுடன், சர்வதேசம் வரை வடபுலத்து முஸ்லிம்களின் பிரச்சினைகளை அம்பலப்படுத்தினார். வௌிநாட்டு இராஜதந்திரிகள் உள்ளிட்ட சர்வதேச உறவுகளூடாக ஒரு தொடர்பாடலை ஏற்படுத்தியதால்தான்,வடபுல முஸ்லிம்களின்  நியாயங்கள் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்தன.


மீன்பிடி, மீள் குடியேற்றம், கிராமிய கைத்தொழில்களூடாக வன்னி மக்களின் பொருளாதாரப் புரட்சிக்கு அத்திவாரமிட்ட ஆளுமை மர்ஹுிம் நூர்தீன் மசூர். தனது உழைப்பின் அயராத முயற்சியால், செல்வாக்கின்  உச்சத்துக்குச் சென்ற மர்ஹூம் நூர்தீன் மசூருக்கு அவரது மண்ணிலிருந்தே பொறாமையாளர்கள் பெருக்கெடுத்தனர். பதவி ஆசைகளின் பாரிய எதிர்பார்ப்பிலிருந்த சிலர், இவரது பதவியைக் குறிவைத்துச் செயற்பட்ட காலத்தை வன்னி மக்கள் இன்னும் மறப்பதற்கில்லை. இவ்வாறனவர்களை மறுகணமே மறந்துவிடுவதுதான், மர்ஹூம் நூர்தீன் மசூரின் மானிடப்பண்பாக இருந்தது.


எதுவானாலும்,சொந்த மாவட்டத்தில் முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் ஆவலில் செயற்பட்டு, இன்னும் ஒரு பிரதிநிதியும் வெல்லுமளவுக்கு வியூகம் வகுத்த பெருமைக்குரியவர். இவரின் இந்த முயற்சிக்கு அன்று கட்சியின் உயர்பீடத்தில் உச்ச எதிர்ப்பு வௌியிடப்பட்டது. அனைத்தையும் அன்பு, அமைதியால் சாதித்த ஒரு சாத்வீகவாதி மர்ஹூம் நூர்தீன் மசூர்.


ஆனால், கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்களால் கிடைத்த நற்பெயரை இவர், ஒருபோதும் அரசியல் மூலதனமாக்கியதில்லை. நன்றி,நல்லுணர்வுதான் இவரது அரசியல் முதலீடுகளாக இருந்தன.  இவ்வுலகை விட்டுப் பிரியும் நியதிக்குள்,நாம் எல்லோரும் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம்.இந்த நிர்ப்பந்தம் அவரது தவணைக்காலத்தையும் அழைத்து வந்தது. இதனால்,"தவணை வந்தால் முற்படுத்தவோ அல்லது பிற்படுத்தவோ மாட்டோம்" என்ற இறைமறைக்கு ஏற்ப, அன்னார் எம்மை விட்டுப்பிரிந்தார்.


இன்றுள்ள அரசியல்வாதிகளுக்கு மர்ஹூம் நூர்தீன் மசூரின் முன்மாதிரிகள் மிகப்பொருத்தமானது.மாற்று சமூகங்களையும் சகோதரர்களாக அணுகி, பவ்வியமாக பழகும் அவரது பக்குவம்தான் வன்னிச் சமூகத்துக்கு இன்று வரைக்கும் வழிகாட்டுவதாக உள்ளது. எல்லாம்வல்ல இறைவன்,அன்னாருக்கு தகுந்த சன்மானம் வழங்கி அவரது ஆத்மாவைப் பொருந்திக் கொள்ளப் பிரார்த்திப்போம்.

இ துவே,அவருக்கு நாம் செய்யும் கைங்கர்யமாகும்.

மரணித்தாலும் மக்கள் மனங்களில் நிலைத்து நிற்கும் ஒரு உன்னத தலைவன் மர்ஹூம் நூர்தீன் மசூர் அவரது பண்புகளாலும் அழகிய முன்மாதிரியான நிலைபெறான செயற்பாடுகளின் மூலமாகவும் இறுதிவரை அவர் நாமம் வன்னி அரசியல்  பரப்பிலும் தேசியத்திலும் ஒழித்து கொண்டே இருக்கும்..

 


வட்டுக்கோட்டைப் #பொலீசாரின் சித்திரவதைகளால் படுகொலை செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸனின் மரணத்திற்கு நீதி கோரி எதிர்வரும் 03.12.2023 ஞாயிற்றுக் கிழமை பி.ப 3.00 மணிக்குக் கண்டனப் போராட்டம் #வட்டுக்கோட்டைச் #சந்தியில் நடைபெறவுள்ளது!

 


வவுனியாவில் 93 குளங்கள் வான் பாய்வதுடன், 15 குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.


தற்போது தொடர்ச்சியாக பெய்து வருகின்ற மழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் உள்ள குளங்களிற்கான நீர் வரத்து அதிகரித்தமையினால், குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து 93 குளங்கள் வான் பாய்கின்றன. மேலும் பல குளங்கள் வான் பாயும் கட்டத்தை அடைந்துள்ளன.

அத்துடன், வவுனியா மாவட்டத்தில் 15 குளங்கள் சிறு உடைப்பெடுத்த நிலையில் அவை தற்காலிகமாக புனரமைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வான் பாய்வதனை அதிகளவான மக்கள் பார்வையிட்டு வருவதுடன் நீர்நிலைகளில் மீன்பிடித்தும் வருகின்றமையும் அவதானிக்க கூடியதாக இருந்தது


இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.